Samacheer Kalvi 4th Science Books Tamil Medium Science in Everyday Life

Last Updated on: January 3, 2026 by VirkozKalvi

அறிவியல் : பருவம் 1 அலகு 4 : அன்றாட வாழ்வில் அறிவியல்

அலகு 4

அன்றாட வாழ்வில் அறிவியல்

கற்றல் நோக்கங்கள்

இப்பாட இறுதியில் மாணவர்கள் பெறும் திறன்கள்

❖ பாலில் அடங்கியுள்ள ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை அறிதல்.

❖ சமைப்பதின் நன்மைகளை அறிந்து கொள்ளல்.

❖ ரொட்டி, பிஸ்கட் மற்றும் கேக் தயாரிக்கும் முறை பற்றி தெரிந்து கொள்ளல்.

❖ அன்றாட வாழ்வில் பயன்படும் மின்னணு சாதனங்கள் பற்றி அறிதல்

நினைவு கூர்வோம்

ஆசிரியர் : நீங்கள் காலையில் எழுந்தவுடன் பருகம் பானம் என்ன?

மாணவர்கள்: தேநீர், காபி, பால்

ஆசிரியர் : நல்லது. இந்த பானங்களில் என்னென்ன பொருள்கள் கலந்துள்ளன?

ராம் : பால், சர்க்கரை, தேயிலைத்தூள், காப்பித்தூள்.

ஆசிரியர் : மிகவும் நன்று நாம் காலையில் பால் குடிப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?

ராம் : தெரியும் ஐயா. பால் நம் உடல்நலத்திற்கு நல்லது.

ஆசிரியர் : சரி இந்தப் பகுதியில் பாலைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.

Iபால்

சில விலங்குகள் தனது குட்டிகள் குடிப்பதற்காக பாலைச் சுரக்கின்றன. மனிதர்கள் பாலை பல விலங்குகளிடமிருந்து பெறுகின்றனர். இருப்பினும் பசும்பாலே பொதுவாக மனிதர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

1. பாலின் ஆதாரங்கள்

விலங்குகளைத் தவிர பாலானது பிற ஆதாரங்களிலிருந்தும் பெறப்படுகிறது. .கா: சோயா பால், கொட்டை மற்றும் விதைகளிலிருந்து பெறப்படும் பால்.

பாலில் உள்ள கொழுப்பின் அளவைக் கொண்டு, இதனை முழுமையான பால் (கொழுப்பு எடுக்காத பால்), குறைந்த கொழுப்புள்ள பால், கொழுப்புச்சத்து இல்லாத பால் என வகைப்படுத்தலாம்.

உங்களுக்குத் தெரியுமா

செம்மறியாடு, வெள்ளாடு, ஒட்டகம், கழுதை, குதிரை, காட்டெருமை, நீர் எருமை, கலைமான் மற்றும் கடைமான் போன்ற பிற பாலூட்டிகளில் இருந்தும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பாலைப் பெறுகின்றனர்.

2. பாலில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள்

பாலில் தண்ணீர், சர்க்கரை, புரதம், கொழுப்பு வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன.

சர்க்கரை : பாலின் இனிப்புச் சுவைக்குக் காரணம், அதில் உள்ள லாக்டோஸ் சர்க்கரை ஆகும்.

புரதம் : தசைகள் உருவாக்கத்தில் உதவுகிறது.

கொழுப்பு : பாலில் உள்ள கொழுப்புச்சத்து வெண்ணெய் எனப்படும். மற்ற கொழுப்புகளை விட வெண்ணெய் மிகவும் சுவையாக இருக்கும்.

வைட்டமின்கள் : பாலில் உள்ள வைட்டமின் – D எலும்புகளைப் பராமரிக்க உதவுகிறது.

தாது உப்புகள் : பாலில் உள்ள கால்சியம் வலிமையான எலும்புகளையும் பற்களையும் பெற உதவுகிறது.

அன்றாட வாழ்வில் பாலின் பயன்பாடுகள்

 குழந்தைகளுக்கான முதன்மையான உணவு.

 பெரியவர்கள் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உகந்த பானம் .

 தயிர்வெண்ணெய்மோர்நெய் ஆகியவற்றைக் கொடுக்கிறது

 பாலைடைக்கட்டிபன்னீர் மற்றும் இனிப்புகள் தயாரிக்க பயன்படுகிறது.

 ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட்டுகள் தயாரிக்க பயன்படுகிறது.

 பண்டிகைகள் மற்றும் சடங்குகளில் பயன்படுத்தப்படுகிறது.

3. பாலின் நன்மைகள்

1. எலும்புகளையும் பற்களையும் வலுப்படுத்துகிறது.

2. இரத்த அழுத்தத்தைப் பராமரிக்கிறது.

3. இதய நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

4. இது ஓர் ஆற்றல் மூலமாகும்.

பதிலளிப்போமா!

1. பாலில் அதிகம் உள்ள சத்து கால்சியம் (கால்சியம்/இரும்புச்சத்து)

2. பாலில் சர்க்கரைபுரதம்  மற்றும் கொழுப்பு ஆகியவை உள்ளன.

II. உணவுப் பொருள்கள்

உணவு என்றால் என்ன?

உணவு என்பது நமது வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று உணவு நமக்கு ஆற்றல் அளிக்கிறது. பொதுவாக உணவை நாம் தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறுகிறோம். நமது உடலை நலமாக வைத்துக் கொள்ளத் தேவையான ஊட்டச்சத்துகள் உணவில் அடங்கியுள்ளன.

உணவின் தேவை

● ஆற்றலை அளித்தல்

● வளர்ச்சியை ஊக்குவித்தல்

● நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துதல்

● நமது உடல் தன்னைத் தானே சரிசெய்து கொள்ள உதவுதல்

உணவை இரண்டு வகையாக வகைப்படுத்தலாம்.

1. பச்சையாக உண்ணக்கூடிய உணவு – இவை சமைக்காமல் உண்ணக்கூடிய உணவுகள் ஆகும். .கா: பழங்கள், சில காய்கறிகள், வேர்க்கடலை.

2. சமைத்த உணவு – இவை வேகவைத்தோ, பொரித்தோ உண்ணப்படக்கூடிய உணவுகள் ஆகும். .கா: சோறு, காய்கறி பொரியல், ரொட்டி.

செய்து பார்ப்போமா!

பாத்திரத்தில் நீரை ஊற்றுவது, ஆம்லெட் அல்லது தோசை மேல் மிளகுத் தூளை போடுவது, வெங்காயத்தின் தோலை உரிப்பது கொத்துமல்லி விதைகளைப் பொடியாக்குவது போன்ற செயல்களை உங்களால் செய்யமுடியும். பெரியோர்களுக்குச் சமையலறையில் எப்போதும் உதவுக.

1. சமையல்

என்னென்ன உணவுப் பொருள்களை சமைக்காமல் சாப்பிட முடியாது என்று உங்களுக்கும் தெரியுமா? சமைப்பதன் மூலம் உணவு உண்ணத் தகுந்ததாக மாற்றப்படுகிறது.

சமைக்கும் முறைகள்

சமைப்பதின் நன்மைகள்

உணவில் பின்வரும் பயனுள்ள மாற்றங்களைச் சமையல் ஏற்படுத்துகிறது.

1. ஊட்டச்சத்துகள் உடனடியாகச் செரிமானமடைய உதவுகிறது.

2. உணவை விரும்பும் தன்மை, மணம், சுவையுடன் தயாரிக்க உதவுகிறது.

3. தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை அழிக்கிறது.

பதிலளிப்போமா!

1. பச்சையாக உண்ணப்படக்கூடிய உணவிற்கான எடுத்துக்காட்டுகள்

விடை : காய்கறிகள்பழங்கள்

2. சமைத்து உண்ணப்படக்கூடிய உணவிற்கான எடுத்துக்காட்டுகள்

விடை : அரிசிரொட்டி வகைகள்

விவாதிப்போமா!

படத்தில் காட்டப்பட்டுள்ள பொருள்களைப் பார்த்து, அவற்றின் பயன்களை உங்கள் நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள்.

III. ரொட்டிபிஸ்கட் மற்றும் கேக் தயாரித்தல்

அடுதல் (பேக்கிங்) என்பது சமைக்கும் முறைகளில் ஒன்று உலர் வெப்பத்தைப் பயன்படுத்தி அடுதல் மேற்கொள்ளப்படுகிறது. ரொட்டி, பிஸ்கட் மற்றும் கேக் ஆகியவை அடுதல் உணவுப் பொருள்களுக்குச் சில உதாரணங்கள் ஆகும்.

1. ரொட்டி

ரொட்டி என்பது பிசைந்த மாவிலிருந்து அடுதல் முறையில் தயாரிக்கப்படும் ஓர் உணவு ஆகும். இது நோய்வாய்ப்பட்டவர்களுக்கு ஆற்றல் அளிக்கும் ஒரு முக்கியமான உணவாக விளங்குகிறது. மனிதர்களால் தயாரிக்கப்பட்ட பழங்கால உணவுகளில் இதுவும் ஒன்று. ரொட்டி குறைந்த கொழுப்புள்ள உணவு வகையாகும்.

உடல் வளர்ச்சிக்கும், நலத்திற்கும் தேவையான ஊட்டச்சத்துகள் ரொட்டியில் அடங்கியுள்ளன.

கோதுமை மாவுஈஸ்ட்நீர்சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றைக்கொண்டு ரொட்டி தயாரிக்கப்படுகிறது.

உங்களுக்குத் தெரியுமா

ரொட்டியானது அறைவெப்பநிலையில் இருப்பதைவிட குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் போது ஆறு மடங்கு வேகமாக கெட்டுப்போகிறது.

2. பிஸ்கட்

மாவைப் பயன்படுத்தி அடுதல் முறையில் தயாரிக்கப்படும் ஓர் எளிய உணவுப் பொருள் பிஸ்கட் ஆகும். பொதுவாக இவை கோதுமை மாவு அல்லது ஓட்ஸ் உடன் சர்க்கரை சேர்த்து இனிப்பாகச் செய்யப்படும் உணவாகும்.

மாவு, சர்க்கரை, வெண்ணெய், நீர், பால், ரொட்டிச் சோடா மற்றும் சுவையூட்டிகள் ஆகிய பொருள்களைக் கொண்டு பிஸ்கட் தயாரிக்கப்படுகிறது.

இவை உப்பு அல்லது இனிப்பு சுவை உடையவை. சில பிஸ்கட்டுகளுக்கு இடையில் இனிப்புக் குழைமம் (கிரீம்) வைக்கப்பட்டும் இவை தயாரிக்கப்படுகின்றன.

உங்களுக்குத் தெரியுமா

பிஸ்கட், பேக்கிங் சோடாவைக் கொண்டு மிருதுவாகத் தயாரிக்கப்படுகிறது.

3. கேக்

கேக் என்பது அடுதல் முறையில் தயாரிக்கப்படும் ஓர் இனிப்பு வகை. இது இனிப்பு ரொட்டியைப் போன்றது. அடங்கியுள்ள பொருள்களின் அடிப்படையில் இவற்றுள் பல வகைகள் உள்ளன. 

கொண்டாட்டங்களின் போது கேக்கை நாம் பயன்படுத்துகிறோம். மாவு, சர்க்கரை, முட்டை, எண்ணெய், பேக்கிங் தூள் மற்றும் வாசனைப் பொருள்கள் ஆகியவை கேக்கில் அடங்கியுள்ள பொருள்கள் ஆகும்.

பதிலளிப்போமா!

1. ரொட்டி என்பது குறைந்த  (குறைந்த / அதிக ) கொழுப்பு கொண்ட உணவு ஆகும்.

2. பிஸ்கட்டுகள் கோதுமை மாவு (கோதுமை மாவு / அரிசி மாவு) கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

3. பிறந்த நாள் கொண்டாட்டங்களுடன் தொடர்புடையது கேக் (கேக்/பிஸ்கட்)

செயல்பாடு

உனக்கு அருகில் உள்ள ஓர் அடுமனைக்குச் சென்று ரொட்டி, பிஸ்கட் மற்றும் கேக் செய்யும் முறை பற்றி தெரிந்துகொள்

IV. சிறு பொறி கருவிகள் (Gadgets)

நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்னணு சாதனங்களை நினைவு கூறுங்கள்.

நாம் பயன்படுத்தும் கைபேசி ஒவ்வொரு விடுமுறையிலும் பயன்படுத்தும் புகைப்படக்கருவி கேளிக்கைக்காகப் பார்க்கும் தொலைக்காட்சி போன்ற சாதனங்களையே மின்னணு சாதனங்கள் (சிறு பொறி கருவிகள்) என்கிறோம்.

மின்னணு சாதனம் (சிறு பொறி கருவி) என்பது பயனுள்ள வேலைகளைச் செய்யவும் சிறிய ஒரு மின்னணு இயந்திரம் ஆகும். பல மின்னணு சாதனங்கள் (சிறு பொறி கருவிகள்) நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்குகின்றன.

.கா: மடிக்கணினி

தொலைபேசி

புகைப்படக்கருவி

விரலி (பென் டிரைவ்)

ஒலிபெருக்கி

திறன்பேசிகள் (Smart Phones)

தகவல் தொடர்பு தவிர, இணையங்களிலிருந்து கோப்புக்களைப் பெற்று சேமித்தல், புகைப்படங்கள் எடுத்தல், இடங்களை அறிதல் போன்ற பல சேவைகளில் திறன்பேசிகள் பயன்படுகின்றன.

கையடக்க இசைக்கருவி (Portable Music Player)

ஆயிரக்கணக்கான பாடல்களைச் சேமித்து, எங்கேயும், எப்பொழுது வேண்டுமானாலும் அவற்றைக் கேட்க கையடக்க இசைக்கருவி பயன்படுகிறது.

கையடக்கக் கணினி (Tablets)

புத்தகங்களை வாசிக்கவும், விளையாடவும் மற்றும் படக்காட்சிகளைப் பார்க்கவும் அதிக அளவில் கையடக்கக் கணினியை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

விரலி (Pen Drive)

கணினியிலிருந்து எந்த வகைக் கோப்பையும் சேமிக்கவும், பரிமாற்றம் செய்யவும் பயன்படும் சிறியதொரு கருவி விரலி (பென் டிரைவ்) எனப்படும்.

கை மின்விளக்கு (Electric Torch)

இது கைப்பிடியுடன் கூடிய கையடக்க மின் விளக்கு. ஒளிமின் விளக்கு இருட்டில் செல்லும்போது வெளிச்சம் தர பயன்படுகிறது.

பதிலளிப்போமா!

கொடுக்கப்பட்டுள்ள மின்னணு சாதனங்களின் பெயர்களை எழுதுக.

(இணைய ஒளிப்படக் கருவி. ரிமோட் ஒலிபெருக்கி, புகைப்படக்கருவி, தலையணி ஒலிக்கருவி)

மதிப்பீடு

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. சில விலங்குகளின் இளம் உயிரிகளுக்கான முதன்மை ஆற்றல் ஆதாரம்

அ) நீர்

ஆ) கனிகள்

இ) பால்

[விடை : பால்]

2. பாலில் உள்ள எந்த உயிர்ச்சத்து எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது?

அ) உயிர்ச்சத்து ஈ

ஆ) உயிர்ச்சத்து சி

இ) உயிர்ச்சத்து டி

[விடை : உயிர்ச்சத்து டி]

3. மனிதர்களால் தயாரிக்கப்பட்ட பழங்கால உணவு வகைகளுள் ஒன்று

அ) நூடுல்ஸ்

ஆ) கேக்

இ) ரொட்டி

விடை : ரொட்டி

4. ———- பச்சையாக உண்ணப்படக்கூடிய ஓர் உணவாகும்.

அ) வெள்ளரி

ஆ) சப்பாத்தி

இ) ரொட்டி

[விடை : வெள்ளரி]

5. பாடல்களைக் கேட்க உதவும் சிறு பொறிக் கருவி

அ) பென் டிரைவ்

ஆ) புகைப்படக்கருவி

இ) கையடக்க இசைக்கருவி

[விடை : கையடக்க இசைக்கருவி]

ஆ. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. பாலாடைக் கட்டி மற்றும் பன்னீர் ———— லிருந்து தயாரிக்கப்படுகிறது.

விடை : பால்

2. ———— மூலம் ஊட்டச்சத்துகள் செரிமானத்திற்குத் தயாராகின்றன.

விடை : சமைத்தல்

இ. பொருத்துக.

1. கையடக்க இசைக்கருவி ‘- உலகத்துடன் தொடர்புகொள்ளல்

2. திறன்பேசி – தகவல் சேமித்தல்

3. கை மின் விளக்கு – விளையாடுதல்

4. விரலி – வெளிச்சம் தருதல்

5. கையடக்கக் கணினி – இசையை ஒலித்தல்

விடை:

1. கையடக்க இசைக்கருவி – இசையை ஒலித்தல்

2. திறன்பேசி – உலகத்துடன் தொடர்புகொள்ளல்

3. கை மின் விளக்கு – வெளிச்சம் தருதல்

4. விரலி – தகவல் சேமித்தல்

5. கையடக்கக் கணினி – விளையாடுதல்

ஈ. ஓரிரு தொடர்களில் விடையளிக்க.

1. பாலிலிருந்து பெறப்படும் உணவுப் பொருள்கள் யாவை?

விடை:

தயிர், வெண்ணெய், மோர், நெய், பாலாடைக்கட்டி, பன்னீர் மற்றும் இனிப்புகள், ஐஸ்க்ரீம், சாக்லேட்டுகள்.

2. அடுதல் மூலம் தயாரிக்கப்படும் மூன்று உணவுகளின் பெயர்களை எழுதுக.

விடை:

ரொட்டி, பிஸ்கட், கேக்.

3. திறன்பேசி எந்தெந்த வழிகளில் நமக்கு உதவுகிறது?

விடை:

தகவல் தொடர்பு தவிர, இணைய அணுகல் மற்றும் கோப்புகளைச் சேமித்தல், புகைப்படங்கள் எடுத்தல், இடங்களை அறிதல் போன்ற பல சேவைகளில் திறன்பேசிகள் பயன்படுகின்றன.

4. உணவு என்றால் என்ன?

விடை:

உணவு என்பது நமது வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. உணவு நமக்கு ஆற்றல் அளிக்கிறது. பொதுவாக உணவை நாம் தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறுகிறோம். நமது உடலை நலமாக – வைத்துக் கொள்ளத் தேவையான ஊட்டச்சத்துகள் உணவில் அடங்கியுள்ளன.

உ. விரிவாக விடையளிக்க.

1. சமைப்பதன் மூலம் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் நீக்கப்படுகின்றனசமையலின் பிற நன்மைகளை எழுதுக.

விடை:

● உணவில் பின்வரும் பயனுள்ள மாற்றங்களைச் சமையல் ஏற்படுத்துகிறது.

● ஊட்டச்சத்துகள் உடடினயாகச் செரிமான மடைய உதவுகிறது.

● உணவை விரும்பும் தன்மை, மணம், சுவையுடன் தயாரிக்க உதவுகிறது.

● தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை இது அழிக்கிறது.

2. நாம் ஏன் பாலைப் பருக வேண்டும்?

விடை:

பாலைப் பருகுவதன் நன்மைகள் :

● எலும்புகளையும் பற்களையும் வலுப்படுத்துகிறது.

● இரத்த அழுத்தத்தைப் பராமரிக்கிறது.

● இதய நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

● இது ஓர் ஆற்றல் மூலமாகும்.

ஊ. செயல் திட்டம்.

1. நீ பயன்படுத்தியுள்ள சிறு பொறிக் கருவிகளைப் பட்டியலிடுக.

2. பல்வேறு வகையான பால் பொருள்களை அட்டவணைப்படுத்துக.

செய்து பார்ப்போமா!

பாத்திரத்தில் நீரை ஊற்றுவது, ஆம்லெட் அல்லது தோசை மேல் மிளகுத் தூளை போடுவது, வெங்காயத்தின் தோலை உரிப்பது கொத்துமல்லி விதைகளைப் பொடியாக்குவது போன்ற செயல்களை உங்களால் செய்யமுடியும். பெரியோர்களுக்குச் சமையலறையில் எப்போதும் உதவுக.

பதிலளிப்போமா!

1. பச்சையாக உண்ணப்படக்கூடிய உணவிற்கான எடுத்துக்காட்டுகள்

விடை : காய்கறிகள்பழங்கள்

2. சமைத்து உண்ணப்படக்கூடிய உணவிற்கான எடுத்துக்காட்டுகள்

விடை : அரிசிரொட்டி வகைகள்

விவாதிப்போமா!

படத்தில் காட்டப்பட்டுள்ள பொருள்களைப் பார்த்து, அவற்றின் பயன்களை உங்கள் நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள்.

பதிலளிப்போமா!

1. ரொட்டி என்பது குறைந்த  (குறைந்த / அதிக ) கொழுப்பு கொண்ட உணவு ஆகும்.

2. பிஸ்கட்டுகள் கோதுமை மாவு (கோதுமை மாவு / அரிசி மாவு) கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

3. பிறந்த நாள் கொண்டாட்டங்களுடன் தொடர்புடையது கேக் (கேக்/பிஸ்கட்)

செயல்பாடு

உனக்கு அருகில் உள்ள ஓர் அடுமனைக்குச் சென்று ரொட்டி, பிஸ்கட் மற்றும் கேக் செய்யும் முறை பற்றி தெரிந்துகொள்

பதிலளிப்போமா!

கொடுக்கப்பட்டுள்ள மின்னணு சாதனங்களின் பெயர்களை எழுதுக.

(இணைய ஒளிப்படக் கருவி. ரிமோட் ஒலிபெருக்கி, புகைப்படக்கருவி, தலையணி ஒலிக்கருவி)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top