Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 8th Tamil Books Chapter 9 5

Samacheer Kalvi 8th Tamil Books Chapter 9 5

தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில்

இலக்கணம்: அணி இலக்கணம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பிறிதுமொழிதல்அணியில்_________ மட்டும் இடம்பெறும்.

  1. உவமை
  2. உவமேயம்
  3. தொடை
  4. சந்தம்

விடை : உவமை

2. இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் கூறுவது _____ அணி.

  1. ஒற்றுமை
  2. வேற்றுமை
  3. சிலேடை
  4. இரட்டுற மொழிதல்

விடை : வேற்றுமை

3. ஒரே செய்யுளை இருபொருள்படும்படி பாடுவது __________ அணி.

  1. பிறிதுமொழிதல்
  2. இரட்டுறமொழிதல்
  3. இயல்பு நவிற்சி
  4. உயர்வு நவிற்சி

விடை : இரட்டுறமொழிதல்

4. இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் _____________ அணி.

  1. பிறிதுமொழிதல்
  2. வேற்றுமை
  3. உவமை
  4. சிலேடை

விடை : சிலேடை

II. சிறு வினா

1. பிறிது மொழிதல் அணியை விளக்கி எடுத்துக்காட்டுத் தருக.

உவமையை மட்டும் கூறி, பொருளை பெற வைப்பது பிறிது மொழிதல் அணி எனப்படும்.(எ.கா.)கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்துதேர் கடலில் ஓடாது, கப்பல் நிலத்தில் ஓடாது” என்று உவமையை மட்டும் கூறு எதுவும் தமக்குரிய இடத்தில் இருப்பதே நல்லது என்ற பொருளை பெற வைத்தால் இது பிறிது மொழிதல் அணி ஆயிற்று.

2. வேற்றுமை அணி என்றால் என்ன?

இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையணி எனப்படும்.

3. இரட்டுறமொழிதல் அணி எவ்வாறு பொருள் தரும்?

ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது இரட்டுற மொழிதல் ஆகும்.சான்று:-தாமரைவிளக்கம்:-தாமரை – ஒருவகை மான், தாவும் மான்

கூடுதல் வினாக்கள்

1. வேற்றுமை அணி சான்றுடன் விளக்குக

இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையணி எனப்படும்.சான்று:-தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.விளக்கம்:-தீயும் நாவும் சுடம் தன்மையில் ஒப்புமையாகக் கூறப்பட்ட பொருள்கள்அவற்றுள் “ஆறாதே நாவினால் சுட்ட வடு” என வேறுபடுத்தி கூறியிருப்பதால் இது வேற்றுமை அணி ஆகும்.

2. இரட்டுறமொழிதல் அணி சான்றுடன் விளக்குக

ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது இரட்டுற மொழிதல் ஆகும்.சான்று:-குளத்திலும் காட்டிலும் தாமரை உள்ளதுவிளக்கம்:-குளத்திலும் காட்டிலும் தாமரை மலர் உள்ளதுகுளத்திலும் காட்டிலும் தாவும் மான் உள்ளதுஇவ்வாறு இரு பொருள்ட வருவதால் இரட்டுற மொழிதல் அணி ஆயிற்று

மொழியை ஆள்வோம்!

I. கோடிட்ட இடங்களைப் பொருத்தமான சொற்களால் நிரப்புக.

1. சிறுமி _______________ (தனது/தமது) கையில் மலர்களை வைத்திருந்தாள்.

விடை : தனது

2. அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத் _______________ ( தனது/தமது) உழைப்பை நல்கினார்.

விடை : தனது

3. உயர்ந்தோர் _______________ (தம்மைத்தாமே/தன்னைத்தானே) புகழ்ந்து கொள்ள மாட்டார்கள்.

விடை : தம்மைத்தாமே

4. இவை _______________ (தான்/தாம்) எனக்குப் பிடித்த நூல்கள்.

விடை : தாம்

5. குழந்தைகள் _______________ (தன்னால்/தம்மால்) இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்கின்றனர்.

விடை : தம்மால்

II. தொடரில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.

முதியவர் ஒருவர் தனது கால்களில் செருப்பில்லாமல் தன்னால் இழுக்க முடியாத வண்டியை இழுத்துச் சென்றார். அதனைக் கண்ட கிருஷ்ணா தம்முடைய சித்தப்பாவிடம் அவருடைய காலணிகளைக் கொடுக்குமாறு கூறினாள். அவரிடம் விலையுயர்ந்த காலணிகள்தான் இருந்தன. எனவே, தனது வேறு காலணிகளைப் பிறகு தருவதாகச் சித்தப்பா கூறினார்.

விடை:-

முதியவர் ஒருவர் தனது கால்களில் செருப்பில்லாமல் தன்னால் இழுக்க முடியாத வண்டியை இழுத்துச் சென்றார். அதனைக் கண்ட கிருஷ்ணா தன்னுடைய சித்தப்பாவிடம் அவருடைய காலணிகளைக் கொடுக்குமாறு கூறினான். அவரிடம் விலையுயர்ந்த காலணிகள்தான் இருந்தன. எனவே, தமது வேறு காலணிகளைப் பிறகு தருவதாகச் சித்தப்பா கூறினார்.

மொழியோடு விளையாடு

இருவினாக்களுக்கும் ஒரு விடை தருக.

1. குழம்பும் கூட்டும் மணப்பது ஏன்? குருதி மிகுதியாய்க் கொட்டுவது ஏன்?

விடை : பெருங்காயத்தால்

2. ஆடை நெய்வது எதனாலே? அறிவைப் பெறுவது எதனாலே?

விடை : நூல்

3. மாடுகள் வைக்கோல் தின்பது எங்கே? மன்னர்கள் பலரும் இறந்தது எங்கே?

விடை : போர்

4. கதிரவன் மறையும் நேரம் எது? கழுத்தில் அழகாய்ச் சூடுவது எது?

விடை : மாலை

5. வானில் தேய்ந்து வளர்வது எது? வாரம் நான்கு கொண்டது எது?

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

விடை : திங்கள்

நிற்க அதற்குத் தக…

கலைச்சொல் அறிவோம்.

  1. குறிக்கோள் – Objective
  2. பல்கலைக்கழகம் – University
  3. நம்பிக்கை – Confidence
  4. ஒப்பந்தம் – Agreement
  5. முனைவர் பட்டம் – Doctorate
  6. அரசியலமைப்பு – Constitution
  7. வட்ட மேசை மாநாடு – Round Table Conference
  8. இரட்டை வாக்குரிமை – Double voting

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *