Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Nature Bounty
சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 1 அலகு 3 : இயற்கையின் கொடை அலகு 3 இயற்கையின் கொடை கற்றல் நோக்கங்கள்: ❖ இலைகள், பூக்கள், காய்கள், கனிகள் ஆகியவற்றை உற்றுநோக்கல். அடையாளம் காணுதல். ❖ பெயரறிதல், விவரித்தல் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளுதல் செல்வி ஒருநாள் தன் வீட்டருகே உள்ள தோட்டத்திற்குச் சென்றாள். அங்கே ஒரு தக்காளிச் செடியில் அழகான மஞ்சள் நிறப் பூவைக் கண்டாள். உடனே அதனைப் பறிக்க முயன்றாள். அப்போது அங்கு வந்த தேனீ ஒன்று “அது என்னுடைய உணவு விட்டுவிடு” என்றது. வியப்படைந்த செல்வி செடியில் சிவப்பு நிறத் தக்காளியைக் கண்டதும் அதைப் பறிக்க முயன்றாள். அப்போது பச்சைக்கிளி ஒன்று பறந்துவந்து “அது எனக்கான உணவு விட்டுவிடு” என்றது. செல்வி பச்சைக்கிளிக்காகத் தக்காளியை விட்டுவிட்டு. பின் தக்காளிச் செடியின் இலையை வருடினாள். அப்போது அங்கு வந்த வெட்டுக்கிளி “அது எனக்கான உணவு, தயவு செய்து இலையைப் பறிக்காதே” என்றது. தாவரங்கள் அனைவருக்கும் பயன்படுகின்றன என்று அப்போதுதான் செல்விக்குப் புரிந்தது. உடனே “நீதான் எங்கள் அனைவருக்கும் உணவு தருகின்றாய் மிக்க நன்றி” என மகிழ்ச்சியுடன் கூறிக் கொண்டே தக்காளிச் செடிக்குத் தண்ணீர் ஊற்றினாள் செல்வி. இலைகள் […]
