Samcheer Kalvi 6th Tamil Books Chapter 9 2

Last Updated on: January 3, 2026 by VirkozKalvi

தமிழ் : பருவம் 3 இயல் 3 : இன்னுயிர் காப்போம்

உரைநடை: மனிதநேயம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல்

  1. மனித வாழ்க்கை
  2. மனித உரிமை
  3. மனிதநேயம்
  4. மனித உடைமை

விடை : மனிதநேயம்

2. தம் பொருளை கவர்ந்தவரிடமும் _______________ காட்டியவர் வள்ளலார்.

  1. கோபம்
  2. வெறுப்பு
  3. கவலை
  4. அன்பு

விடை : அன்பு

3. அன்னை தெராசாவிற்கு _______________ க்கான ‘நோபல் பரிசு கிடைத்தது

  1. பொருளாதாரம்
  2. இயற்பியல்
  3. மருத்துவம்
  4. அமைதி

விடை : அமைதி

4. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்

  1. குழந்தைகளை பாதுகாப்போம்
  2. குழந்தைகளை நேசிப்போம்
  3. குழந்தைகள் உதவி மையம்
  4. குழந்தைகளை வளர்ப்போம்

விடை : குழந்தைகளை பாதுகாப்போம்

II. பொருத்துக

1. வள்ளலார்அ. நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்
2. கைலாஷ் சத்யார்த்திஆ. பசிப்பிணி போக்கியவர்
3. அன்னை தெராசாஇ. குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்

விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ

III. சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. மனிதநேயம்

  • அனைவரிடம் மனிதமாண்பு மலர வைப்பதே மனிதநேயம்

2. உரிமை

  • சுதந்திரம் அனைவருக்கும் பிறப்பு உரிமை

3. அமைதி

  • அன்னை தெராசாவிற்கு அமைதிக்கான ‘நோபல் பரிசு கிடைத்தது

4. அன்பு செய்தல்

  • வள்ளலார் தம் பொருளை கவர்ந்தவரிடமும் அன்பு செய்தல் வேண்டும் என நினைத்தார்

IV. குறுவினா

1. யாரால் உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது?

மனித நேயத்துடன் வாழ்பவர்களால் தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது?

2. வள்ளலார் பசிப்பிணியை நீக்க என்ன செய்தார்?

வள்ளலார் பசிப்பிணியை பாேக்க வடலூரில் சத்திய தருமச் சாலையைத் தொடங்கி எல்லாருக்கும் உணவளித்தார்

3. அன்னை தெரசா கண்ணீர் விடக் காரணம் யாது?

ஒரு நாள் அன்னை தெரசா சாலையின் ஓரமாக நடந்து சென்றார். அப்போது வழியல் மூதாட்டி ஒருவர் சாலையின் ஓரம் படுத்திருந்தார். அவர்முகத்தை துணியால் மூடி இருந்தார். ஒரு கையால் பூனைக்குட்டியை அணைத்துக் கொண்டு இருந்தார்.அன்னை தெரசா அவரின் அருகில் சென்று உற்று நோக்கினார். தொழுநோயின் கடுமையால் உண்டான வேதனை மூதாட்டியன் முகத்தில் தெரிந்தது. கைகளில் விரல்கள் இல்லை.அன்னைதெராசா மனம் கலங்கினார். மூதாட்டியின் அருகில் சென்று அவரை தொட்டு தூக்கினார். சாலை ஓரத்தில் படுத்து இருப்பது ஏன்? எனக் கேட்டார்.என்னைத் தொடாதீர்கள். என் நோய் உங்களுக்கும் தொற்றிக் கொள்ளும் என உறவினர்கள் என்னை வெறுத்து விலக்கி விட்டனர். என்னுடன் பேசுவதில்லை.என்னைக் கண்டாலே விலகி ஓடுகின்றனர். இந்த பூனை மட்டும் என்னுடன் இருக்கிறது என அழுதாள் மூதாட்டி. இதைக் கேட்ட அன்னை தெராசா கண்ணீர் விட்டார்.

V. சிறுவினா

கைலாஷ் சத்யார்த்தி நாேபல் பரிசு பெறத் தூண்டுகோலாக அமைந்த இளமைக்கால நிகழ்வு யாது?

கைலாஷ் சத்யார்த்தி சிறுவயதில் தினமும் பள்ளிக்கூடம் செல்லும் பொழுது சாலையோரத்தில் ஒரு சிறுவனைக் காண்பார். அவன் தந்தையுடன் அமர்ந்து வேலை செய்து கொண்டிருப்பான்.ஏன் அந்தச் சிறுவன் தன்னைப்போல் பள்ளிக்கு வரவில் என்ற கேள்வி அவர் உள்ளத்தில் உறுத்திக் கொண்டே இருந்தது. தன் ஆசிரியரிடமும் பெற்றோரிடமும் இக்கேள்வியைக் கேட்டார். “பணம் இல்லாததால் அச்சிறுவன் பள்ளிக்கு வரவில்லை.வீட்டின் உணவுத் தேவையை நிறைவு செய்யப் பணம் வேண்டும். எனவே அவன் பணம் ஈட்ட வேலை பார்க்கிறான்” என்ற பதில் கிடைத்தது. அந்த பதில் அவருக்கு மிகுந்த மன வருத்தத்தைக் கொடுத்தது.இதுவே கைலாஷ் சத்யார்த்தி நாேபல் பரிசு பெறத் தூண்டுகோலாக அமைந்த இளமைக்கால நிகழ்வு ஆகும்.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மனிதன் தனக்கென வாழாமல் ____________________ வாழ வேண்டும்

விடை : பிறர்க்கென

2. “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என ____________________ கூறினார்

விடை : வள்ளலார்

3. பள்ளி செல்லா குழந்தைகளுக்காக கைலாஷ் சத்யார்த்தி ____________________  என்னும் இயக்கத்தைத் தாெடங்கினார்

விடை : குழந்தைகளைப் பாதுகாப்போம்

4. குழந்தைகளை தொழிலாளர்களாக மாற்றுவது ____________________ எதிரான குற்றமாகும்.

விடை : மனிதத் தன்மைக்ககு

5. சத்திய தருமச்சாலை என்னும் அமைப்பைத் தொடங்கியவர் ____________________

விடை : வள்ளலார்

II. குறுவினா

1. மனிதன் தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ வேண்டுமெனில் தேவையானவை எவை?

  • அருள்
  • பொறுமை
  • பரிவு
  • நன்றி
  • உணர்வு
  • இன்சொல் பேசுதல்

2. மனித நேயம் என்றால் என்ன?

எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துதல் வேண்டும். அதுவே மனிதநேயம் ஆகும்

3. அன்னைதெரசாவிற்கு நோபல்பரிசு தேடிவரக் காரணம் யாது?

மக்களுக்குச் செய்யும் பணியே இறைவனுக்குச் செய்யும் பணி என்று வாழந்த காரணத்தினால் அமைதிக்கான நாேபல் பரிசு தேடிவரக் காரணம்

4. “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்”  என்ற அடிகளை எழுதியவர் யார்?

வள்ளலார்

5. வாழ்கையை பற்றி அன்னை தெராசாவின் பொன்மொழியை கூறுக

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை

6. கைலாஷ் சத்யார்த்தி குழந்தை தொழிலாளர் பற்றி கூறிய கருத்து யாது?

குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம். உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது.

IV. சிறுவினா

1. மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
என்ற உண்மையை கூறும் புறநானூறு அடிகளை எழுதுக.

மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த உண்மையை,

தமக்கென முயலா நோன்றாள் – பிறர்க்கென
முயலுநர் உண்மையானே (புறம் – 182)

என்னும் புறநானூற்று அடிகள் உணர்த்துகின்றன.

2. குழந்தை தொழிலாளர்களுக்காக கைலாஷ் சத்யார்த்தி ஆற்றிய பணிகளை எழுதுக?

குழந்தைகளைப் பாதுகாப்போம் என்னும் இயக்கத்தைத் தொடங்கினார்.

அந்த இயக்கத்தின் மூலம் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கப் பாடுபட்டு வருகிறார்.

கடந்த முப்பது ஆண்டுகளில் எண்பத்து ஆறாயிரம் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுள்ளார்.

உலகக் குழந்தைகள் கல்வி உரிமைக்காக 103 நாடுகளில் 80,000 கி.மீ தூரம் நடைப்பயணம் சென்றுள்ளார்.

குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைக்காக நாடு கடந்து பரப்புரை ஆற்றி வருகிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top