Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 8th Social Science Books Tamil Medium Road Safety Rules and Regulations

Samcheer Kalvi 8th Social Science Books Tamil Medium Road Safety Rules and Regulations

சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 5 : சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. சிவப்பு விளக்கு ஒளிரும்  போது

  1. பாதை தெளிவாக இருக்கும் போது நீஙகள் தாெடர்ந்து செல்லல்லாம்
  2. நீங்கள் வாகனத்தை நிறுத்தி பச்சை விளக்கு ஒளிரும் வரை காத்திருக்க வேணடும்
  3. உன் நண்பனின் குறுந்தகவலுக்கு விரைவாக பதில் அனுப்பலாம்
  4. செல்லிடப்பேசியில் உரையாடலாம்

விடை : நீங்கள் வாகனத்தை நிறுத்தி பச்சை விளக்கு ஒளிரும் வரை காத்திருக்க வேணடும்

2. பாதசாரிகள் சாலையை கடக்குமிடம் 

  1. எங்குவேண்டுமானாலும்
  2. சமிக்ஞைகளுக்கு அருகில்
  3. வரிகோட்டு பாதையில்
  4. இவற்றில் எதுமில்லை

விடை : வரிகோட்டு பாதையில்

3. சாலை பாதுகாப்பு வாரம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் மாதம்

  1. டிசம்பர்
  2. ஜனவரி
  3. மார்ச்
  4. மே

விடை : ஜனவரி

4. அவசரகாலத்தில், அவசர சிகிச்சை ஊர்தி சேவைக்காக அழைக்க வேண்டிய எண்

  1. 108
  2. 100
  3. 106
  4. 101

விடை : 108

5.  சாலை விபத்துக்களுக்கான காரணங்கள் யாவை?

  1. அதிவேகம்
  2. குடிபோதையில் ஓட்டுதல்
  3. ஓட்டுநர்கள் கவனச்சிதறல்
  4. இவை அனைத்தும்

விடை : இவை அனைத்தும்

6. போக்குவரத்து குறியீடுகளின் முதல் வகை

  1. கட்டாய குறியீடுகள்
  2. எச்சரிக்கை குறியீடுகள்
  3. தகவல் குறியீடுகள்
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை : கட்டாய குறியீடுகள்

7.  சேது பாரதம் திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு

  1. 2014
  2. 2015
  3. 2016
  4. 2017

விடை : 2016

8.  ABS என்பதனை விரிவாக்கம் செய்க

  1. எதிர் நிறுத்தி ஆரம்பம் (Anti Brake Start)
  2. வருடாந்திர அடிப்படை அமைப்பு (Annual Bare System)
  3. பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (Anti-lock Braking System)
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை : பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (Anti-lock Braking System)

9.  வளைவில் முந்துவது

  1. அனுமதிக்கப்படுகிறது
  2. அனுமதியில்லை
  3. கவனத்துடன் அனுமதிக்கப்படுகிறது
  4. நமது விருப்பம்

விடை : அனுமதியில்லை

10.  அவசர சிகிச்சை ஊர்தி வரும்பொழுது

  1. முன்பக்கம் வாகனம் இல்லாத போது கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும்.
  2. முன்னரிமை எதுவும் அளிக்கத் தேவையில்லை.
  3. நமது வாகனத்தினை சாலை ஓரமாக செலுத்தி தடையில்லாமல் கடக்க அனுமதிக்க வேண்டும்.
  4. அவசர சிகிச்சை ஊர்தியின் பின்புறம் மிகுந்த வேகத்துடன் பின் தொடர வேண்டும்.

விடை : நமது வாகனத்தினை சாலை ஓரமாக செலுத்தி தடையில்லாமல் கடக்க அனுமதிக்க வேண்டும்.

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. வாகனம் ஓட்டும் பொழுது எப்போதும் _____________ செல்லும்

விடை : இடது

2. கட்டாயக் குறியீடுகள் _____________ வடிவில் குறிப்பிடப்பட்டிருக்கும்

விடை : வட்ட

3. _____________ வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்துகின்றது

விடை : பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (ABS)

4. அதிவேகம்  _____________  ஆபத்து

விடை : அதிக

5. நான்கு சக்கர வாகனத்தில் _____________ அணிவதும் இருசக்கர வாகனத்தில் _____________ அணிவதும் கட்டாயம் எனச் சட்டம் உள்ளது.

விடை : இருக்கைப் பட்டை, தலைக்கவசம்

III.பொருத்துக

1. மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ்வரிக்கோட்டு பாதை
2. புதிய சிற்றுந்துகளுக்கான ஒரு முறை வரிசாலை பாதுகாப்பு குறித்த சித்திர புத்தகம்
3. பாதசாரிஆறு மாதங்கள்
4. பிரேசிலியா பிரகடனம்15 மாதங்கள்
5. சுவச்ச சேஃபர்பன்னாட்டு மாநாடு

விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – உ, 5 – ஆ

IV. சரியா / தவறா?

1. சாலை விபத்துக்கள் தாெடர்பான பிரச்சனை சாலையில் மட்டுமே உள்ளது.

விடை : தவறு

2. பாதை தடத்தை மாற்றம் முன்பு கண்ணாடியினை பார்க்க வேண்டும்

விடை : சரி

3. ஒளிரும் மஞ்சள் விளக்கு, வேகத்தினை குறைத்தும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்பதை குறிக்கின்றது.

விடை : சரி

4. இரு சக்கர வண்டியில் ஒருவர் மட்டுமே பின் இருக்கையில் அமர அனுமதிக்கப்படுகிறார்கள்.

விடை : சரி

5. சாலைகள் மனிதனின் மிக மோசமான கண்டுபிடிப்புகளில் ஒன்று.

விடை : தவறு

V சரியான கூற்றைத் தேர்ந்தேடு

1. பின்வரும் கூற்று(களில்) சரியல்லாதது எது?

(i) முன்புற வாகனத்திலிருந்து சரியான இடைவெளியில் தாெடரவும்.

(ii) வேக கட்டுப்பாடு அளவினைக் கண்டுபிடிக்க வேண்டும். ஒருபோதும் வேகத்திற்கான எல்லையினை தாண்டக்கூடாது.

(iii) வாகனம் ஓடடும்பொழுது இருக்கை வார்பட்டை அணியத்  தேவையில்லை

(iv) வளைவுகளிலும் திருப்பங்களிலும் வேகத்தினை குறைக்க வேண்டாம்.

  1. i, iii மட்டும்
  2. ii, iv மட்டும்
  3. i, ii மட்டும்
  4. iii, iv மட்டும்

விடை : iii, iv மட்டும்

2. கூற்று : மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது விபத்தகளை ஏற்படுத்துகின்றது

காரணம் : மயக்கம் காரணமாக பார்வை பாதிக்கப்படுகிறது.

  1. கூற்று சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்
  2. கூற்று சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான  விளக்கமல்ல
  3. கூற்று சரி காரணம் தவறு
  4. கூற்று காரணம் இரணடும் தவறு

விடை : கூற்று சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்

3. கூற்று : சாலை குறியீடுகள் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்று

காரணம் : அவைகள் பெரும்பாலும் படங்களான இருக்கின்றன

  1. கூற்று சரி காரணம் தவறு
  2. கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றிற்கான சரியான  விளக்கமம் ஆகும்
  3. கூற்று தவறு காரணம் சரி
  4. கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றிற்கான சரியான  விளக்கமல்ல

விடை : கூற்று சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்

4. பொருந்தாத ஒன்றை கண்டுபிடி

  1. வளைவுகளில் மெதுவாக செல்
  2. வேக கட்டுப்பாடு அளவினைக் கடைபிடி
  3. வாகனம் ஓட்டும்போது செல்லிடப்பேசியை பயன்படுத்து
  4. சாலைகளில் நடப்பதை தவிர்க்கவும்

விடை : வாகனம் ஓட்டும்போது செல்லிடப்பேசியை பயன்படுத்து

5. பின்வரும் குறியீடுகள் எதைக் குறிப்பிடுகின்றன

     
ஒரு வழிப்பாதை இடது புறம்பாதசாரிகள் கடக்குமிடம்ஒலிப்பான்கள் பயன்படத்த தடை
மருத்துவமனைவலதுபக்க வளைவுஆட்கள் வேலை செய்கிறார்கள்

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளின் விடையளி

1. சாலை பாதுகாப்பினை நீவிர் எவ்வாறு உறுதி செய்வாய்?

சாலை விதிகள் கடைபிடிப்பதன் வாயிலாக சாலைப் பாதுகாப்பினை உறுதி செய்வேன்

2. சாலை பாதுகாப்பு நமக்கு ஏன் முக்கியமானது?

சாலை விபத்துகள் படுகாயங்களுக்கும் இறப்பிற்கும் வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல் சமூக மற்றும் பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்துகின்றன. இதனை தவிர்க்க சாலை பாதுகாப்பு நமக்க முக்கியமானது

3. சாலை விபத்துகளின் நேரடி விளைவுகள் என்ன?

  • உயிரிழப்பு
  • படுகாயம்
  • உடமைகளுக்கு சேதம்

4. போக்குவரத்து சமிக்ஞைகளின் விளக்குகளின் படம் வரைந்து அதன்
பொருளைக் குறிப்பிடு

  
நில்கவனிசெல்

5. சாலைப் பாதுகாப்பு குறித்த பிரேசிலியா அறிவிப்பை பற்றிக் குறிப்பு எழுதுக

  • இது ஐ,நா. உலக சுகாதார அமைப்பு இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பிற்கான இரண்டாவது உலகளாவிய உயர்மட்ட மாநாடு ஆகும்
  • சாலை பாதுகாப்பினை மிக முக்கியமானதாக கருதி இந்தியா, பிரேசிலியா பிரகடனத்தில் 2015ஆம் ஆண்ட கையெழுத்திட்டது

6. சாலைப்பாதுகாப்பு வாரம் கடைபிடிப்பதன் நோக்கம் யாது?

சாலை பாதுகாப்பு அமைப்பு, விதிகள் மற்றம் ஒழுங்கு முறைகள் பற்றிய விழிப்புணர்வை வலுப்படுத்த சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகின்றது.

7. ஏதேனும் நான்கு சாலை விதிகளை எழுதுக

  • இருவழிச் சாலையில் இடப்புறம் மட்டுமே ஓட்டுநர் வாகனத்தை செலுத்த வேண்டும்.
  • தடை செய்யப்பட்ட இடங்களான மருத்துவமனை, பள்ளிக்கூடம் போன்றவைகளின் அருகில் ஓட்டுநர்கள் ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது.
  • மருத்துவ ஊர்தி, தீயணைப்பு வாகனங்கள், இராணுவ பாதுகாப்பு வாகனங்கள் போன்றவைகளுக்க வழிவடுவது நமது பொறுப்பாகும்.
  • இரு சக்கர வண்டியின் பின் இருக்கையில் ஒரவர் மட்டுமே அமர அனுமதிக்கப்படுகின்றனர்.

8. மது அருந்துதல் வாகன ஒட்டுதலை எவ்வாறு பாதிக்கின்றது?

  • மது அருந்துவது கவனத்தைக் குறைக்கும் அதன் காரணமாக வரும் மயக்கத்தினால் பார்வை தடைபடுகின்றது.
  • மது அருந்திவிட்ட வாகனம் ஒட்டும்போது விபத்துக்கள் ஏற்படுகிறது.

VII. விரிவான விடையளி

1.  சாலை விபத்துக்களுக்கான காரணங்களை விவரி

ஓட்டுநர்கள்

  • அதிக வேகத்தில் செலுத்துதல்
  • கண்மூடித்தனமாக ஓட்டுதல்
  • விதிகளை மீறுதல்
  • குறியீடுகளை புரிந்து கொள்ள தவறுதல்
  • களைப்பு
  • சோர்வு
  • மது அருந்தல் போன்றவை

பாதசாரிகள்

  • கவனமின்மை
  • கல்வியறிவின்மை
  • தவறான இடங்களில் சாலையை கடப்பது
  • சாலையில் நடப்பது
  • போக்குவரத்த விதிகளை கவனிக்காமல் சாலையின் குறுக்காக செல்லுதல்

பயணிகள்

  • வாகனத்தின் வெளிய உடலின் பகுதிகளை நீட்டுவது
  • ஓட்டுநர்களுடன் பேசுவது
  • படிகட்டுகளின் பயணம் செய்வது
  • ஓடும் பேருந்தில் ஏறுவது, இறங்குவது போன்றவை

வாகனங்கள்

  • தடுத்து நிறுத்தும் கருவி (பிரேக்) மற்றும் வாகன திசை  திருப்பி (ஸ்டியரிங்) பழுதடைவது
  • டயர் வெடித்தல்
  • போதுமான வெளிச்சம் தராத முகப்பு விளக்குகள்
  • அதிகப்படியான மற்றும்  வெளியே நிட்டிக் கொண்டிருக்கும்படி சுமை ஏற்றுதல்

சாலைகளின் தரம்

  • பழுதடைந்த சாலைகள்
  • குழிகளான சாலைகள்
  • நெடுஞ்சாலைகளை இணைக்கும் அரிக்கப்பட்ட கிராமப்புறச் சாலைகள்
  • சட்டத்திற்கு புறம்பான வேகத்தடை மற்றும் திருப்பங்கள்

வானிலை

  • மூடுபனி
  • பனி
  • கனமழை
  • காற்று
  • புயல்
  • ஆலங்கட்டி மழை

2. சாலை விபத்துக்கள் நடக்காமல் இருக்க இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை விளக்குக

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
  • ஒரு பன்முக ஏற்புடைய வியூகம் மூலம் மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான சாலை பொறியியலையும் மேம்பட்ட வாக பாதுகாப்பு தரநிலைகளையும் ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளித்தல், செம்மைபடுத்தப்பட் அவசர சிகிச்சை பராமரிப்பு மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு உருவாக்குதல் ஆகியவற்றியைன மேற்கொள்கிறது.
  • வாகன பாதுகாப்பு தரத்தை உயர்த்துவது கனரக வாகனங்களில் பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பும் இரு சாக்கர வண்டிகளில் நிறத்தக்கருவியும் தெளிவாக தெரியும் பொருட்டு தானியங்கி முகப்பு விளக்கு ஒளிர்விப்பானும் கட்டாயமாக்கபட்டுள்ளது.
  • சாலை விபத்தில் சிக்யியவர்களுக்கு பணமில்லா பரிவர்த்தனை மூலம் சிகிச்சை அளிக்கும் முன்னோட்டத்திட்டம் செயல்படுத்தப்பட்ட வருகிறது.
  • உடனடி விரைவு அவசர சிகிச்சை ஊர்திகள் தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கி.மீ. தொலைவிலும் இந்திய நெடுஞ்சாலை ஆணையத்தால் நிறுத்தப்பட்டிருக்கின்றது.
  • சேது பாரதம் தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பாக மற்றும் தடையற்ற பயணம் செய்ய பாலங்களை கட்டுவதற்கான திட்டம் 2016ல் தொடங்கப்பட்டது
  • வேகக் கட்டுபாட்டுக் கருவிகளை பொருத்துவதை கட்டாயமாக்கியுள்ளது.
  • போக்குவரத்து நெருக்கடியுள்ள சாலைகளில் பெரிய டிஜிட்டல் பலகைகள் வாயிலாக தகவல்கள் அளிக்கப்படுகின்றன

3. சாலை விபத்தக்கள் நடக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய  நடவடிக்கைகள் என்ன?

  • எப்பொழுதும் இடது புறமாக செல்வது
  • வளைவுகளிலும், திருப்பங்களிலும் வேகத்தை குறைத்தல்
  • நான்கு சக்கர வாகனத்தினை ஒட்டும் போது இருக்கை பட்டையும், இரண்டு சக்கர வாகனத்தினை ஒட்டும் போது தலைக்கவசத்தையும் அணிய வேண்டம்
  • வேக வரம்பை ஒருபோதம் மீறக்கூடாது
  • சரியான இடைவெளி விட்டு பின் தொடரவும்
  • வாகனம் நிறத்துவதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனத்தை நிறத்த வேண்டும்
  • சாலை குறியீடுகளைப் பின்பற்றுதல்
  • பாதசாரிகள் கடக்கும் பாதையில் மட்டுமே சாலையை கடக்க வேண்டும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *