Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 9th Tamil Books Chapter 1 1

Samacheer Kalvi 9th Tamil Books Chapter 1 1

தமிழ் : இயல் 1 : அமுதென்று பேர்

உரைநடை: திராவிட மொழிக்குடும்பம்

I. குறு வினா

1. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?

நாங்கள் பேசும் மொழி தமிழ் மொழி. தமிழ் மொழி இந்திய மொழிக் குடும்பத்தில் திராவிட மொழிகள் வகையைச் சார்ந்தது.

II. சிறு வினா

1. திராவிடமொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.

திராவிடமொழிகளின் பிரிவுகள்

  • தென்திராவிட மொழிகள்
  • நடுத் திராவிட மொழிகள்
  • வட திராவிட மொழிகள்

தமிழின் தனித்தன்மைகள்

  1. தொன்மையும் இலக்கண இலக்கிய வளமும் உ டையது தமிழ் மொழியாகும்.
  2. இலங்கை, மலேசியா , சிங்கப்பூர், உள்ளிட்ட பல நாடுகளிலும் பேசபப்டும் பெருமையுடைது தமிழ்
  3. பிற திராவிட மொழிகளை விட தனித்த  இலக்கண வளத்தை கொண்டு தனித்தியங்கும் ஆற்றல் உடையது தமிழ்
  4. பிறமொழிகளின் தாக்கம் இல்லாத மொழி தமிழ் மொழியாகும்

2. மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?

  • மூணு – மலையாளம்
  • மூரு – கன்னடம்
  • மூடு – தெலுங்கும்
  • மூஜி – துளு

III. நெடு வினா

திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க.

திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்கு தமிழே பெருந்துணையாக இருக்கிறது.

“தமிழ்” என்ற சொல்லில் இருந்து “திராவிடா” என்ற சொல் பிறந்தது என்பதை ஹீராஸ் பாதிரியார் தமிழ் – தமிழா – தமிலா – டிரமிலா – ட்ரமிலா – த்ராவிடா – திராவிடா என்று விளக்குகிறார்.

பிரான்சிஸ் எல்லீஸ் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய ஒரே இனம் என்றார்.

ஹோக்கன், மாச்சுமல்லர் ஆகியோர் திராவிட மொழிகள் ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டவை என்பார்.

கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலில் திராவிட மொழிகள் ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டவை என்றார்.

சமஸ்கிருதத்திற்குள்ளும் திராவிட மொழிகள் செல்வாக்கு செலுத்தியது என்றார்.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. திராவிட மொழிகளுள் ___________ தமிழ்.

விடை : மூத்த மொழி

2. தமக்குத் தோன்றிய கருத்துகளைப் பிறருக்கு உணர்த்த மனிதன் கண்டுபிடித்த கருவி ___________

விடை : மொழி

3. திராவிடம் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் ___________ .

விடை : குமரிலபட்டர்

4. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை ___________ க்கும் மேற்பட்டது.

விடை : 1300

5. வினைச்சொற்கள் காலத்தை மட்டுமே காட்டும் மொழி ___________

விடை : ஆங்கிலம்

6. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர் ___________

விடை : கால்டுவெல்

7. திராவிட மொழிகள் மொத்தம் ________ எனக் கூறுவர்

விடை : 28

8. தமிழ் மொழி, திராவிட மொழிகள் சிலவற்றின் ___________  கருதப்படுகிறது.

விடை : தாய் மொழியாகக்

9. தமிழ் மொழியில் பழமையான இலக்கண நூல் ___________

விடை : தொல்காப்பியம்

10. மலையாள மொழியில் பழமையான இலக்கண நூல் ___________

விடை : லீலாதிலகம்

II. பொருத்துக

1. தமிழ்அ. லீலா திலகம்
2. கன்னடம்ஆ. ஆந்திர பாஷா பூஷனம்
3. தெலுங்குஇ. தொல்காப்பியம்
4. மலையாளம்ஈ. கவிராஜ மார்க்கம்

விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ

III. குறு வினா

1. எத்தகைய ஆற்றல் தமிழுக்கு உண்டு?

எத்தகைய கால மாற்றத்திலும் எல்லாப் புதுமைகளுக்கும் ஈடுகொடுத்து இயங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு.

2. யார் செம்மொழித் தமிழின் சிறப்பைத் தரணியெங்கும் எடுத்துரைத்து மகிழ்ந்தனர்?

தமிழாய்ந்த அயல்நாட்டறிஞர் செம்மொழித் தமிழின் சிறப்பைத் தரணியெங்கும் எடுத்துரைத்து மகிழ்ந்தனர்

3. மொழிகள் எவ்வாறு உருவாகின?

மனிதஇனம் வாழ்ந்த இடஅமைப்பும் இயற்கை அமைப்பும் வேறுபட்ட ஒலிப்பு முயற்சிகளை உருவாக்கத் தூண்டின. இதனால் பல மொழிகள் உருவாயின.

4. இந்திய நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்று கூறியவர் யார்?

ச. அகத்தியலிங்கம்

5. உலகின் குறிப்பிடத்தக்க, பழைமையான நாகரிகங்களுள் இந்திய நாகரிகமும் ஒன்றென எவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் குறிப்பிடத்தக்க, பழைமையான நாகரிகங்களுள் இந்திய நாகரிகமும் ஒன்று. மொகஞ்சதாரோ – ஹரப்பா அகழாய்வுக்குப் பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

6. கால்டுவெல் எழுதிய நூல் பெயரென்ன?

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856)

7. கால்டுவெல் – தமிழ்மொழி பற்றிய கூறிய கூற்றினை எழுது.

தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி; சமஸ்கிருத கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்.

8. பணத்தாளில் தமிழ்மொழி இடம் பெற்றுள்ள நாடுகள் எவை?

மொரிசியஸ், இலங்கை

9. அண்மையில் சேர்க்கப்பட்ட திராவிட மொழிகள் யாவை?

  • எருகலா
  • தங்கா
  • குறும்பா
  • சோழிகா

10. தென்னிந்திய மொழிகள் என பிரான்சிஸ் எல்லிஸ் குறிப்பிடுவை எவை?

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்

11. தமிழியன் மொழிகள் என ஹோக்கன் குறிப்பிடும் மொழிகள் எவை?

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மால்தோ, தோடா, கோண்டி

12. வட திராவிட மொழிகள் யாவை?

  • குரூக்
  • மால்தாே
  • பிராகுய் (பிராகுயி)

IV. சிறு வினா

1. திராவிட மொழிகளை கால்டுவெல்லுக்குப் பின்னர் ஆய்வு செய்தோர்கள் யார்?

  • ஸ்டென்கனோ
  • கே.வி.சுப்பையா
  • எல்.வி.இராமசுவாமி
  • பரோ
  • எமினோ
  • கமில்
  • சுவலபில்
  • ஆந்திரனோவ்
  • தெ.பொ.மீனாட்சி சுந்தரம்

2. மொழிக்குடும்பங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டன? அதன் பிரிவுகள் யாவை?

உலகத்திலுள்ள மொழிகளெல்லாம் அவற்றின் பிறப்பு , தொடர்பு, அமைப்பு, உறவு ஆகியவற்றின் அடிப்படையில் மொழிக்குடும்பங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.இவை நான்கு வகையா பிரிக்கப்பட்டனஇந்தோ – ஆசிய மொழிகள்திராவிட மொழிகள்ஆஸ்திரோ ஆசிய மொழிகள்சீன – திபெத்திய மொழிகள்

3. தென் திராவிட மொழிகள் யாவை?

  • தமிழ்
  • மலையாளம்
  • கன்னடம்
  • குடகு (காெடகு)
  • துளு
  • காேத்தா
  • தாேடா
  • காெரகா
  • இருளா

4. நடுத் திராவிட மொழிகள் யாவை?

  • தெலுங்கு
  • கூயி
  • கூவி (குவி)
  • காேண்டா
  • காேலாமி (காெலாமி)
  • நாய்க்கி
  • பெங்காே
  • மண்டா
  • பர்ஜி
  • கதபா
  • காேண்டி
  • காேயா

5. திராவிட நாகரிகம், திராவிட மொழி குறித்து கூறு

  • உலகின் பழமையான நாகரிகங்களில் இந்திய நாகரிகமும் ஒன்று
  • மொகஞ்சதாரா – ஹரப்பா நாகரித்திற்குப் பிறகு இது உறுதிப்படுத்துப்பட்டுள்ளது.
  • இதைத் திராவிட நாகரிகம் என்று கருதுகின்றனர்.
  • திராவிடர் பேசிய மொழியே திராவிட மொழி எனப்படுகின்றது.

6. சில திராவிட மொழிகளின் பழமையான இலக்கிய இலக்கணங்கள் சிலவற்றை எழுதுக

தமிழ்

இலக்கியம்காலம்இலக்கணம்காலம்சான்று
சங்க இலக்கியம்பொ.ஆ.மு. 5 – பொ.ஆ. 2ஆம் நூற்றாண்டு அளவில்தொல்காப்பியம்பொ.ஆ.மு. 3ஆம் நூற்றாண்டு அளவில்தமிழ் இலக்கிய வரலாறு (மு.வ.) சாகித்திய அகாதெமி

கன்னடம்

இலக்கியம்காலம்இலக்கணம்காலம்சான்று
கவிராஜ மார்க்கம்பொ.ஆ. 9ஆம் நூற்றாண்டுகவிராஜ மார்க்கம்பொ.ஆ. 9ஆம் நூற்றாண்டுஇந்திய இலக்கணக் கொள்கைகளின் பின்னணியில் தமிழ் இலக்கணம் – செ. வை. சண்முகம்

தெலுங்கு

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
இலக்கியம்காலம்இலக்கணம்காலம்சான்று
பாரதம்பொ.ஆ. 11ஆம் நூற்றாண்டுஆந்திர பாஷா பூஷணம்பொ.ஆ. 12ஆம் நூற்றாண்டுஇந்திய இலக்கணக் கொள்கைகளின் பின்னணியில் தமிழ் இலக்கணம் – செ. வை. சண்முகம்

மலையாளம்

இலக்கியம்காலம்இலக்கணம்காலம்சான்று
ராம சரிதம்பொ.ஆ. 12ஆம் நூற்றாண்டுலீலா திலகம்பொ.ஆ. 15ஆம் நூற்றாண்டுமலையாள இலக்கிய வரலாறு – சாகித்திய அகாதெமி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

1 thought on “Samacheer Kalvi 9th Tamil Books Chapter 1 1”