Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Nature Bounty
சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம் 1 அலகு 3 : இயற்கையின் கொடை அலகு 3 இயற்கையின் கொடை கற்றல் நோக்கங்கள்: ❖ இலைகள், பூக்கள், காய்கள், கனிகள் ஆகியவற்றை உற்றுநோக்கல். அடையாளம் காணுதல். ❖ பெயரறிதல், விவரித்தல் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளுதல் செல்வி ஒருநாள் தன் வீட்டருகே உள்ள தோட்டத்திற்குச் சென்றாள். அங்கே ஒரு தக்காளிச் செடியில் அழகான மஞ்சள் நிறப் பூவைக் கண்டாள். உடனே அதனைப் பறிக்க முயன்றாள். அப்போது அங்கு வந்த தேனீ ஒன்று “அது என்னுடைய உணவு விட்டுவிடு” என்றது. வியப்படைந்த செல்வி செடியில் சிவப்பு நிறத் தக்காளியைக் கண்டதும் அதைப் பறிக்க முயன்றாள். அப்போது பச்சைக்கிளி ஒன்று பறந்துவந்து “அது எனக்கான உணவு விட்டுவிடு” என்றது. செல்வி பச்சைக்கிளிக்காகத் தக்காளியை விட்டுவிட்டு. பின் தக்காளிச் செடியின் இலையை வருடினாள். அப்போது அங்கு வந்த வெட்டுக்கிளி “அது எனக்கான உணவு, தயவு செய்து இலையைப் பறிக்காதே” என்றது. தாவரங்கள் அனைவருக்கும் பயன்படுகின்றன என்று அப்போதுதான் செல்விக்குப் புரிந்தது. உடனே “நீதான் எங்கள் அனைவருக்கும் உணவு தருகின்றாய் மிக்க நன்றி” என மகிழ்ச்சியுடன் கூறிக் கொண்டே தக்காளிச் செடிக்குத் தண்ணீர் ஊற்றினாள் செல்வி. இலைகள் கதை பிடித்ததா குழந்தைகளே! நாம் தற்போது தாவர உலகத்திற்குள் பயணிப்போமா? நாம் பேசுவோமா! தாவரங்கள் பல்வேறு வகையான இலைகளைக் கொண்டுள்ளன. இலைகள் பல்வேறு அளவு, வடிவம், வண்ணம் மற்றும் தன்மைகளில் உள்ளன. உங்களைச் சுற்றிக் காணப்படும் இலைகளில் நீங்கள் பார்த்த இலைகளைப் பற்றிப் பேசலாமா! இதோ உங்களுக்கு உதவ சில வார்த்தைகள். சொற்களஞ்சியம் வெளிர் பச்சை, கரும் பச்சை, மென்மையான, மிருதுவான, சொரசொரப்பான, விளிம்புடைய, கூர்மையான, வட்டமான, உலர்ந்த, பெரிய, சிறிய, நுனி. ❖ நீ அறிந்த வார்த்தைகளைக் கொண்டு இலைகளை வேறுபடுத்துவோமா! ❖ இலையின் மேல் தேய்த்தல் – இலைகளின் மேல் வண்ண மெழுகுப் பென்சிலால் தேய்த்து அதன் அமைப்பை உருவாக்குவோமா! ❖ பச்சை இலை ஒன்றை வகுப்பிற்கு கொண்டு வரவும். அந்த இலையில் ஏற்படும் மாற்றத்தை ஒரு வாரம் வரை தினமும் உற்றுநோக்குவோமா! பூக்கள் படங்களைப் பார். இவை நம்மைச் சுற்றிலும் காணப்படும் சில பூக்கள். அவற்றின் பெயர்களைச் சொல்வோமா! ❖ உங்களுக்குப் பிடித்த பூ எது? அப்பூவைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தவற்றைச் சொல்வீர்களா! இதோ உங்களுக்கு உதவ சில வார்த்தைகள். சொற்களஞ்சியம் மணம், இதழ், மென்மையான, மிருதுவான, சொரசொரப்பான, முட்கள், வண்ணம், சிவப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை, மஞ்சள். ❖ சிலபூக்களுக்கு மணம் உண்டு. செண்பகப்பூ மல்லிகைப்பூ ரோஜாப்பூ பூ வாடாமல் இருக்க வேண்டுமெனில் படத்தில் உள்ளது போல் செய்யலாம். பூக்கள் பல்வேறு வகையான இதழ்களைக் கொண்டுள்ளன. இதழ்களின் வடிவங்களை உற்றுநோக்கவும். ❖ இதழை உரியபூவுடன் இணைக்கலாமா! காய்கறிகள் பாடல் நேரம் சின்னச் சின்ன சுண்டைக்காய் குண்டு குண்டுக் கத்தரிக்காய் நெட்டை நெட்டை முருங்கைக்காய் நீண்டு தொங்கும் புடலங்காய் கொடியிலே பூசணிக்காய் கொத்துக் கொத்தாய் அவரைக்காய் வழ வழக்கும் வெண்டைக்காய் வளமான வாழைக்காய் பட்டை போட்ட பீர்க்கங்காய் பாங்கான வெள்ளரிக்காய் இத்தனையும் வேண்டுமா? இன்றே தோட்டம் அமைத்திடுவோம்! இயற்கை வளம் காத்திடுவோம்! […]
Samacheer Kalvi 1st Environmental Science Books Tamil Medium Nature Bounty Read More »