Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 10th Tamil Books Chapter 7 1

Samacheer Kalvi 10th Tamil Books Chapter 7 1

தமிழ் : இயல் 7 : விதைநெல்

உரைநடை: சிற்றகல் ஒளி (தன்வரலாறு)

I. பலவுள் தெரிக

1. ‘மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே-

  1. திருப்பதியும் திருத்தணியும்
  2. திருத்தணியும் திருப்பதியும்
  3. திருப்பதியும் திருச்செந்தூரும்
  4. திருப்பரங்குன்றமும் பழனியும்

விடை : திருப்பதியும் திருத்தணியும்

2. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது ………..

  1. திருக்குறள்
  2. புறநானூறு
  3. கம்பராமாயணம்
  4. சிலப்பதிகாரம்

விடை : சிலப்பதிகாரம்

II. குறு வினா

1. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.

ம.பொ.சி. வறுமையிலும் நூல் வாங்குவதற்கும் பணமில்லாத நிலையில் பழைய புத்தகங்கள் வாங்கி படிப்பார்.இவர் விரும்பமான புத்தகங்களை குறைந்த விலைக்கு வாங்கும் வழக்கம் உள்ளவர்இவர் பல வேளைகளில் பட்னி கிடந்து புத்தகம் வாங்கி ஆனந்தம் அடைவார்செவி வழியாகவும் இலக்கிய அறிவை பெற்றார்.

2. பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.

பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் – ம.பொ.சி.பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன். – ம.பொ.சி.

III. சிறு வினா

தலையைக் கொடுத்தேனம் தலைநகரைக் காப்போம் – இடம் சுட்டி பொருள் விளக்குக

இடம்:-

ம.பொசி.யின் தன் வரலாற்றப் பகுதியில் சிற்றகல் ஒளி என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளன.

பொருள்:-

ஆந்திர மாநிலம் பிரியும் போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று அந்திர தலைவர்கள் விரும்பினர். அதனை எதிர்த்து ம.பொ.சி. கூறிய கூற்று இது.

விளக்கம்:-

மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் ஒரு கூட்டத்தை கூட்டினர். அப்போது, தமிழ் மாநிலத்தின் தலைநகர் “சென்னை” என்ற தீர்மானத்தை முன் மொழிந்தனர்

முன்மொழிந்து “தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று ம.பொ.சி முழங்கினார்.

25.03.1953-ல் பிரதமர் நேரு, சென்னை தமிழருக்கே என்ற உறுதிமொழியை நாடளுமன்றத்தில் நடுவணரசின் சார்பில் வெளியிட்டார்.

IV. நெடு வினா

நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு – குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் “மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்” என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்

அறிமுகவுரை:-

அன்பார்ந்த அவையோரே! வணக்கம்! மாணவப் பருவத்திலே நாம் நாட்டுப்பற்று உடையர்களாய் இருத்தல் வேண்டும் என்பதைப் பற்றி உங்கள் முன் பேச வந்துள்ளேன்.

பொருள்:-

நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில் தான் வடிவமைக்கப்டுகிறது என்றார் நேரு. கல்வியோடு நாட்டுப்பற்றையும் கண் எனப் போற்றி வளர்க்க வேண்டும்.

சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்டு விழாக்களை கொண்டாடும் போது நம் முன்னோர்கள் சிந்திய கண்ணீரையும், செந்நீரையும், விலைமதிப்பில்லாத உயிரையும் மனப்பூர்வமாக உணர்ந்து செயல்பட வேண்டும்.

அகிம்சை, தீண்டாமை விலக்கு, கதர் விறபனை, வெள்ளையேன வெளியேறு போன்ற விடுதலைப் போராட்ட முறைகளை  நாம் மறத்தல் கூடாது.

செக்கடியில், சிறைச்சாலையிலும் நம் வீரர்கள் பட்ட துன்பத்தை எண்ணிப் பார்த்து, நாட்டு விழாக்களைக் கொண்டுடாடும் போது நாட்டைக் காக்கும் சூளுரை ஏற்பவர்களாகவும், அதனைச் செயல்படுத்துகிறவர்களாகவும் நாம் இருத்தல் வேண்டும்.

மாணவப் பருவத்தில் நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை ஆகியவற்றில் இணைந்து நாட்டுப் பற்றையும், சேவை மனப்பான்மையையும் நாம் வளர்த்து கொண்டால் நாம் நாட்டைக் காக்கும் நல்லோராய், பற்றாளராய் மாற முடியும்

கல்வி, பொருளாதாரம், தொழில் பெருக்கம் இவற்றில் நாம் அக்கறை உடையவர்களாய் இருப்பதும் நாட்டுப்பற்றே

நம் நாட்டின் உயர்வுக்கும் முற்போக்கு வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருப்பவைகளை முறியடித்து கல்வி, அறிவியல், தொழில்நுட்பபம் போன்ற துறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

சொந்த நலன் கருதி சொந்த நாட்டையே சீரழிக்கும் கயவர் போல் இல்லாமல் இருத்தல் வேண்டும்.

விளக்கம்:-

நாடு நமக்கு என்ன செய்தது என்பதை நினைக்காமல் நாட்டிற்காக நாம் நல்ல செயல்களை செய்வேம் என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ம.பாெ.சி-யின் இயற்பெயர் ____________

விடை : ஞானப்பிரகாசம்

2. காந்தியடிகள் சத்தியாகிரத்தை தொடங்கிய ஆண்டு ____________

விடை : 1906

3. இந்தியாவை விட்டு வெளியேறு என்ற தீர்மானத்தை இந்திய பேராயக் கட்சி நிறைவேற்றிய நாள் ____________

விடை : 1942 ஆகஸ்ட் 8

4. ம.பொ.சி. சாகித்திய அகாதெமி விருது ____________ -ல் பெற்றார்

விடை : 1966

5. ____________ என ம.பொசி. போற்றப்பட்டார்

விடை : சிலம்புச்செல்வர்

II. குறு வினா

1. காந்தி – இர்வின் ஒப்பந்தக் கொள்கை எப்போது ஏற்றபடுத்தப்பட்டது?

1931இல் காந்தி – இர்வின் ஒப்பந்தக் கொள்கை எப்போது ஏற்றபடுத்தப்பட்டது.

2. மொழிவாரி ஆணையம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?

சர்தார் கே.எம். பணிக்க ர் தலைமையில் மத்திய அரசால் மொழிவாரி ஆணையம் அமைக்கப்பட்டது

III. சிறு வினா

1. 1906-ம் ஆண்டின் சிறப்புகள் யாவை?

  • ம.பொ.சி. சென்னை ஆயிரம் விளக்கு சால்வன் குப்பத்தில் 1906-ல் பிறந்தார்
  • காந்தியடிகள் சத்தியாகிர அறப்போரினை தென்னாப்பிரிக்காவில் தொடங்கினார்
  • ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசிக் கப்பல் நிறுவனத்தை தொடங்கினார் வ.உ.சி

2. ம.பொ.சி பற்றி குறிப்பு வரைக

சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுபவர்இவர்  விடுதலை பேராட்ட வீரர்1952 முதல் 1954 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினர்1972 முதல் 1978 வரை சட்டமன்ற மேலவைத் தலைவர்தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர்.‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்னும் நூலுக்காக 1966ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.

3. சென்னையை மீட்போம் என்று ம.பொ.சி குறிப்பிடுவன பற்றி கூறுக

ஆந்திர மாநிலம் பிரியும் போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று அந்திர தலைவர்கள் விரும்பினர்.தலைநகர் காக்க தன் முதல்வர் பதவியை துறக்க முன் வந்தார் இராஜாஜிமாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் ஒரு கூட்டத்தை கூட்டினர். அப்போது, தமிழ் மாநிலத்தின் தலைநகர் “சென்னை” என்ற தீர்மானத்தை முன் மொழிந்தனர்முன்மொழிந்து “தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று ம.பொ.சி முழங்கினார்.இதுவே சென்னையை மீட்போம் என்று ம.பொ.சி குறிப்பிடுவனவாகும்.

4. மார்ஷல் நேஷமணி குறிப்பு வரைக

ம.பொ.சி சிலப்பதிகாரக் காப்பியத்தை மக்களிடம் கொண்டு செல்ல விரும்பியதற்குக் காரணமுண்டு; திருக்குறளையோ, கம்பராமாயணத்தையோ விரும்பாதவர் அல்ல;

ஆயினும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்குக் கேடில்லாத வகையில், தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக் கொண்ட முயற்சிக்குப் பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் தமிழில் உண்டென்றால், அது சிலப்பதிகாரத்தைத் தவிர வேறில்லையென்று உறுதியாகக் கூறுகிறார்.

இளங்கோ தந்த சிலம்பு, தமிழினத்தின் பொதுச்சொத்து. எனவேதான் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் சிலப்பதிகார மாநாடுகள் நடத்தினார்.

5. மார்ஷல் நேஷமணி குறிப்பு வரைக

இளம்வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர்; வழக்கறிஞர்.

நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.

குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெ டுத்துச் சென்றவர்;

இதனால் மார்ஷல் நேசமணி என்று அழைக்கப்பட்டார்.

1956 நவம்பர் 1ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்து, தமிழகத்தின் தென் எல்லையாக மாறியது.

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

இவருடைய நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு இவருக்கு நாகர்கோவிலில் சிலையோடு மணிமண்டபமும் அமைத்துள்ளது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *