Samcheer Kalvi 6th Tamil Books Chapter 2 5

Last Updated on: January 3, 2026 by VirkozKalvi

தமிழ் : பருவம் 1 இயல் 2 : இயற்கை

இலக்கணம்: முதலெழுத்தும் சார்பெழுத்தும்

I. சிறுவினா

1. முதல் எழுத்துகள் என்பவை யாவை? அவை எதனால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?

உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும்.

பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்பர்.

2. சார்பெழுத்துகள் எத்தனை? அவை யாவை?

சார்பெழுத்துகள். இவை பத்து வகைப்படும்.

உயிர்மெய்
ஆய்தம்
உயிரளபெடை
ஒற்றளபெடை
குற்றியலிகரம்
குற்றியலுகரம்
ஐகாரக்குறுக்கம்
ஒளகாரக்குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்

3. சொற்களில் ஆய்த எழுத்து எவ்வாறு இடம்பெறும்?

தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தன க்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும். தனித்து இயங்காதுஉயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும்.

II. சிந்தனை வினா

1. உயிர்மெய், ஆய்தம் இவை இரண்டும் சார்பு எழுத்துகளாகக் கூறப்படக் காரணம் தருக

உயிர்மெய் எழுத்துகள்

மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின.

முதல் எழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்கும்.

ஆய்த எழுத்து

தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும். தனித்து இயங்காது.

முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்

முதல் எழுத்துகள் சார்பு எழுத்துகள் – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் __________________

விடை : சார்பெழுத்துகள்

2. _____________________ பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன

விடை : முதல் எழுத்துகள்

3. உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் _____________________ சேர்ந்ததாக இருக்கும்.

விடை : மெய்யும் உயிரும்

4. மூன்று புள்ளிகளை உடைய _____________________ தனித்த வடிவம் பெற்றது.

விடை : ஆய்த எழுத்து

5. _____________________ தனித்து இயங்காது.

விடை : ஆய்த எழுத்து

6. உயிர் எழுத்துகள் _____________________ 

விடை : பன்னிரண்டு

7. மெய்யெழுத்துகள் _____________________ 

விடை : பதினெட்டு

8. உயிர்மெய் எழுத்துக்கள் _____________________ 

விடை : இருநூற்றி பதினாறு

II. சேர்த்து எழுதுக

  1. சார்பு  + எழுத்து = சார்பெழுத்து
  2. முதல் + எழுத்து = முதெலழுத்து
  3. உயிர் +எழுத்து = உயிரெழுத்து
  4. மெய் + எழுத்து = மெய்யெழுத்து
  5. குறுமை + இயல் + உகரம் = குற்றியலிகரம்

III. பிரித்து எழுதுக

  1. உயிர்மெய் = உயிர் + மெய்
  2. தனிநிலை = தனி + நிலை
  3. முப்புள்ளி = மூன்று + புள்ளி
  4. உயிரளபெடை = உயிர் + அளபடை
  5. ஐகாரக்குறுக்கம் = ஐகாரம் + குறுக்கம்

IV, சிறுவினா

1. எழுத்துகள் எத்தனை வகைப்படும்?

எழுத்துகள் இரண்டு வகைப்படும்

1. முதல் எழுத்து, 2. சார்பு எழுத்து

2. உயிர்மெய் எழுத்துக்கள் எவ்வாறு சார்பெழுத்தினுள் அடங்கும்?

உயிர்மெய் எழுத்துக்கள் முதல் எழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்கும்

3. உயிர்மெய் எழுத்தின் வரி வடிவம் எதனை ஒத்திருக்கும்?

உயிர்மெய் எழுத்தின் வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும்.

4. உயிர்மெய் எழுத்தின் ஒலிக்கும் கால அளவு எதனை ஒத்திருக்கும்?

உயிர்மெய் எழுத்தின் ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும்.

5. ஆய்த எழுத்தின் வேறு பெயர்கள் யாவை?

முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை

6. ஆய்த எழுத்து எவ்வாறு சார்பெழுத்து ஆகும்?

முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்.

V, குறுவினா

1. உயிர்மெய் எழுத்துக்கள் குறிப்பு வரைக

  • மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன.
  • உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்.
  • வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும்.
  • முதல் எழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்கும்.

2. ஆய்தம் எழுத்து – குறிப்பு வரைக

  • மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது.
  • முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு.
  • நுட்பமான ஒலிப்புமுறையை உடையது.
  • தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
  • தனித்து இயங்காது.
  • முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top