Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 10th Tamil Books Chapter 5 5

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 5 5

தமிழ் : இயல் 5 : மணற்கேணி

இலக்கணம்: வினாவிடை வகை, பொருள்கோள்

I. பலவுள் தெரிக.

”இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது ………… வினா. “அதோ, அங்கே நிற்கும்.” என்று மற்றொருவர் கூறியது ………. விடை.

  1. ஐயவினா, வினா எதிர் வினாதல்
  2. அறிவினா, மறை விடை
  3. அறியா வினா, சுட்டு விடை
  4. கொளல் வினா, இனமொழி விடை

விடை : அறியா வினா, சுட்டு விடை

II. குறு வினா

இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது?

இதோ… இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே!மின்சாரம் இருக்கிறதா, இல்லையா?

மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.

விடைஅ) மின்விளக்கின் சொடுக்கி எந்தபக்கம் இருக்கிறது? – அறியா வினாஆ) இதோ… இருக்கிறதே! – சுட்டு விடைஇ) சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறா, இல்லையா? – ஐய வினா

III. சிறு வினா

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். – இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.

இப்பாடலில் அமைந்துள்ள பொருள்கோள் ஆற்றுநீர்ப் பொருள்கோள்பொருள்கோள் இலக்கணம்பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை ஆற்று நீரின் போக்கைப் போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைதல் ஆற்றுநீர்ப பொருள்கோள்பொருள்கோள் விளக்கம்இப்பாடலில் முயற்சி செல்வத்தை தரும். முயற்சி செய்யாமை வறுமையைத் தரும் என்று பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை நேராகப் பொருள் கொள்ளும் முறையில் அமைந்திருப்பதால் அது ஆற்று நீரப்பொருள்கோள் ஆயிற்று.

கூடுதல் வினாக்கள்

1. வினா எத்தனை வகைப்படும் அவை யாவை?

வினா ஆறு வகைப்படும்.

அவை

  • அறி வினா
  • அறியா வினா
  • ஐய வினா
  • கொளல் வினா
  • கொடை வினா
  • ஏவல் வினா

2. அறி வினா என்றால் என்ன? எ.கா தருக

தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது.எ.கா:-மாணவரிடம், ‘இந்தக் கவிதையின் பொருள் யாது?’ என்று ஆசிரியர் கேட்டல்.

3. அறியா வினா என்றால் என்ன? எ.கா தருக

தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது.எ.கா:-ஆசிரியரிடம், ‘இந்தக் கவிதையின் பொருள் யாது?’ என்று மாணவர் கேட்டல்.

4. கொளல் வினா என்றால் என்ன? எ.கா தருக

தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவதுஎ.கா:-‘ ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா ?’ என்று நூலகரிடம் வினவுதல்.

5. ஐயா வினா என்றால் என்ன? எ.கா தருக

ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது.எ.கா:-‘இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா?’ என வினவுதல்.

6. கொடை வினா என்றால் என்ன? எ.கா தருக

பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவதுஎ.கா:-‘என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா?’ என்று கொடுப்பதற்காக வினவுதல்.

7. ஏவல் வினா என்றால் என்ன? எ.கா தருக

ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதற் பொருட்டு வினவுவது.எ.கா:-“வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா? என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் சொல்லுதல்.

8. விடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

விடை எட்டு வகைப்படும்.

அவை

  • சுட்டு விடை
  • மறை விடை
  • நேர் விடை
  • ஏவல் விடை
  • வினா எதிர் வினாதல் விடை
  • உற்றது உரைத்தல் விடை
  • உறுவது கூறல் விடை
  • இனமொழி விடை

9. சுட்டு விடை என்றால் என்ன? எ.கா. தருக

சுட்டிக் கூறும் விடைஎ.கா:-‘கடைத்தெரு எங்குள்ளது?’ என்ற வினாவிற்கு, ‘வலப்பக்கத்தில் உள்ளது’ எனக் கூறல்.

10. மறை விடை என்றால் என்ன? எ.கா. தருக

மறுத்துக் கூறும் விடை ‘எ.கா:-கடைக்குப் போவாயா?’ என்ற கேள்விக்குப் ‘போகமாட்டேன்’ என மறுத்துக் கூறல்.

11. நேர் விடை என்றால் என்ன? எ.கா. தருக

உடன்பட்டுக் கூறும் விடைஎ.கா:-‘கடைக்குப் போவாயா?’ என்ற கேள்விக்குப் ‘பாேவேன்’ என்று உடன்பட்டுக் கூறல்.

12. ஏவல் விடை என்றால் என்ன? எ.கா. தருக

மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை.
எ.கா:-இது செய்வாயா?” என்று வினவியபோது, “நீயே செய்”என்று ஏவிக் கூறுவது.

13. வினா எதிர் வினாதல் விடை என்றால் என்ன? எ.கா. தருக

வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது.எ.கா:-‘என்னுடன் ஊருக்கு வருவாயா?’ என்ற வினாவிற்கு ‘வராமல் இருப்பேனா?’ என்று கூறுவது.

14. உற்றது உரைத்தல் விடை என்றால் என்ன? எ.கா. தருக

வினாவிற்கு விடையாக ஏற்கெனவே நேர்ந்ததைக் கூறல்.எ.கா:-‘நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கிறது’ என்று உற்றதை உரைப்பது.

15. உறுவது கூறல் விடை என்றால் என்ன? எ.கா. தருக

வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறல்.எ.கா:-‘நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கும்’ என்று உறுவதை உரைப்பது.

16. இனமொழி விடை என்றால் என்ன? எ.கா. தருக

வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாகக் கூறல்.
எ.கா:-“உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்குக் “கட்டுரை எழுதத் தெரியும்” என்று கூறுவது.

17. பொருள்கோள் ஏன்றால் என்ன? அதன் வகைகளை கூறுக

செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் ‘பொருள்கோள்’ என்று பெயர்.பொருள்கோள் எட்டு வகைப்படும்.ஆற்றுநீர்ப் பொருள்கோள்மொழிமாற்றுப் பொருள்கோள்நிரல்நிறைப் பொருள்கோள்
விற்பூட்டுப் பொருள்கோள்தாப்பிசைப் பொருள்கோள்அளைமறிபாப்புப் பொருள்கோள்கொண்டு கூட்டுப் பொருள்கோள்அடிமறிமாற்றுப் பொருள்கோள்

18. கொண்டு கூட்டுப் பொருள்கோள் என்றால் என்ன?

ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள்கொள்வது கொண்டுகூட்டுப் பொருள்கோளாகும்.

கற்பவை கற்றபின்…

I. வினா வகையையும் விடை வகையையும் சுட்டுக.

1. “காமராசர் நகர் எங்கே இருக்கிறது? “இந்த வழியாகச் செல்லுங்கள்.” – என்று விடையளிப்பது.

  • சுட்டுவிடை

2. “எனக்கு எழுதித் தருகிறாயா?” என்ற வினாவுக்கு, “எனக்கு யார் எழுதித் தருவார்கள்?” என்று விடையளிப்பது.

  • வினா எதிர் வினாதல் விடை

II. உரையாடலில் இடம்பெற்றுள்ள வினாவிடை வகைகளைக் கண்டு எழுதுக.

பாமகள் : வணக்கம் ஆதிரை! ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே? (அறியா வினா)

ஆதிரை : ஆமாம்! கவியரங்கத்துக்குக் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.(உற்றது உரைத்தல் விடை)

பாமகள் : அப்படியா! என்ன தலைப்பு? (அறியாவினா)

ஆதிரை : கல்வியில் சிறக்கும் தமிழர்! (நேர்விடை). நீங்கள் கவியரங்கத்துக்கு எல்லாம் வருவீர்களோ? மாட்டீர்களோ? (ஐயவினா)

பாமகள் : ஏன் வராமல்? (வினா எதிர் வினாதல் விடை)

மொழியை ஆள்வோம்

I. ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை எழுதுக.

யாழிசைIt’s like new lute music
அறைக்குள் யாழிசை
ஏதென்று சென்று
எட்டிப் பார்த்தேன்;
பேத்தி,
நெட்டுருப் பண்ணினாள்
நீதிநூல் திரட்டையே.
பாரதிதாசன்
Wondering at the lute music
Coming from the chamber
Entered I to look up to in still
My grand-daughter
Learning by rote the verses
Of a didactic compilation.
Translated by Kavignar Desini
விடை:-
 lute musicயாழிசை
chamberஏதென்று
to look upஎட்டிப் பார்த்தேன்
grand-daughterபேத்தி
roteநெட்டுரு
didactic compilationநீதிநூல் திரட்டு

II. அட்டவணையில் விடுபட்டதை எழுதுக.

வேர்ச்சொல்எழுவாய்த் தொடர்பெயரச்சத் தொடர்வினையெச்சத் தொடர்விளித் தொடர்வேற்றுமைத் தாெடர்
ஓடுஅருணா ஓடினாள்ஓடிய அருணாஒடி வந்தாள்அருணா ஓடாதே!அருணாவிற்காக ஓடினாள்
சொல்அம்மா சொன்னார்சொன்ன அம்மாசொல்லிச் சென்றார்அம்மா சொல்லாதே!கதையைச் சொன்னார்
தாஅரசர் தந்தார்தந்த அரசர்தந்து சென்றார்அரேச தருக!தருவற்காக அரசர்
பார்துளிர் பார்த்தான்பார்த்த துளிர்பார்த்து சிரித்தாள்துளிரே பார்!துளிருடன் பார்த்தேன்
வாகுழந்தை வந்ததுவந்த குழந்தைவந்தது குழந்தைகுழந்தையே வா!வேற்றுமைத் தொடர்

III. தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க .

1. கடம்ப வனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.

  • அழகிய குளிர்ந்த கடம்ப வனத்தை விட்டு இறைவன் நீங்கினான் .

2. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும் .

  • பழம் தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும் .

3. வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது .

  • சொந்தங்களோடு வாழும் வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது

4. கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.

  • ஒழுக்கத்துடன் கற்கும் கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும் .

5. குழந்தைகள் தனித்தனியே எழுதித்தர வேண்டும் .

  • விடைத்தாள்களை குழந்தைகள் தனித்தனியே எழுதித் தரவேண்டும்.

மொழியோடு விளையாடு

I. தொழிற்பெயர்களின் பொருளைப் கொண்டு தொடர்களை முழுமை செய்க.

1. நிலத்துக்கு அடியில் கிடைக்கும் புதையல் யாவும் அரசுக்கே சொந்தம். நெகிழிப் பொருள்களை மண்ணுக்கு அடியில் புதைத்தல் நிலத்தடி நீர்வளத்தைக் குன்றச் செய்யும். (புதையல்; புதைத்தல்)

2. காட்டு விலங்குகளைச் சுடுதல் தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச் சுட்டல் திருந்த உதவுகிறது. (சுட்டல், சுடுதல்)

3. காற்றின் மெல்லிய தொடுதல் பூக்களைத் தலையாட்டவைக்கிறது. கைகளின் நேர்த்தியான தொடுத்தல் பூக்களை மாலையாக்குகிறது. (தொடுத்தல், தொடுதல்)

4. பசுமையான காட்சிஐக் காணுதல் கண்ணுக்கு நல்லது. (காணுதல், காட்சி)

5. பொதுவாழ்வில் நடித்தல் கூடாது. நடிப்புஇல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. (நடித்தல், நடிப்பு)

II. அகராதியில் காண்க.

1. மன்றல்

  • திருமணம்

2. அடிச்சுவடு

  • காலடிக்குறி

3. அகராதி

  • அகர வரிசை சொற்பொருள் நூல்

4. தூவல்

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
  • மழை/நீர்த்துளி

5. மருள்

  • மயக்கம்

நிற்க அதற்குத் தக…

கலைச்சொல் அறிவோம்

  1. Emblem – சின்னம்
  2. Intellectual – அறிவாளர்
  3. Thesis – ஆய்வேடு
  4. Symbolism – குறியீட்டியல்
  5. Exhibition – காட்சி, பொருட்காட்சி
  6. East Indian Railways – இருப்புப் பாதை
  7. Revolution – புரட்சி
  8. Strike – தொழில் நிறுத்தி இருத்தல், தொழில் நிறுத்தம், வேலை நிறுத்தம்

அறிவை விரிவு செய்

  • சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று – தமிழில் வல்லிக்கண்ணன்
  • குட்டி இளவரசன் – தமிழில் வெ.ஸ்ரீராம்
  • ஆசிரியரின் டைரி – தமிழில் எம்.பி. அகிலா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *