Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 8th Tamil Books Chapter 4 3

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 4 3

தமிழ் : இயல் 4 : கல்வி கரையில

உரைநடை: பல்துறைக் கல்வி

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது _____.

  1. விளக்கு
  2. கல்வி
  3. விளையாட்டு
  4. பாட்டு

விடை : கல்வி

2. கல்விப் பயிற்சிக்குரிய பருவம் ______.

  1. இளமை
  2. முதுமை
  3. நேர்மை
  4. வாய்மை

விடை : இளமை

3. இன்றைய கல்வி _____ நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

  1. வீட்டில்
  2. நாட்டில்
  3. பள்ளியில்
  4. தொழிலில்

விடை : தொழிலில்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. கலப்பில் _______________ உண்டென்பது இயற்கை நுட்பம்.

விடை : வளர்ச்சி

2. புற உலக ஆராய்ச்சிக்கு _______________ கொழுகொம்பு போன்றது.

விடை : அறிவியல்

3. வாழ்விற்குரிய இன்பத்துறைகளில் தலையாயது _______________ இன்பம் ஆகும்.

விடை : காவிய

III. பொருத்துக.

1. இயற்கை ஓவியம்அ. சிந்தாமணி
2. இயற்கை தவம்ஆ. பெரியபுராணம்
3. இயற்கைப் பரிணாமம்இ. பத்துப்பாட்டு
4. இயற்கை அன்புஈ. கம்பராமாயணம்

விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ

IV. குறுவினா

1. இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு. வி. க. கூறுவன யாவை?

இன்றைய கல்வி குறிப்பிட்ட பாடங்களை நெட்டுற (மனப்பாடம்) செய்து தேர்வில் தேறி, பட்டம் பெற்று, ஒரு தொழிலில் நுழைவதற்கு ஒரு கருவியாக கொள்ளப்பட்டு வருகிறது.நாளடைவில் அக்கல்விக்கும், வாழ்விற்கும் தொடர்பு இல்லாமல் போகிறது என்று திரு.வி.க. கூறுகிறார்

2. தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?

தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறக்கிறது?

3. திரு. வி. க. சங்கப் புலவர்களாகக் குறிப்பிடுபவர்களின் பெயர்களை எழுதுக.

இளங்கோவடிகள், திருத்தக்கத்தேவர், திருஞானசம்பந்தர், ஆண்டாள், சேக்கிழார், கம்பர், பரஞ்சோதி

V. சிறு வினா

1. தமிழ்வழிக் கல்வி பற்றித் திரு. வி. க. கூறுவனவற்றை எழுதுக.

கலப்பில் வளர்ச்சி உண்டு என்பது இயற்கை நுட்பம்.தமிழை வளர்க்கும் முறையிலும், அளவிலும் கலப்பைக் கொள்வது சிறப்பி.ஆகவே, தமிழ் மொழியில் அறிவுக் கலைகள் இல்லை என்னும் பழம்பாட்டை நிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் பெயர்த்து எழுதித் தாய்மொழிக்கு ஆக்கம் தேடுவோம் என்னும் புதுப்பாட்டு பாடுமாறு சகோதரர்களை கேட்டுக் கொள்கிறேன்.கலைகள் யாவும் தாய்மொழி வழி மாணாக்கர்களுக்கு அறிவுறுத்தப்படும் காலமே தமிழ்தாய் மீண்டும் அரியாசனம் ஏறும் காலமாகும் என்று திரு.வி.க. கூறுகின்றார்.

2. அறிவியல் கல்வி பற்றித் திரு. வி. க. கூறுவன யாவை?

உலக வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதது ’அறிவியல்’உடற்கூறு, உடலோம்பு முறை, பூதபௌதிகம், மின்சாரம், நம்மைச் சூழ்ந்துள்ள செடி, கொடி, பறவை, விலங்கு முதலியவற்றை பற்றிய அறிவும், கோள் இயக்கம், கணிதம், அகத்திணை முதலிய அறிவும் நமக்கு வேண்டும்.இந்நாளில் அத்தகைய அறிவு தேவை. புற உலகு ஆராய்சிக்கு அறிவியல் கொழுகொம்பு போன்றது.நம் முன்னோர் கண்ட பல உண்மைகள் அறிவியல் அரணின்றி, இந்நாளில் உறுதி பெறலரிது.இக்கால உலகத்தோடு உறவு கொள்வதற்கும் அறிவியல் தேவை.ஆகவே, அறிவியல் என்றும் அறிவுக்கலை இளைஞர்கள் உலகில் பரவ வேண்டும் என்று திரு.வி.க. கூறுகிறார்

VI. நெடு வினா

காப்பியக் கல்வி குறித்துத் திரு. வி. க. கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள் காவிய இன்பமும் ஒன்று. அதுவே முதன்மையானது என்றும் கூறலாம்.நாம் தமிழர்கள். நாம் பாட்டு இன்பத்தை நுகர வேண்டும். அதற்காகத் தமிழ் இலக்கியங்களுக்கு இடையே செல்ல வேண்டும். தமிழ் இலக்கியங்கள் பலப்பல இருக்கின்றன.இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு, இயற்கை இன்பக்கலம் கலித்தொகை, இயற்கை வாழ்வில்லம் திருக்குறள், இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும், இயற்கைத தவம் சிந்தாமணி, இயற்கைப் பரிணாமம் கம்பராமாயணம், இயற்கை அன்பு பெரியபுராணம், இயற்கை இறையுறையுள் தேவார திருவாசக திருவாய் மொழிகள்இத்தமிழக் கருவூலங்களை உன்ன உன்ன உள்ளத்திலும் வரும் இன்ப அன்பைச் சொல்லால் சொல்ல இயலாது.இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே பெறற்கரிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள். தமிழ் இன்பத்தில் சிறந்த இன்பம் இவ்வுலகில் உண்டோ? தமிழ்க் காவியஙகளை படியுங்கள். இன்பம் நுகருங்கள் என்று திரு.வி.க. காப்பியக் கல்வி பற்றி கூறுகிறார்.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. கேடில் விழுச்செல்வம் _______________

விடை : கல்வி

2. இளமையில் கல் என்பது _______________

விடை : முதுமொழி

3. _______________ நீக்கி அறிவை விளக்குவது கல்வி.

விடை : அறியாமையை

4. _______________ முதலியனவும் கல்வியின் பாற்பட்டனவே

விடை : தொழிற்கல்வி

5. கல்வி என்பது _______________ தேடும் வழிமுறை அன்று.

விடை : வருவாய்

6. தாய்மொழி வாயிலாக _______________ வேண்டும்.

விடை : கல்வி பயிலுதல்

II. குறுவினா

1. எதற்கு அடிப்படையாய் விளங்குவது கல்வி ஆகும்?

மனிதன் விலங்கிலிருந்து மாறுபட்டு உயர்ந்து நிற்பதற்கு அடிப்படையாய் விளங்குவது கல்வி ஆகும்.

2. கல்வி எவற்றில் பெரும்பங்கு வகிக்கிறது?

மனித சமுதாயத்தின் வளர்ச்சியிலும் அதைச் சீர்திருத்தி இட்டுச் செல்வதிலும் கல்வி பெரும்பங்கு வகிக்கிறது.

3. விஜயலட்சுமி பண்டிட் கல்வி பற்றி கூறிய கருத்து யாது?

கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அல்ல. அது மெய்ம்மையைத் தேடவும், அறநெறியைப் பயிலவும், மனித ஆன்மாவுக்கு பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறையாகும்

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

4. இயற்கை இன்ப வாழ்வு நிலைகள் எவை?

  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *