Samacheer Kalvi 10th Tamil Books Chapter 1 4

Last Updated on: January 3, 2026 by VirkozKalvi

தமிழ் : இயல் 1 : அமுதஊற்று

துணைப்பாடம்: உரைநடையின் அணிநலன்கள்

II. குறு வினா

1. ஆசிரியப்பா இயற்றுபவர் _______________

விடை : குன்றூர்க் கிழார்

2. குறிஞ்சிப்பாட்டினை எழுதியவர் _______________

விடை : கபிலர்

3. குறிஞ்சிமலர் நூலின் ஆசிரியர் _______________

விடை : நா.பார்த்தசாரதி

4. எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துகையில் _______________ என்கிறோம்.

விடை : ‘இணை ஒப்பு’ (analogy)

5. இரா.பி.சே எழுதிய நூல் _______________

விடை : தமிழின்பம்

6. கலப்பில்லாத பொய் _______________ என்கிறோம்

விடை : சொல்முரண் (Oxymoron)

III. குறு வினா

1. உருவகம் பற்றி தண்டி என்பவரின் கூற்றினை எழுதுக

‘உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்’ என்பது தண்டியின் கூற்றாகும்.

2. புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை” என்று எழுத்தாளர் வ.ராமசாமி எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.

புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை” என்று எழுத்தாளர் வ.ராமசாமி ‘மழையும் புயலும்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

3. இலக்கணை என்றால் என்ன?

உயிர் இல்லாத பொருள்களை உயிர் உள்ளன போலவும், உணர்வு இல்லாத பொருள்களை உணர்வுடையன போலவும் கற்பனை செய்வது ‘இலக்கணை’ எனப்படும்.

4. முரண்படு மெய்ம்மை’ என்பது என்ன?

உண்மையில் முரண்படாத – மெய்ம்மையைச் சொல்லுவது ‘முரண்படு மெய்ம்மை’ (paradox) எனப்படும்.

5. எதிரிணை இசைவு என்பதன் விளக்கம் தருக

சொல்லும் முறையில் அழுத்தம் கொடுப்பதற்காக எதிரும் புதிருமான முரண்படும் கருத்துகளை  அமைத்து எழுதுவது எதிரிணை இசைவு (Antithesis) என்கிறோம்.

III. சிறு வினா

1. முதல் தமிழ்க்கணினி – குறிப்பெழுதுக

முதல் தமிழ்க் கணினி தமிழ் மறையான திருக்குறளைத் தந்த “தி                               ருவள்ளுவர்” பெயரில் முதல் தமிழ்க் கணினி 1983 செப்டம்பரில் டி.சி.எம். டேட்டா புரொடக்ட்ஸ் என்னும் தனியார் நிறுவனம் உருவாக்கி விற்பனைக்குக் கொண்டுவந்தது.

இக்கணினியில் முதல் முறையாகத் தமிழ் மொழியிலேயே விவரங்களை (Data) உள்ளீடாகச் செலுத்தி நமக்குத் தேவையான தகவல்களை வெளியீடாகக் கணினியிலிருந்து பெறமுடிந்தது.

இந்தக் கணினி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் கையாளக்கூடியதாக அமைந்தது.

சென்னை தேனாம்பேட்டையில் இருந்த புள்ளிவிவரத் துறை அலுவலகத்திற்கும் தலைமைச் செயலகத்துக்கும் கோப்புகளையும் செய்திகளையும் பறிமாறிக்கொண்ட முதல் நேர்வழிக் கணினி ஆகும்.

2. பெரியாரைப் பற்றி அறிஞர் அண்ணா பேசியதினை எழுதுக

“அவர் (பெரியார் ஈ.வெ.ரா) பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக் கித் திணறாத பழமை உண்டா? எதைக் கண்டு அவர் திகைத்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது?… எனவேதான், பெரியாருடைய பெரும் பணியை நான் ஒரு தனிமனிதனின் வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம் – ஒரு கால கட்டம் – ஒரு திருப்பம் – என்று கூறுகிறேன்.”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top