Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 7th Science Books Tamil Medium Cell Biology

Samcheer Kalvi 7th Science Books Tamil Medium Cell Biology

அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 4 : செல் உயிரியல்

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் 

1. உயிரினங்களின் அடிப்படையாக உள்ளது 

அ) செல் 

ஆ) புரோட்டோப் பிளாசம் 

இ) செல்லுலோஸ் 

ஈ) உட்கரு

விடை : அ) செல் 

2. நான் ஒரு விலங்கு செல்லின் வெளிப்புற அடுக்கு நான் யார்? 

அ) செல் சுவர் 

ஆ) உட்கரு

இ) செல் சவ்வு 

ஈ) உட்கரு சவ்வு

விடை : இ) செல் சவ்வு 

3. செல்லின் மூளையாகச் செயல்படும் செல்லின் பாகம் எது? 

அ) லைசோசோம்

ஆ) ரைபோசோம் 

இ) மைட்டோகாண்ட்ரியா

ஈ) உட்கரு

விடை : ஈ) உட்கரு 

4. __________ செல் பகுப்பிற்கு உதவுகிறது. 

அ) எண்டோபிளாஸ்மிக் வளை

ஆ) கோல்கை உறுப்புகள் 

இ) சென்ட்ரியோல்

ஈ) உட்கரு

விடை : ஈ) உட்கரு 

5. செல்லின் பல்வேறு உறுப்புகளுக்குப் பொருத்தமான அறிவியல் சொல் __________ 

அ) திசு

ஆ) உட்கரு 

இ) செல்

ஈ) செல் நுண்உறுப்பு

விடை : ஈ) செல் நுண்உறுப்பு 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. செல்லில் உள்ள ஜெல்லி போன்ற பொருள் __________ என்று அழைக்கப்படுகிறது. 

விடை : சைட்டோபிளாசம்

2. நான் தாவரத்தில் சூரிய ஆற்றலை உணவாக மாற்றுவேன் நான் யார்? 

விடை : பசுங்கணிகம்

3. முதிர்ந்த இரத்தச் சிவப்பு செல்லில் __________ இல்லை. 

விடை : உட்கரு

4. ஒரு செல் உயிரினங்களை __________ மூலமே காண இயலும். 

விடை : நுண்ணோக்கி

5. சைட்டோபிளாசம் + உட்கரு = __________

விடை : புரோட்டோபிளாசம்

III. சரியா அல்லது தவறா எனக்கூறு – தவறானவற்றிற்கு சரியான பதிலைக் கொடுக்கவும் 

1. விலங்கு செல்களில் செல் சுவர் உள்ளது.

விடை : தவறு 

விலங்கு செல்களில் செல்சுவர் இல்லை. 

2. சால்மோனெல்லா என்பது ஒரு செல்லால் ஆன பாக்டீரியா ஆகும்.

விடை : சரி 

3. செல் சவ்வு அனைத்தையும் ஊடுருவ அனுமதிக்கக்கூடியது.

விடை : தவறு 

தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை மட்டும் அனுமதிக்கும் 

4. தாவர செல்களில் மட்டுமே பசுங்கணிகங்கள் உள்ளன.

விடை : சரி 

5. மனித வயிறு ஒரு உறுப்பாகும்.

விடை : சரி 

6. ரைபோசோம் ஒரு சவ்வுடன் கொண்ட சிறிய நுண் உறுப்பு ஆகும்.

விடை : தவறு 

சவ்வு கிடையாது 

IV. பொருத்துக.

1. கடத்தும் கால்வாய் – அ. உட்கரு 

2. தற்கொலைப் பை – ஆ. எண்டோபிளாச வலைப்பின்னல்

3. கட்டுப்பாடு அறை – இ. லைசோசோம்

4. ஆற்றல் மையம் – ஈ. பசுங்கணிகம் 

5. உணவு தயாரிப்பாளர் – உ. மைட்டோகாண்டிரியா

விடைகள் :

1. கடத்தும் கால்வாய் – ஆ. எண்டோபிளாச வலைப்பின்னல் 

2. தற்கொலைப் பை – இ. லைசோசோம்

3. கட்டுப்பாடு அறை – அ. உட்கரு 

4. ஆற்றல் மையம் – உ. மைட்டோகாண்டிரியா

5. உணவு தயாரிப்பாளர் – ஈ. பசுங்கணிகம் 

V. ஒப்புமை

1. பாக்டீரியா: நுண்ணுயிரி :: மா மரம் : __________

     விடை : உயிரினம்

2. அடிப்போஸ் : திசு : கண் : __________

விடை : உறுப்பு

3. செல் சுவர் : தாவரம் :: சென்ட்ரியோல் : __________

விடை : விலங்கு

4. பசுங்கணிகம் : ஒளிச்சேர்க்கை :: மைட்டோகாண்ட்ரியா : __________

     விடை : ஆற்றல் மையம்

VI. பின்வருவதில் இருந்து சரியான மாற்றியத்தைத் தேர்வு செய்யவும்

1. வலியுறுத்தல் (A) : திசு என்பது மாறுபட்ட செல்களைக் கொண்ட ஒரு குழு.

காரணம் (R) : தசைத் திசு தசை செல்களால் ஆனது. 

அ) A மற்றும் R இரண்டும் சரியானவை 

ஆ) A மற்றும் R ஆகிய இரண்டும் தவறானவை 

இ) A சரி ஆனால் R தவறானது 

ஈ) A தவறு ஆனால் R சரியானது

விடை : இ) A சரி ஆனால் R தவறானது

2. வலியுறுத்தல் (A) : பெரும்பான்மை செல்களை நேரடியாக வெறும் கண் கொண்டு பார்க்க முடியாது ஏனெனில் 

காரணம் (R) : செல்கள் மிக நுண்ணியது 

அ) A மற்றும் R இரண்டும் சரியானவை 

ஆ) A மற்றும் R ஆகிய இரண்டும் தவறானவை 

இ) A சரி ஆனால் R தவறானது

ஈ) A தவறு ஆனால் R சரியானது

விடை : அ) A மற்றும் R இரண்டும் சரியானவை

VII. மிகச் சிறிய விடையளி

1. தாவர செல்லில் செல் சுவரின் பணிகள் யாவை?

செல் சுவர் தாவர செல்லிற்கும் பாதுகாப்பு மற்றும் உறுதிப் பாட்டிற்கான சட்டகமாகச் செயப்படுகிறது. 

2. சூரியனின் ஒளி ஆற்றலைப் பயன்படுத்தி ஸ்டார்ச் தயாரிக்கும் நுண் உறுப்பு எது?

சூரியனின் ஒளி ஆற்றலைப் பயன்படுத்தி ஸ்டார்ச் தயாரிக்கும் நுன் உறுப்பு பசுங்கணிகம் 

3. உட்கருவில் உள்ள முக்கிய பொருள்கள் யாவை? 

ஒன்று அல்லது இரண்டு நியூக்ளியோலஸ் மற்றம் குரோமேட்டின் உடல் 

4. செல் சவ்வு என்ன செய்கிறது? 

செல் சவ்வு அரிதி கடத்தியாகும். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள்களை மட்டுமே செல்லிற்குள்ளேயும், வெளியேயும் செல்ல அனுமதிக்கின்றன. 

5. லைசோஸோம், செல்களின் துப்புரவாளர்கள் என ஏன் அழைக்கப்படுகிறது? 

• லைசோசோம் செல்லின் முதன்மையான செரிமான பகுதி ஆகும்.

• இவை செல்லிலேயே சிதைவடைவதால் இவற்றை தற்கொலைப்பை என அழைக்கிறோம். 

6. “ஒரு வைரஸ் ஒரு உயிரினம் அல்ல” என ஆசிரியர் கூறினார். நீங்கள் அவரது கூற்றினை ஏற்றுக் கொள்கிறீர்களா? இல்லையா? ஏன் என விளக்குக. 

வைரஸ் ஒரு உயிரினம் அல்ல – கூற்று ஏற்றுக் கொள்ளத்தக்கது. 

காரணம் : வைரஸால் உயிருள்ள செல்லின் உள்ளே மட்டுமே இனப்பெருக்கம் செய்ய முடியும். செல்லுக்கு வெளியே இனப்பெருக்கம் செய்ய இயலாது. எனவே அதனை ஒரு உயிரினமாக கருத முடியாது.

VIII. குறுகிய விடையளி 

1. செல் நமக்கு ஏன் மிக முக்கியம்?

• செல்கள் என்பது உயிரினங்களின் அடிப்படைக் கட்டுமான பொருளாகும். 

• நமது உடல் பலவிதமான செல்களால் உருவாக்கப்பட்டுள்ளது..

• ஒவ்வொரு வகை செல்லும் ஒரு குறிப்பிட்ட செயலை செய்யும் திறனுள்ளது. 

2. பின்வரும் ஜோடிகளுக்கு இடையே உள்ள வேறுபாடு தருக. 

i) சொரசொரப்பான எண்டோபிளாச வலைப்பின்னல் மற்றும்  மென்மையான எண்டோபிளாச வலைப்பின்னல் 

ii) செல் சுவர் மற்றும் செல் சவ்வு 

iii) பசுங்கணிகம், மைட்டோகாண்ட்ரியா

சொரசொரப்பான எண்டோபிளாச வலைப்பின்னல்

1. ரிபோசோம் உள்ளது

2. புரத உற்பத்திக்கு உதவுகிறது

செல்சுவர் 

      1. தாவர செல்லின் வெளியுறச் சுவராக உள்ளது

      2. தாவர செல்லிற்குப் பாதுகாப்பு மற்றும் உருதிப்பட்டிற்கான சட்டமாக செயல்படுகிறது 

பசுங்கணிகம்

   1. தாவர செல்லில் மற்றும் உள்ளது

   2. ஒளிச் சேர்க்கையின் போது உணவு தயாரித்தலில் பயன்படுகிறது

மென்மையான எண்டோபிளாச வலைப்பின்னல் 

  1. ரிபோசோம் இல்லை 

   2. கொழுப்பு, ஸ்டீராய்டுகள் தயாரிப்பிலும் கடத்தலிலும் உதவுகிறது

செல்சவ்வு 

   1. விலங்கு செல்லின் வெளிப்புற உரையாக உள்ளது

   2. செல் சவ்வு தேர்ந்தெடுக்கபட்ட பொருட்களை மட்டும் செல்லுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல அனுமதிக்கின்றன 

மைட்டோகாண்டிரியா

  1. தாவரம் மட்டும் விலங்கு செல்லில் உள்ளது

  2. ஆற்றல் மையமாக பயன்படுகிறது 

3. செல்லிலிருந்து உயிரினம் வரையிலான வரிசையை சரியாக எழுதுக?

செல் → திசுக்கள் → உறுப்பு → உறுப்பு மண்டலம் → உயிரினம் 

4. உட்கரு பற்றி சிறு குறிப்பு எழுதுக.  

• உட்கரு செல்லின் மூளையாகச் செயல்படுகிறது. 

• ஒன்று அல்லது இரண்டு நியூக்ளியோலஸ் மற்றும் குரோமேட்டின் உடல் ஆகியவை உட்கருவில் உள்ளன. 

• மரபு வழிப் பண்புகளை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது. 

5. பின்வரும் அட்டவணையில் செல்கள், திசுக்கள், உறுப்புக்கள் என வகைப்படுத்தவும், நரம்பு செல், நுரையீரல் சைலம், மூளை, கொழுப்புத்திசு, இலை, சிவப்பனு, வெள்ளையனு செல்கள், கை, தசை, இதயம், முட்டை , செதில், புளோயம், குருத்தெலும்பு. 

செல் திசு உறுப்பு

நரம்பு  கொழுப்பு நுரையீரல்

சிவப்பனு தசை மூளை

வெள்ளையனு சைலம் இலை 

முட்டை புளோயம் கை 

குருத்தெலும்பு இதயம்

6. கீழே உள்ள வரிகளில், இந்த பாடத்தில் நீங்கள் கற்றவற்றைப் பற்றி எழுதுங்கள் செல்களைப் பற்றி நான் கற்றுக்கொண்ட முக்கியமான சில விஷயங்களைப் பற்றி நான் உங்களிடம் கூற விரும்புகிறேன் முதலில் நான் தொடங்குகிறேன்……. 

• நமது உடல் செல்களால் ஆனது 

• ஒவ்வொரு வகை செல்லும் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்கிறது.

• செல்லினுள், உட்கருவும், செல் நுண்ணுறுப்புகளும் உள்ளது. 

1. செல் சவ்வு – தேர்ந்தெடுத்த பொருட்களை கடத்துவது 

2. செல் சுவர் – செல்லிற்கு பாதுகாப்பு மற்றும் புறச்சட்டமாக செயல்படுகிறது 

3. மைட்டோகாண்டிரியா – ஆற்றல் மையம் 

4. பசுங்கணிகம் – உணவு தயாரிப்பு 

5. உட்கரு – மரபுப் பொருள் கடத்தல் 

6. ரிபோசோம் – புரத உற்பத்தி 

IX. விரிவான விடையளி

1. ஏதேனும் மூன்று நுண்உறுப்புகளைப் பற்றி விவரிக்கவும்.

கோல்கை உறுப்புகள் : 

சவ்வால் சூழப்பட்ட கோல்கை உறுப்புகள் நொதிகளைச்’ சுரப்பது, உணவு செரிமானம் அடையச் செய்வது உணவிலிருந்து புரதத்தை பிரிந்து செல்லுக்கும் உடலுக்கும் வலு சேர்ப்பது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றன.

லைசோசோம் :

• இது நுண்ணோக்கியால் மட்டும் பார்க்கக் கூடிய முதன்மையான செரிமான பகுதி ஆகும். 

• இவை செல்லிலேயே சிதைவடைவதால் இவற்றை தற்கொலைப்பை என்று அழைக்கிறோம்.

சென்ட்ரியோல்: 

• குழாய் போன்ற அமைப்புகளால் ஆனவை. 

• இவை விலங்கு செல்லில் காணப்படவில்லை 

• செல் பகுப்பின் போது குரோமோசோம்களை பிரிக்க உதவுகிறது.

2. தாவர செல் மற்றும் விலங்கு செல்களை ஒப்பிட்டு கீழே உள்ளவற்றை நிறைவு செய்யுங்கள்

விலங்கு செல் 

1. செல்சுவர் கிடையாது

2. பசுங்கணிகம் கிடையாது

3 சென்ட்ரியோல் உண்டு

உட்கரு

1. உட்கரு தாவரசெல் மற்றும் விலங்கு செல் இரண்டிலும் காணப்படுகிறது. 

2. உட்கரு செல்பகுதியின் போது உதவுகிறது. மேலும் மரபுப்பண்புகளை ஒரு

சந்ததியிலிருந்து அடுத்த சந்ததிக்குக் கடத்துகிறது.

தாவர செல்

1. செல்சுவர் உண்டு

2. பகங்கணிகம் உண்டு 

3. சென்ட்ரியோல் கிடையாது.

X. உயர் சிந்தனை வினாக்கள் 

1. வைரஸ் செல்லற்றவை என்று அழைக்கப்படுகிறது ஏன்? 

• வைரஸ் செல்லற்றவை ஏனெனில் அது நியூக்ளிக் அமிலம், மற்றும் புரதம் ஆகியவற்றால் ஆனது. 

• உயிருள்ள செல்லின் உள்ளே வைரஸ் இனப்பெருக்கம் செய்து அந்த செல்லின் பணிகளை முற்றிலும் அழித்து தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும். 

• உயிருள்ள செல்லின் வெளியே வைரஸால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. செல்லுக்கு வெளியே வைரஸ் ஒரு உயிரற்ற துகளாகக் கருதப்படும்.

மாணவர் செயல்பாடு

செயல்பாடு :1 

நீங்கள், முந்தைய வகுப்பில் படித்ததை நினைவில் வைத்துக் கொள்ளுகிறீர்களா, ஒரு பொருள் உயிருள்ளவை அல்லது உயிரற்றவை என எவ்வாறு அறிவீர்கள் என்பதைப் பற்றி எழுதுங்கள்? 

1. ஒரு குழுவை உருவாக்குங்கள், உயிருள்ளவைகளின் செயல்களாக உங்கள் நினைவில் உள்ளவற்றை எழுதுங்கள் 

சுவாசித்தல், செரிமானம், உறிஞ்சுதல், இனப்பெருக்கம்

2. ஒரு தனிப்பட்ட செல் உயிரோடு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? உங்கள் பதிலை விளக்குங்கள்

உயிரணுக்கள் சுவாசிக்கின்றன, உணவை எடுத்துக் கொள்கின்றன மற்றும் இனப்பெருக்கம் செய்கின்றன

3. நீங்கள் அறிந்த செல்லின் சில நுண்ணுறுப்புகளைப் பற்றி எழுதுங்கள்

குளோரோபிளாஸ்ட், மைட்டோகாண்டிரியா, லைசோசோம், எண்டோபிளாச வலைப்பின்னல், நியூக்ளியஸ்

செயல்பாடு : 2

மனிதனின் இரத்த ஓட்ட மண்டலத்தில் காணப்படும் உறுப்புகள் மற்றும் அவற்றின் பணிகளை வரிசைப்படுத்துக

இதயம் – இது இரத்தத்தை வெளியேற்றுகிறது

ஆரிக்கிள்ஸ் – இதயத்தின் மேல் அறைகள்

வென்ட்ரிக்கிள்ஸ் – இதயத்தின் கீழ் அறைகள்

தமனிகள் – ஆக்சிஜனேற்றப்பட்ட இரத்தத்தை உடலின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்கிறது

நரம்புகள் – ஆக்சிஜன் இல்லாத இரத்தத்தை உடலில் இருந்து இதயத்திற்க்கு கொண்டு செல்கிறது

நுண்குழாய்கள் – திசுக்களுக்கு ஊட்டசத்துக்கள் மற்றும் ஆக்சிஜனைக் கொண்டு வந்து திசுக்களில் இருந்து கழிவுப்பொருட்களை அகற்றுகின்றன.

செயல்பாடு : 3

கீழே உள்ள படங்களைக் கவனி, கொடுக்கப்பட்ட அட்டவணையில் நீங்கள் பார்க்கும் செல்களுக்கிடையே காணக்கூடிய வேறுபாடுகளை எழுதவும்.

தாவர செல்

1. தாவர செல்லில் செல் சுவர் உள்ளது

2. இதில் குளோரோபிளாஸ்ட் உள்ளது

3. சென்ட்ரியோல்கள் இல்லை

4. ஒரு பெரிய மைய வெற்றிடம்

5. லைசோசோம் பொதுவாக தெரியவில்லை. பெரும்பாலான தாவர செல்களில் சிலியா இல்லை

விலங்கு செல்

1. விலங்கு செல்லில் செல் சுவர் இல்லை

2. குளோரோபிளாஸ்ட் இல்லை

3. சென்ட்ரியோல்கள் உள்ளன

4. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறிய வெற்றிடங்கள்

5. சைட்டோபிளாஸில் லைசோசோம்கள் ஏற்படுகின்றன. சிலியா உண்டு

மூலச் செல்கள் : எந்தவொரு வகை செல்லுக்குள் செல்பிரிதல் அடைந்து பெருக்கம் அடைந்து வளர்ச்சியடையும் திறன் உடையது. ஆனால் மூலச் செல்கள் மிகவும் ஆச்சரியமானவை. கருவிலிருந்து பெறப்படும் மூலச் செல்கள் மிகவும் சிறப்பானது. ஏனெனில் உடலில் உள்ள எந்தவொரு செல்லாகவும் அவை மாறக்கூடியது, அதாவது இரத்த செல்கள், நரம்பு செல்கள், தசை செல்கள் அல்லது சுரப்பி செல்கள். எனவே, அறிவியல் அறிஞர்கள் மற்றும் மருந்துவர்கள், சில நோய்களைக் குணப்படுத்தவும், தடுக்கவும் மூலச் செல்களைப் பயன்படுத்தி வருகின்றனர் உதாரணமாக முதுகுத் தண்டில் ஏற்படும் காயம்.

பாசியில் பசுங்கணிகத்தைக் கண்டறிதல்

குளத்தில் இருந்து சில பாசிகளைச் சேகரித்து பின் அதனை இழைகளாகப் பிரித்து. ஒரு நழுவத்தில் சில இழைகளை வைக்கவும். பின் கூட்டுநுண்ணோக்கின் மூலம் அதை கவனித்து நீங்கள் பார்த்துள்ள பசுங்கணிகத்தின் படத்தை வரையவும்.

பல்வேறு வகையான தாவரங்கள் வெவ்வேறு வண்ணங்களைக்கொண்டுள்ளதற்குக் காரணம் கணிகங்கள் ஆகும். பசுங்கணிகம் பச்சை நிறத்திற்கு காரணம். வண்ணகணிகங்கள் மலர் மற்றும் பழங்களுக்கு வண்ணத்தை அளிக்கிறது. பழங்கள் பழுக்கும்போது, பசுங்கணிகங்கள் வண்ணகணிக்கங்களாக மாறுகின்றன. ஸ்டார்ச் சர்க்கரையாக மாறுகிறது. இது தான் காய் கனியாவதற்கான இரகசியமாகும்.

செயல்பாடு : 4 

 இந்த அட்டவணையை பூர்த்தி செய்யுங்கள்

1. செல் சவ்வு – சில பொருட்களை செல்லுக்குள் மற்றும் வெளியே செல்ல அனுமதிக்கிறது 

2. செல் சுவர் – 

3. சைட்டோபிளாசம் – செல் உறுப்புகளின் இயக்க பகுதி 

4. மைட்டோகாண்ட்ரியா – 

5.நுண்குமிழ் – 

6. பசுங்கணிகம் – சூரிய சக்தியில் இருந்து உணவை உற்பத்தி செய்கிறது 

7. எண்டோபிளாச வலைப்பின்னல் – புரதம், லிப்பிடுகள் மற்றும் ஸ்டெராய்டுகளை உற்பத்தி செய்து அவற்றை செல்லுக்குள் கடத்திகிறது.

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

சிவப்புரத்த செல்களில் உட்கரு இல்லை. உட்கருவின்றி இந்த செல்கள் விரைவில் இறக்கின்றன; சுமார் இரண்டு மில்லியன் சிவப்பு செல்கள் ஒவ்வொரு நொடியும் இறக்கின்றன. அதிர்ஷ்ட வசமாக, மனித உடம்பில் புதிய சிவப்பு ரத்த செல்கள் தினமும் தோன்றுகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *