Samacheer Kalvi 6th Social Science Books Tamil Medium Democracy

Last Updated on: January 5, 2026 by VirkozKalvi

சமூக அறிவியல் : குடிமையில் : பருவம் 3 அலகு 1 : மக்களாட்சி

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. ஆதிமனிதன் பகுதியில் குடியேறி விவசாயம் செய்யத் தொடங்கியனான்

  1. சமவெளி
  2. ஆற்றோரம்
  3. மலை
  4. குன்று

விடை : ஆற்றோரம்

2. மக்களாட்சியின் பிறப்பிடம் .

  1. சீனா
  2. அமெரிக்கா
  3. கிரேக்கம்
  4. ரோம்

விடை : கிரேக்கம்

3. உலக மக்களாட்சி தினம் ஆகும்.

  1. செப்டம்பர் 15
  2. அக்டோபர் 15
  3. நவம்பர் 15
  4. டிசம்பர் 15

விடை : செப்டம்பர் 15

4. நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர் .

  1. ஆண்கள்
  2. பெண்கள்
  3. பிரதிநிதிகள்
  4. வாக்காளர்கள்

விடை : வாக்காளர்கள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. நேரடி மக்களாட்சியைச் செயல்படுத்தும் நாடு ___________

விடை : சுவிட்சர்லாந்து

2. மக்களாட்சிக்கான வரையறையை வகுத்தவர் ___________

விடை: ஆபிரகாம் லிங்கன்

3. மக்கள் அளிப்பதன் ___________ அளிப்பதன் மூலம் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுகின்றனர்

விடை : வாக்கு

4. நம் நாட்டில் ___________ மக்களாட்சி செயல்படுகிறது

விடை: பிரதிநிதித்துவ

III. விடையளிக்கவும்

1. மக்களாட்சி என்றால் என்ன?

“மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி”

2. மக்களாட்சியின் வகைகள் யாவை?

  • நேரடி மக்களாட்சி (Direct Democracy),
  • மறைமுக மக்களாட்சி (அல்லது) பிரதிநிதித்துவ மக்களாட்சி (Representative Democracy)

3. நேரடி மக்களாட்சி – வரையறு.

  • நேரடி மக்களாட்சியில் மக்களே சட்டங்களை உருவாக்குகின்றர். அனைத்து சட்டத்திருத்தங்களையும் மக்கள்தான் அங்கீகரிப்பர்.
  • அரசியல்வாதிகள் நாடாளுமன்ற செயல்முறைகளின்படி ஆட்சி செய்வர்.
  • நேரடி மக்களாட்சியை வெற்றிகரமாக செயல்படுத்தும் வரலாற்றை சுவிட்சர்லாந்து பெற்றுள்ளது.

4. “மக்களாட்சியின் பிறப்பிடம் பற்றி குறிப்பு வரைக

  • “மக்களாட்சியின் பிறப்பிடம் கிரேக்கம் ஆகும்”.
  • Democracy என்ற ஆங்கில சொல் Demos மற்றும் Cratia என்ற இரு கிரேக்க சொற்களிலிருந்து பெறப்பட்டதாகும்.
  • Demos என்றால் மக்கள் என்றும் Cratia என்றால் அதிகாரம் அல்லது ஆட்சியைக் குறிக்கும

5. நம் அரசமைப்புச் சட்டத்தின் சிறப்புகளாக நீ புரிந்து கொள்வன யாவை?

  • இந்திய அரசியலமைப்பு இந்தியர்களை அனைத்து அம்சங்களிலும் வழிநடத்துகிறது மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கிறது.
  • இது அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் நீதியை உறுதி செய்கிறது.
  • இது அரசியல் கொள்கைகள், அரசாங்கத்தின் அமைப்பு, அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளை வரையறுக்கிறது.
  • அரசியலமைப்பு குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் மற்றும் வழிநடத்தும் கோட்பாடுகளை சரிசெய்கிறது.
  • இது உலகின் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு ஆகும்.

6. ஜனநாயக ரீதியாக முடிவெடுத்தல் என்றால் என்ன?

  • “மக்களாட்சி அமைப்புகளில் முடிவெடுக்கும் அதிகாரம் தலைவரிடம் குவிந்திருக்காது. மாறாக அவ்வதிகாரம் ஒரு குழுவிடம்தான் இருக்கும்.
  • சட்டதிட்டங்களுக்கும், விதிமுறைகளுக்கும் உட்பட்டு இயங்கும் அக்குழு, தொடர்புடையோர் அனைவரையும் உள்ளடக்கிய வெளிப்படையான உரையாடல்களை முன்னெடுக்கும்.
  • பின்னர் அவர்களிடையே ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்பட்டதும் இறுதி முடிவினை எடுக்கும்.
  • இதைத்தான் ஜனநாயக ரீதியாக முடிவெடுத்தல் என்கிறோம்.”

7. நாடாளுமன்ற மக்களாட்சி நடைபெறும் நாடுகள் எவை?

  • இந்தியா
  • இங்கிலாந்து

8. அதிபர் மக்களாட்சி நடைபெறும் நாடுகள் எவை?

  • அமெரிக்க ஐக்கிய நாடுகள்
  • கனடா

9. பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு எது?

உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடு நியூஸிலாந்து (1893) ஆகும்

9. பெண்களுக்கு வாக்குரிமை சில நாடுகள் எவை?

  • நியூஸிலாந்து – 1893
  • ஐக்கிய பேரரசு – 1918
  • அமெரிக்க ஐக்கிய நாடு – 1920

Government Job Preparation & Skill Building

Solving Book Back questions is the most effective way to score high in both school exams and Tamil Nadu Government competitive exams. Whether you are preparing for Group 4, VAO, or Police Constable exams, these basics are mandatory. To increase your employability, we recommend pursuing professional certification courses in computer science or digital marketing. Check the latest TN Govt Job notifications regularly and consider banking exam coaching to broaden your career horizons.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top