Book Back Question and Answers

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 6 4

தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம் இலக்கணம் : அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி கற்கண்டு அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி தேனிசை அடடே, செல்வியா? வா! வா! வா! எப்படி இருக்கிறாய்? செல்வி (கலகலவென நகைத்தவாறே) ஓ! நன்றாக இருக்கிறேன். அத்தை எங்கே? தேனிசை அவர்கள் வேலைக்குச் சென்றிருக்கிறார்கள். (அப்போது தடதட வென அங்கே ஓடி வருகிறான் தேனிசையின் தம்பி மதியழகன்)

Book Back Question and Answers

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 6 3

தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம் துணைப்பாடம் : நேர்மை நிறைந்த தீர்ப்பு இயல் மூன்று துணைப்பாடம் நேர்மை நிறைந்த தீர்ப்பு பல ஆண்டுகளுக்குமுன் தென் பாண்டிய நாட்டை மங்கையர்க்கரசி என்பவர் ஆண்டு வந்தார். அவர், நீதியும் நேர்மையும் மிக்கவராக விளங்கினார். அவர் ஆட்சியில் மக்கள் குறைவின்றி வாழ்ந்து வந்தனர். ஒருநாள், கிராமத் தலைவர் ஒருவர் அரசியிடம் ஒரு வழக்கைக் கொண்டு வந்தார். அவருடன் நான்கு பேர்களும் அரண்மனைக்கு வந்தனர். அரசியை வணங்கிய கிராமத் தலைவர், தம் வழக்கை எடுத்துரைத்தார். “செல்வந்தர் ஒருவர், அரிய சாதனை புரிபவருக்கு நூறு பொற்காசுகள் கொண்ட பொற்கிழி ஒன்றைப் பரிசளிப்பதாக அறிவித்து, அதனைப் பஞ்சாயத்தாரிடம் கொடுத்தார். அந்தப் பொற்கிழியைப் பெறுவதற்கு இவர்கள் நால்வரும் போட்டி போட்டனர். நால்வருடைய அரிய சாதனையைக் கேட்ட எங்கள் ஊர்ப் பஞ்சாயத்தினர், யாருடைய சாதனை சிறந்தது என்று முடிவு கட்ட முடியாமல், பரிசுத் தொகையை நால்வருக்கும் சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கலாம் என முடிவெடுத்தனர்.

Book Back Question and Answers

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 6 2

தமிழ் : பருவம் 2 இயல் 3 : தொழில், வணிகம் உரைநடை : விதைத் திருவிழா இயல் மூன்று உரைநடை விதைத் திருவிழா காலை வழிபாட்டுக் கூட்டத்தில், தலைமையாசிரியர் கூறிய செய்தி, மாணவர்களின் உள்ளத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. காரணம், அருகிலுள்ள மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விதைத் திருவிழாவிற்கு அடுத்த வாரம் அவர்களை அழைத்துச் செல்லப் போகிறார்கள். அன்று முழுவதும் அங்கு நடைபெறும் நிகழ்வுகளைத் தம் நண்பர்களுடன் கண்டு மகிழலாம் அல்லவா! விதைத் திருவிழா தொடர்பான துண்டு விளம்பரத் தாள்களைத் தலைமையாசிரியர் வகுப்பாசிரியர்களிடம் வழங்கினார். நம் பள்ளியிலிருந்து விதைத் திருவிழாவில் மாணவர்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கூறினார். தலைமையாசிரியரிடமிருந்து பெற்ற விளம்பரத் தாள்களை, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கினர். துண்டு விளம்பரத்தாளிலுள்ள செய்திகளைப் படித்துப் பார்க்கச் செய்தனர். மாணவர்கள், விளம்பரத்தைப் படித்துப் புரிந்துகொண்டனர். விதைத் திருவிழாவில் தங்களுடைய பள்ளி சார்பாக என்னென்ன படைப்புகளை வழங்கலாம் எனக் குழுவில் கலந்துரையாடினர். பின்னர், தாங்கள் திரட்டிய படைப்புகளை ஆசிரியரிடம் காண்பித்து அனுமதி பெற்றனர். விதைத் திருவிழாவுக்குச் செல்லும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கினர்.

Book Back Question and Answers

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 5 4

தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம், பண்பாடு இலக்கணம் : இணைப்புச்சொற்கள் கற்கண்டு இணைப்புச்சொற்கள் செழியன் : இளந்தமிழா, நாளை வெளியூர் செல்வதாகக் கூறினாயே? மறந்துவிட்டாயா? உன்னுடன் யாரெல்லாம் வருகிறார்கள்? இளந்தமிழ் : மறக்கவில்லை, செழியா! நாளை நான் மட்டும்தான் செல்வதாக இருக்கிறேன். அதனால், என்னுடன் யாரும் வரவில்லை. செழியன் : அப்படியானால் நீ கவனமாக இருக்கவேண்டும் அல்லவா? இளந்தமிழ் : நான் ஏற்கெனவே சென்ற இடம்தான். ஆதலால், அச்சம் ஒன்றும் இல்லை. செழியன் : அது சரி, இளந்தமிழ். மறுநாளே வந்துவிடுவாயா அல்லது வருவதற்கு நாளாகுமா? இளந்தமிழ் : நான் திரும்பி வருவதற்கு இரண்டு நாளாகும். ஆகையால், தேவையான உடைகளைக் கொண்டு செல்கிறேன்.

Book Back Question and Answers

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 5 3

தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம், பண்பாடு துணைப்பாடம் : கங்கை கொண்ட சோழபுரம் இயல் இரண்டு துணைப்பாடம் கங்கை கொண்ட சோழபுரம் கயலினி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். ஏன்? இந்த விடுமுறை நாள்களை அவள் மகிழ்வுடன் கழிக்கப் போகிறாள் அல்லவா! அதனால்தான். அன்பு தரும் ஆசைப் பாட்டியின் ஊருக்குப் புறப்படத் தயாராகிவிட்டாள். வாருங்கள், குழந்தைகளே! நாமும் அவள் மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்வோம். சிதம்பரத்திலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில்தான் உள்ளது, அந்த ஊர். தன் தாயுடன் பேருந்தில் ஏறிச் சன்னலோரம் அமர்ந்து கொண்ட அவளுக்கு வாயெல்லாம் ஒரே பாட்டுத்தான். ‘ஆறு சட்டம் நூறு பண்ணி

Book Back Question and Answers

Samacheer Kalvi 5th Tamil Books Chapter 5 2

தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம், பண்பாடு உரைநடை : தமிழர்களின் வீரக்கலைகள் இயல் இரண்டு உரைநடை தமிழர்களின் வீரக்கலைகள் தனக்கென்று தனித்த நாகரிகமும் பண்பாடும் உடையது தமிழ் மரபு. தமிழரின் பண்பாட்டுக் கூறுகளும் கூறுகளும் கலைகளும் இலக்கியங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பண்டைத்தமிழன், வாளாண்மையால் பகைவரை வென்றான். தாளாண்மையால் நன்னிலம் ஆக்கினான். வேளாண்மையால் வளம் பெருக்கினான். வீரமும் தீரமும் நிறைந்த விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கினான். தமிழர்க்கென்றே இருக்கும் வீரம் செறிந்த கலைகளை அறியுந்தோறும் வியப்பு மேலிடும்; மனம் மகிழ்ச்சியில் நிறைந்திடும். ஏறுதழுவுதல், சிலம்பாட்டம், இளவட்டக்கல் தூக்குதல், மற்போர் முதலான கலைகள் தமிழர்களின் வீரக்கலைகளாக விளங்குகின்றன. இக்கலைகளுள் இன்றளவும் நடைமுறையில் உள்ள சில விளையாட்டுகளைப் பற்றி அறிந்துகொள்வோம். ஏறுதழுவுதல்

Scroll to Top