Samacheer Kalvi 4th Tamil Books Chapter 3 7
தமிழ் : பருவம் 3 இயல் 7 : நீதிநெறி விளக்கம் 7. நீதிநெறி விளக்கம் அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார் அவையஞ்சா ஆகுலச் சொல்லும் – […]
Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.
தமிழ் : பருவம் 3 இயல் 7 : நீதிநெறி விளக்கம் 7. நீதிநெறி விளக்கம் அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார் அவையஞ்சா ஆகுலச் சொல்லும் – […]
தமிழ் : பருவம் 3 இயல் 6 : மலையும் எதிரொலியும் 6. மலையும் எதிரொலியும் தந்தையும் மகனும் மலைப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென்று
தமிழ் : பருவம் 3 இயல் 5 : கணினி உலகம் 5. கணினி உலகம் மதி, பூவிழி இருவரும் நல்ல தோழிகள். இருவரும் கோடை விடுமுறைக்கு வெளியூருக்குச்
தமிழ் : பருவம் 3 இயல் 4 : ஆனந்தம் விளையும் பூமியடி 4. ஆனந்தம் விளையும் பூமியடி கும்மியடி பெண்ணே கும்மியடி – சுகம் கோடி விளைந்திடக்
தமிழ் : பருவம் 3 இயல் 3 : காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி 3. காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி காடே அமைதியாய் இருந்தது. வீசிய காற்றில் மரக்கிளைகள் அசைந்தன. இலைகள்
தமிழ் : பருவம் 3 இயல் 2 : மாசில்லாத உலகம் படைப்போம் 2. மாசில்லாத உலகம் படைப்போம் ஆசிரியர் வகுப்பினுள் நுழைந்தார். அவரது கைகளில் ஓர்
தமிழ் : பருவம் 3 இயல் 1 : உலா வரும் செயற்கைக்கோள் 1. உலா வரும் செயற்கைக்கோள் பட்டுக் குழந்தைகள் வாருங்கள் பறவைக் கப்பல் பாருங்கள் விட்டுச்
தமிழ் : பருவம் 2 இயல் 9 : வேலைக்கேற்ற கூலி 9. வேலைக்கேற்ற கூலி அழகாபுரி மன்னர், சிறந்த முறையில் ஆட்சி செய்துவந்தார். அவரது நாட்டில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். மன்னரின் புகழ், அண்டை நாடுகளுக்கும் பரவியது. அண்டை நாடுகளுள் ஒன்றான இரத்தினபுரி மன்னரும் இதனைக் கேள்விப்பட்டார். தம் நாட்டு அமைச்சர்களிடம் இதைப்பற்றி ஆலோசனை நடத்தினார். “நானும் சிறந்த முறையில்தானே ஆட்சி நடத்துகிறேன். ஆனால், என்னை மட்டும் ஏன் யாரும் புகழவில்லை? என்று அமைச்சர்களிடம் வினவினார். அமைச்சர்கள் விடை கூறத் தெரியாமல் விழித்தனர். அவர்களுள் ஒருவர் மட்டும் எழுந்தார். “மன்னா, உங்கள் ஆட்சியில் நம் நாட்டு மக்களுக்கும் எந்தக் குறையும் இல்லை. ஆனால்….” என்று மெல்லிய குரலில் கூறி, நிறுத்தினார் அந்த அமைச்சர். “என்ன ஆனால். சொல்லுங்கள் அமைச்சரே, நான் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவில்லையா? நான் வேறென்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்டான் மன்னன். “நான் சொல்வதைத் தவறாக நினைக்காதீர்கள். அழகாபுரி நாட்டுக்குச் சென்று, ஒருநாள் முழுவதும் அந்த நாட்டு மன்னருடன் நீங்கள் உடனிருக்கவேண்டும். அவர், தம் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமக்களிடமும் எப்படி நடந்து கொள்கின்றார் என்று அறிந்துகொண்டால், நாமும் அவற்றுள் சிலவற்றையாவது பின்பற்றலாம் மன்னா” என்று ஒரே மூச்சில் கூறி முடித்தார் அந்த அமைச்சர். மற்ற அமைச்சர்களும், ஆமாம் மன்னா, இவர் சொல்வதும் நல்ல யோசனைதான். அதுமட்டுமின்றி, அழகாபுரி மன்னர், உங்களிடம் மிகுந்த நட்பு பாராட்டுபவர். ஆகையால், நட்பின் நிமித்தமாக நீங்கள் ஒருநாள் அங்குச் செல்லவேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து என்று கூறினர். “அப்படியா? சரி, சரி. நான் நாளைக்கே புறப்படுகிறேன். எனக்கும் அழகாபுரி மன்னரின் ஆட்சிமுறையை நேரடியாகக் காண்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமல்லவா?” என்று கூறிய இரத்தினபுரி மன்னர், தம் பயணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய கட்டளையிட்டார். நட்பின் நிமித்தமாகத் தம் நாட்டிற்கு வருகை புரிந்த இரத்தினபுரி மன்னரை ஆரத்தழுவி வரவேற்றார் அழகாபுரி மன்னர். இருவரும் தத்தமது நாட்டைப் பற்றிச் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர், “நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள். நான் அரசவைக்குச் சென்று வருகிறேன்” என்று கூறியவாறே எழுந்தார் அழகாபுரி மன்னர். “இருங்கள், மன்னா. நானும் உங்களுடனே அரசவைக்கு வர விரும்புகிறேன்” என்று துள்ளிக் குதித்து எழுந்தார் இரத்தினபுரி மன்னர்.
தமிழ் : பருவம் 2 இயல் 8 : பசுவுக்குக் கிடைத்த நீதி 8. பசுவுக்குக் கிடைத்த நீதி (நாடகம்) முன்கதைச் சுருக்கம் சோழமன்னர்களுள் ஒருவன் மனுநீதி முறைமை தவறாது ஆட்சி புரிவதையே தன் நோக்கமாகக் கொண்டவன். ஆயினும், அவன் ஆட்சிக்காலத்தில் வாயில்லாப் பசுவுக்கு ஏற்பட்டது ஒரு பேரிழப்பு, அதற்குக் காரணமானவன் வேறுயாருமல்லன், அரசனின் மகனே. இப்போது, அரசன் என்ன செய்வான்? தன் மகன் என்று அவனைக்காப்பாற்றுவானா? அல்லது தன்கன்றை இழந்து வாடும் அந்தப் பசுவுக்கு உரிய நீதியை வழங்குவானா? வாருங்கள் தெரிந்துகொள்ள அரங்கத்துக்குள் நுழைவோம். காட்சி – 1 இடம் : அரசவை மண்டபம் காலம் : நண்பகல் உறுப்பினர்கள் : அரசர் மனுநீதிச் சோழர், அமைச்சர் பெருமக்கள் (அவையில் மன்னரும் அமைச்சர் பெருமக்களும் வீற்றிருக்கின்றனர். அப்போது அங்கு வந்த தச்சர் ஒருவர், மன்னரை வணங்கிப் பணிகிறார். இனி….)
தமிழ் : பருவம் 2 இயல் 7 : திருக்குறள் கதைகள் 7. திருக்குறள் கதைகள் பொறுமையும் பொறுப்பும் தாமஸ் ஆல்வா எடிசன் என்பவர், புகழ்பெற்ற அறிவியலறிஞர். இவர், பல முறை தோல்வி கண்டு, பெரும் முயற்சிக்குப் பின்னரே மின் விளக்கைக் கண்டுபிடித்தார். நண்பர்களுக்கும், மற்ற அறிவியலறிஞர்களுக்கும் தம் கண்டுபிடிப்பைச் செய்துகாட்ட எடிசன் விரும்பினார். அதற்காக, நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்து, அனைவரையும் வரவழைத்தார். அவரது ஆய்வகத்தின் மேல்தளத்தில் இதற்கான கூட்டம் நடைபெற்றது. எடிசன் தம் உதவியாளரை அழைத்து மின் விளக்கை மேல் தளத்திற்குக் கொண்டு வரச்சொன்னார். உதவியாளர், அதனைக் கொண்டு வரும்போது, திடீரெனக் கைதவறி விழுந்தது. ஆயினும், சற்றும் மனம் கலங்காத எடிசன், உடனே மற்றொரு மின் விளக்கை உருவாக்கினார். அதனை மீண்டும் அதே உதவியாளரிடமே கொடுத்து மேலே எடுத்து வரச் செய்தார். “மின் விளக்கைக் கீழே போட்டு உடைத்தவரிடம் மீண்டும் அந்த வேலையைக் கொடுக்கிறீர்களே? ‘என்று சிலர் எடிசனிடம் கேட்டனர். அதற்கு எடிசன், உடைந்த பொருளை மீண்டும் உருவாக்க என்னால் முடிந்தது. ஆனால், உதவியாளரின் மனத்தைக் காயப்படுத்திவிட்டால் அதை என்னால் சரிசெய்து கொடுத்துவிட முடியுமா? அதுமட்டுமன்று, மீண்டும் அதே பணியை அவரிடமே கொடுக்கும்போது, தமது பொறுப்பை உணர்ந்து கவனமுடன் பணிபுரிவார். அதனால்தான் அப்படிச் செய்தேன்” என்றார். எடிசனுக்கு வெற்றியைப் பெற்றுத்தந்த பொறுமைக் குணத்தை, அப்போதுதான் மற்றவர்கள் முழுமையாக உணர்ந்து கொண்டனர். குறள் நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப் படும். பொறையுடைமை, குறள்.154