Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 10th Tamil Books Chapter 3 1

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 3 1

தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு

உரைநடை: விருந்து போற்றுதும்!

I. பலவுள் தெரிக.

1. பின்வருவனவற்றுள் முறையான தொடர் –

  1. தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு
  2. தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
  3. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
  4. தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

விடை : தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

2. ‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை –

  1. நிலத்திற்கேற்ற விருந்து
  2. இன்மையிலும் விருந்து
  3. அல்லிலும் விருந்து
  4. உற்றாரின் விருந்து

விடை : இன்மையிலும் விருந்து

II. குறு வினா

‘தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி’ என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.

விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றாகக் கருத முடியாது.

ஏனென்றால், இனிய சொற்களும், நல்ல உபசரிப்பும் இல்லாமல் செல்வத்தால் செய்யும் விருந்தோம்பலை ஏற்கமாட்டார்கள். எனேவ, செல்வத்தை விட விருந்தோம்பலுக்கு இனியச் சொற்களும் நல்ல உபசரிப்பும், மனமும் இருந்தால் போதும் என்பது என் கருத்தாகும்.

III. சிறு வினா

• புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர்.

• திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காணமுடிகிறது.

இப்படியாகக் காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக.

அன்றைய காலத்தில் வழிப்போக்கர்களே விருந்தினராகப் போற்றப்பட்டனர்.காலமாற்றத்தல் நாகரிகம் என்னும் பெயரால், வழிப்போக்கர்களுக்கு விருந்தளிப்பது மறைந்து, நண்பர்களுக்கும், உறவினர்களுக்கு மட்டுமே விருந்தளிக்கும் நிலையைத்தான் இன்று காண முடிகின்றது.வழிப்போக்கர்களுக்கும், ஏழைகளுக்கும் கோவில் மற்றும் அன்னசத்திரங்கள் விருந்திட்டு வருகின்றன.விருந்தினர் என்று சொல்லி கயவர்கள் இன்று மக்களை ஏமாற்றுவதால் புதியவர்களை விருந்தினராகப் போற்ப்படுவது இல்லை.இன்றைய சமுதாயத்தில் தன்னலம் மேலோங்கியதால் விருந்தென்னும் பொதுநலம் குறைந்து வருகின்றது.

IV. நெடு வினா

உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.

குறிப்புச் சட்டம்

முன்னுரை

இனிது வரவேற்றல்

உணவு உபசரிப்பு

அன்பு வெளிப்பாடு

முடிவுரை

முன்னுரை:-

“செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வாத் தவர்க்கு”

என்ற குறட்பா வந்த விருந்தினரைப் பேணிப் போற்றி இனிவரும் விருந்தினரை எதிர்பார்த்து இருப்பவனை வானவர்கள் போற்றும் சிறப்பு விருந்தினனாவான் என்கின்றது. வந்த விருந்தையும் வரும் விருந்தையும் சிறப்புடன் செய்வது இல்லத்தார் கடமையாகும்.

இனிது வரவேற்றல்:-

வீட்டிற்கு வந்த உறவினர்களிடம் வாருங்கள், அமருங்கள், நலமா? நீர் அருந்துங்கள், குடும்பத்தினர் அனைவரும் நலமா? என சில வார்த்தைகளைக் கூறி முக மலர்ச்சியுடன் விருந்தினரை வரவேற்றேன்.

உணவு உபசரிப்பு:-

வீட்டிற்கு வந்த விருந்தினர்களுக்கு அவர்கள் விரும்பும் அறுசுவை உணவைத் தயார் செய்து அவரை உணவு உண்ண வருமாறு இன்முகத்துடன் அழைத்து, அமர வைத்தேன்

தலை வாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது மரபு. ஆகவே தமிழ்ப் பண்பாடு மறையாதிருக்க தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவிட்டேன்.

உண்பவரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான் பகுதியும், வலப்பக்கம் விரிந்த பகுதியும் வருமாறு வாழையிலையை விரித்தேன்.

வாழை இலையின் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகளை வைத்தேன். வாழை இலையின் வலது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகளையும் நடுவில் சோறும் வைத்தேன்.

உண்பவர் மனமறிந்து அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளை மீண்டும் மீண்டும் பரிவுடன் பரிமாறினேன்.

அன்பு வெளிப்பாடு:-

ஒரு குவளையில் நீரைக் கொண்டு வந்தேன். அதைக் கொண்ட அவர் அருகில் வைக்கப்பட்ட வெற்றுப்பாத்திரத்தில் அவர் கைகழுவுமாறு நீர் ஊற்றினேன்.

பிறகு கைகளைத் துடைப்பதற்குத் துண்டினை அளித்தேன்.

உணவு உண்டு எழுந்தவருக்கு ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கும் சுண்ணாம்பு வைத்தேன். அவர் அதை மகிழ்வுடன் உண்டார்.

உணவுண்டவரிடம் திருப்தியாக உண்டீர்களா? என விசாரித்து, வீட்டில் உள்ள உணவுப் பொருட்கள் சிலவற்றையும் கொடுத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்குமாறு கூறி, ஏழடி வரை அவருடன் சென்று வழியனுப்பி வைத்தேன்.

முடிவுரை:-

விருந்தினர் பேணுதன் தமிழர் மரபு ஆகும். அதனை அன்போடும், அருளோடும் செய்தல் நனி சிறப்பாகும்.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தமிழர் பண்பாட்டில் ____________ க்குத் தனித்த இடமுண்டு.

விடை : வாழை இலை

2. அமெரிக்காவின் மினசோட்டோ தமிழ்ச் சங்கம் ____________ வை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது.

விடை : வாழையிலை விருந்து விழா

3. திருவள்ளுவர் ____________ ‘விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே அமைத்திருக்கிறார்.

விடை : இல்லறவியலில்

4. இளையான்குடி மாறநாயனாரின் விருந்தளிக்கும் திறன் பற்றி ____________ குறிப்பிடுகிறது.

விடை : பெரியுராணம்

5. விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே படைத்த புலவர் ____________

விடை :  திருக்குறள்

6. தனித்து உண்ணாமை என்பது தமிழரின் ____________ பண்பின் அடிப்படை

விடை : விருந்தோம்பல்

7. விருந்தோம்பல் என்பது ____________

விடை : பெண்களின் சிறந்த பண்பு

II. குறு வினா

1. விருந்தோம்பல் என்றால் என்ன?

தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று, உண்ண உணவும் இடமும் கொடுத்தல், அவர்களிடம் அன்பு பாராட்டுதல் இவை விருந்தோம்பல் எனப்படும்.

2. உலகம் நிலைத்திருப்தற்கான காரணங்கள் எவையென கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி குறிப்பிட்டவை எவை?

தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை

அமிழ்தே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுக்கும் நல்லோர் உள்ளதால் உலகம் நிலத்திருக்கிறது.

3. உணவிடும் நல்லியல்பு குடும்ப தலைவிக்கு உண்டு என்பதை குறித்த நற்றிணை குறிப்பிடும் செய்தி யாது?

விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளில் ஒன்றாகப் கருதப்படுகிறது.

நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்ப தலைவிக்கு உண்டு.

4. இல்ல விழாக்கள் யாவை?

  • திருமணத்தை உறுதி செய்தல்
  • திருமண்
  • வளைகாப்பு
  • பிறந்த நாள்
  • புதுமனை புகுவிழா

5. மினசோட்டா தமிழ்ச் சங்க வாழையிலை விருந்து விழாவில் வைக்கப்படும் உணவுகள் யாவை?

  • முருங்கைக்காய் சாம்பார்
  • வெண்டக்காய் கூட்டு
  • மோர்க்குழம்பு
  • வேப்பம்பூ ரசம்
  • தினைப்பாயாசம்
  • அப்பளம்

6. விருந்து பற்றி எடுத்துரைக்கும் தமிழ் நூல்கள் யாவை?

  • தொல்காப்பியம்
  • திருக்குறள்
  • சிலப்பதிகாரம்
  • கம்பராமாயணம்
  • கலிங்கத்துப்பரணி
  • புறநானூறு
  • நற்றிணை
  • குறுந்தொகை
  • கொன்றைவேந்தன்

III. குறு வினா

1. விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்பதை இளங்கோவடிகள் எதன்மூலம் உணர்த்துகிறார்.

விருந்தினரைப் போற்றுதல் இல்லறக் கடமையாக இருந்தது.

“…………………….. தொல் லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை ”

– சிலப்பதிகாரம், 16:72,73

என்று கண்ணகி வருந்துகிறாள். கோவலனைப் பிரிந்து வாழும் கண்ணகி அவனைப் பிரிந்ததைவிட விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை எண்ணியே வருந்துவதாகக் குறிப்பிடுவதன் மூலம் விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்பதை இளங்கோவடிகள் உணர்த்துகிறார்.

2. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் தன்னுடைய எவ்வடிகள் மூலம் குறிப்பிட்டுள்ளார்?

“பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே”

– கம்பராமாயணம், 1:2:36

3. தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை என்பதை விளக்குக.

தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை . அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுப்பர் நல்லோர்; அத்தகையோரால்தான் உலகம் நிலைத்திருக்கிறது என்பதை,

“உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே…….. ”

– புறநானூறு, 182

என்று கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி குறிப்பிட்டுள்ளார்.

4. நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டென்பதை நற்றிணை பாடல் வரிகள் மூலம் குறிப்பிடுக.

விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு. இதை

“அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்”

என்று நற்றிணை (142) குறிப்பிடுகிறது.

5. ‘’காலின் ஏழடிப் பின் சென்று’’ என்ற பொருநராற்றுப்படை பாடல் வரி உணர்த்தும் பொருளினை கூறுக

ப ண்டைத் தமிழர்கள் வீட்டிற்கு வந்த விருந்தினர் திரும்பிச் செல்லும்போது, அவர்களைப் பிரிய மனமின்றி வருந்தினர். மேலும், வழியனுப்பும் பொழுது அவர்கள் செல்லவிருக்கிற நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர்வரை ஏழு அடி நடந்து சென்று வழியனுப்பினர்.

“அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்”

என்று நற்றிணை (142) குறிப்பிடுகிறது.

6. சிறுபாணாற்றுப்படையின் நிலத்திற்கேற்ற விருந்து கூற்றினை கூறுக

நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்கிறது சிறுபாணாற்றுப்படை

7. விருந்தை எதிர்கொள்ளும் தன்மை பற்றி குறுந்தொகை தரும் விளக்கம் யாது?

விருந்தை எதிர்கொள்ளும் தன்மை இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்ததை,

“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீரோ”

என்ற குறுந்தொகை (118) அடிகள் புலப்ப டுத்துகின்றன.

8. விருந்தினை பற்றிய ஒவையார் தம்முடைய எவ்வரிகள் மூலம் குறிப்பிடுகிறார்

“மருந்தே ஆயினும் விருந்தொடு உண்” என்று கொன்றை வேந்தனில் ஔவையார்
பாடியுள்ள வரிகள் மூலம் குறிப்பிடுகிறார்.

IV. நெடு வினா

1. இன்மையிலும் விருந்தோம்பல் விவரி

வீட்டிற்கு வந்தவருக்கு வறிய நிலையிலும் எவ்வழியிலேயேனும் முயன்று விருந்தளித்து மகிழ்ந்தனர் நம் முன்னோர். தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி.

இதனை,

குரல்உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து
சிறிது புறப்பட்டன்றோ இலள்

என்று புறநானூறு (333) காட்சிப்படுத்துகிறது.

நேற்று வந்த விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த தன் பழையவாளைப் பணையம் வைத்தான் தலைவன்; இன்றும் விருந்தினர் வந்ததால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு.

இச்செய்தி,

நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்
இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்….

– புறநானூறு, 316

என்ற பாடலடிகளில் இடம்பெறுகிறது.

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

இளையான்குடி மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க அவரிடம் தானியமில்லை; எனவே, அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்து விருந்து படைத்த திறம் பெரியபுராணத்தில் காட்டப்படுகிறது.

பகிர்ந்துண்ணல் பாரதிதாசனார் கவிதை

“இட்டதோர் தாமரைப்பூ
இதழ்விரித் திருத்தல் போலே
வட்டமாய்ப் புறாக்கள் கூடி
இரையுண்ணும்……………..”பாரதிதாசனார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *