Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 8th Tamil Books Chapter 7 5

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 7 5

தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு

இலக்கணம்: வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

I. பின்வரும் தொடர்களை வல்லினம் மிகும், மிகா இடங்கள் என வகைப்படுத்துக.

சுட்டுத் திரிபுவல்லினம் மிகும்
திசைப் பெயர்கள்வல்லினம் மிகும்
பெயரெச்சம்வல்லினம் மிகாது
உவமைத் தொகைவல்லினம் மிகும்
நான்காம் வேற்றுமை விரிவல்லினம் மிகும்
இரண்டாம் வேற்றுமை தொகைவல்லினம் மிகாது
வினைத் தொகைவல்லினம் மிகாது
உருவகம்வல்லினம் மிகும்
எழுவாய்த் தொடர்வல்லினம் மிகாது
எதிர்மறைப் பெயரெச்சம்வல்லினம் மிகாது

II. சிறு வினா

1. சந்திப்பிழை என்றால் என்ன?

வல்லினம்மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதுவதும் மிகக் கூடாத இடத்தில் வல்லின மெய் இட்டு எழுதுவதும் தவறாகும்.இதனைச் சந்திப் பிழை அல்லது ஒற்றுப்பிழை எனக் கூறுவர்

2. வேற்றுமைகளில் வல்லினம் மிகும் இடங்களை எழுதுக.

இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படையாக வரும் இடத்திலும், நான்காம் வேற்றுமை உருபு வெளிப்படையாக வரும் இடத்திலும் வல்லினம் மிகும்.

சான்று

தலையைக் காட்டு, எனக்குத் தெரியும்

3. வல்லினம் மிகாத் தொடர்கள் ஐந்தனை எழுதுக.

அது சென்றதுகாய் தின்றேன்இலை பறித்தேன்எழுதாத பாடல்எழுதும்படி சொன்னேன்

கூடுதல் வினாக்கள்

1. வல்லினம் மிகும் இடங்களை அட்டவணைப்படுத்துக

1.அந்த இந்த என்னும் சுட்டுத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும்.(எ.கா.) அந்தப்பக்கம். இந்தக்கவிதை.
2.எந்த என்னும் வினாத்திரிபை அடுத்து வல்லினம் மிகும்.(எ.கா.) எந்தத்திசை? எந்தச்சட்டை?
3.இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்.(எ.கா.) தலையைக் காட்டு. பாடத்தைப்படி
4.நான்காம் வேற்றுமை உருபாகிய கு வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்.(எ.கா.) எனக்குத் தெரியும். அவனுக்குப் பிடிக்கும்.
5.இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்.(எ.கா.) தலையைக் காட்டு. பாடத்தைப்படி
6.நான்காம் வேற்றுமை உருபாகிய கு வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்.(எ.கா.) எனக்குத் தெரியும். அவனுக்குப் பிடிக்கும்.
7.இகரத்தில் முடியும் வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகும்.(எ.கா.) எழுதிப் பார்த்தாள். ஓடிக் களைத்தான்.
8.உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும்.(எ.கா.) பெற்றுக் கொண்டேன். படித்துப் பார்த்தார்.
9.எதிர்மறைப் பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வருவது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும். இதில் வல்லினம் மிகும்.(எ.கா.) செல்லாக்காசு, எழுதாப்பாடல்.
10.எதிர்மறைப் பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வருவது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும். இதில் வல்லினம் மிகும்.(எ.கா.) செல்லாக்காசு, எழுதாப்பாடல்.
11.உவமைத்தொகையில் வல்லினம் மிகும்.(எ.கா.) மலர்ப்பாதம், தாய்த்தமிழ்.
12.உருவகத்தில் வல்லினம் மிகும்.(எ.கா.) தமிழ்த்தாய், வாய்ப்பவளம்.
13.எண்ணுப்பெயர்களில் எட்டு, பத்து ஆகிய இரண்டு பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும்.(எ.கா.) எட்டுப்புத்தகம், பத்துக்காசு.
14.அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகும்.(எ.கா.) அப்படிச்செய், இப்படிக்காட்டு, எப்படித்தெரியும்?
15.திசைப்பெயர்களை அடுத்து வல்லினம் மிகும்.(எ.கா.) கிழக்குக்கடல், மேற்குச்சுவர், வடக்குத்தெரு, தெற்குப்பக்கம்.
16.மகர மெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்தால், அந்த மகர மெய் அழிந்து அவ்விடத்தில் வல்லினம் மிகும்.(எ.கா.) மரம் + சட்டம் = மரச்சட்டம், வட்டம் + பாறை = வட்டப்பாறை.

1. வல்லினம் மிகா இடங்களை அட்டவணைப்படுத்துக

1.எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது.(எ.கா.) தம்பி படித்தான் , யானை பிளிறியது.
2.அது, இது, எது ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகாது.(எ.கா.) அது சென்றது. இது பெரியது, எது கிடைத்தது?
3.பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றை அடுத்து வல்லினம் மிகாது.(எ.கா.) எழுதிய பாடல், எழுதாத பாடல்.
4.இரண்டாம் வேற் றுமை உருபு மறைந்து வரும் இடங்களில் (இரண்டாம் வேற்றுமைத் தொகை) வல்லினம் மிகாது.(எ.கா.) இலை பறித்தேன், காய் தின்றேன்.
5.உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் மென்தொடர்க் குற்றியலுகரமாகவோ, இடைத் தொடர்க் குற்றியலுகரமாகவோ இருந்தால் வல்லினம் மிகாது.(எ.கா.) தின்று தீர்த்தான், செய்து பார்த்தாள்.
6.வினைத்தொகையில் வல்லினம் மிகாது.(எ.கா.) எழுதுபொருள், சுடுசோறு
7.அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களைத் தவிர, படி என முடியும் பிறசொற்களை அடுத்து வல்லினம் மிகாது.(எ.கா.) எழுதும்படி சொன்னேன். பாடும்படி கேட்டுக்கொண்டார்.
8.உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது.(எ.கா.) தாய்தந்தை, வெற்றிலைபாக்கு

மொழியை ஆள்வோம்

I. பிழைகளைத் திருத்தி எழுதுக.

1. அதைச் செய்தது நான் அன்று.

விடை : அதைச் செய்தது நான் அல்லேன்

2. பானையை உடைத்தது கண்ணன் அல்ல.

விடை : பானையை உடைத்தது கண்ணன் அல்லேன்

3. மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை.

விடை : மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அன்று

4. சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லோம்.

விடை : சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லர்

5. பகைவர் நீவீர் அல்லர்.

விடை : பகைவர் நீவீர் அல்லீர்

II. எதிர்மறைச் சொற்களினால் நிரப்புக.

1. தாங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை ____________

விடை : அல்ல

2. உங்களோடு வருவோர் ____________ அல்லோம்.

விடை : நாம்

3. மணிமேகலை செல்வ வாழ்வை விரும்பியவள் ____________

விடை : அல்லன்

4. ஈ மொத்த பண்டங்கள் உடலுக்கு நன்மை செய்வன ____________

விடை : அல்ல

5. இந்த நிலத்துக்கு உரிமையாளர் ____________ அல்லை.

விடை : நீ

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

மொழியோடு விளையாடு

I. சொற்களை உருவாக்குக

கருமைகடுமைபல்
கரும்புகடமைவேல்
நாடுபழமைபுல்
களைகடம்நாற்று
வித்துவேற்றுமைநாடகம்
வேழம்கல்நாம்
கற்புபுதுமைவேம்பு

II. கதை நிகழ்வுக்கேற்பச் சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துக.

  1. தொண்டைமானிடம் ஒளவை தூது போதல்.
  2. தொண்டைமான் படையெடுத்து வரும் செய்தியை அதியமான் ஒளவைக்குத் தெரிவித்தல்.
  3. ஒளவைக்குத் தொண்டைமான் தன் படைக்கருவிகளைக் காட்டுதல்.
  4. அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி வழங்குதல்.
  5. தொண்டைமான் போர் வேண்டாம் என்று முடிவு செய்தல்.
  6. தொண்டைமானிடம் ஒளவை அதியமானின் படைச்சிறப்பைக் குறிப்பால் உணர்த்துதல்.

விடை :-

  1. அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி வழங்குதல்.
  2. தொண்டைமான் படையெடுத்து வரும் செய்தியை அதியமான் ஒளவைக்குத் தெரிவித்தல்.
  3. தொண்டைமானிடம் ஒளவை தூது போதல்.
  4. ஒளவைக்குத் தொண்டைமான் தன் படைக்கருவிகளைக் காட்டுதல்.
  5. தொண்டைமானிடம் ஒளவை அதியமானின் படைச்சிறப்பைக் குறிப்பால் உணர்த்துதல்.
  6. தொண்டைமான் போர் வேண்டாம் என்று முடிவு செய்தல்.

நிற்க அதற்குத் தக…

கலைச்சொல் அறிவோம்.

  1. குதிரையேற்றம் – Equestrian
  2. ஆதரவு – Support
  3. கதாநாயகன் – The Hero
  4. வரி – Tax
  5. முதலமைச்சர் – Chief Minister
  6. வெற்றி – Victory
  7. தலைமைப்பண்பு – Leadership
  8. சட்ட மன்ற உறுப்பினர் – Member of Legislative Assembly

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *