Samcheer Kalvi 7th Social Science Books Tamil Medium Art and Architecture of Tamil Nadu

Last Updated on: January 3, 2026 by VirkozKalvi

சமூக அறிவியல் : வரலாறு : மூன்றாம் பருவம் அலகு -2 : தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

பயிற்சி வினா விடை

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. தென்னிந்தியாவில் உள்ள மிகப்பழமையான கட்டுமானக் கோவில் எது? 

அ) கடற்கரைக் கோவில்

ஆ) மண்டகப்பட்டு 

இ) கைலாசநாதர் கோவில்

ஈ) வைகுந்தபெருமாள் கோவில்

விடை: அ) கடற்கரைக் கோவில் 

2. மாமல்லபுரத்திலுள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் யுனெஸ்கோவால் எப்போது அங்கீகரிக்கப்பட்டது? 

அ) 1964

ஆ) 1994 

இ) 1974 

ஈ) 1984 

விடை : ஈ) 1984 

3. முற்காலச் சோழர் கட்டடக்கலையின் சிறப்பம்சம் யாது? 

அ) புடைப்புச் சிற்பங்கள்

ஆ) விமானங்கள் 

இ) பிரகாரங்கள்

R) கோபுரங்கள் 

விடை: ஆ) விமானங்கள் 

4. அழகிய நம்பி கோவில் எங்கமைந்துள்ளது? 

அ) திருக்குறுங்குடி

ஆ) மதுரை 

இ) திருநெல்வேலி

ஈ) திருவில்லிபுத்தூர் 

விடை: அ) திருக்குறுங்குடி 

5. வைகுண்ட பெருமாள் கோயிலைக் கட்டியவர் யார்? 

அ) மகேந்திரவர்மன்

ஆ) நந்திவர்மன் 

இ) ராஜசிம்மன்

ஈ) இரண்டாம் ராஜராஜன்

விடை: ஆ) நந்திவர்மன் 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. பல்லவ அரசர் மகேந்திரவர்மனால் முதன்முதலாய் கட்டப்பட்ட  குடைவரைக் கோவில் …….. என்ற இடத்தில் உள்ளது. 

விடை: மண்டகப்பட்டு

2. முற்கால சோழர் கட்டடக்கலை ……. பாணியைப் பின்பற்றியது. 

விடை: செம்பியன் மகாதேவி 

3. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள மிகவும் புகழ்பெற்ற மண்டபம் ……. ஆகும்.

விடை:  1000-கால் மண்டபம்

4. பிற்கால சோழர் காலம் பொலிவுமிக்க ……. பெயர்பெற்றது.

விடை: கோபுரங்கள் 

5. விஜயநகர கால கட்டடக்கலையின் தனித்துவ அடையாளம் ……. ஆகும். 

விடை:  மண்டபம்

III. பொருத்துக 

1. ஏழு கோவில்கள் – அ. மதுரை

2. இரதிமண்டபம் – ஆ. தாராசுரம்

3. ஐராவதீஸ்வரர் கோவில் – இ. திருக்குறுங்குடி | ஆ தாராசுரம்

4. ஆதிநாதர் கோவில்  – ஈ. கடற்கரைக்கோவில் | உ |ஆழ்வார் திருநகரி 

5. புதுமண்டபம் – உ. ஆழ்வார் திருநகரி 

விடைகள் 

1. ஏழு கோவில்கள் – ஈ. கடற்கரைக்கோவில் 

2. இரதிமண்டபம் – இ. திருக்குறுங்குடி 

3. ஐராவதீஸ்வரர் கோவில் – ஆ. தாராசுரம்

4. ஆதிநாதர் கோவில்  – உ. ஆழ்வார் திருநகரி

5. புதுமண்டபம் – அ. மதுரை

IV. தவறான இணையைக் காண்க 

(1) 

1. கிருஷ்ணாபுரம் கோவில் – திருநெல்வேலி

2. கூடலழகர் கோவில் – ஆழ்வார் திருநகரி 

3. சேதுபதிகள் – மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்கள் 

4. ஜலகண்டேஸ்வரர் கோவில் – வேலூர்

விடை: 2. கூடலழகர் கோவில் – ஆழ்வார் திருநகரி 

(2) 

கூற்று : இராமேஸ்வரம் கோவிலின் சிறப்புமிக்க பிரகாரங்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாய் அமைந்துள்ளன. 

காரணம் : உலகிலேயே மிக நீளமான கோவில் பிரகாரங்களை இக்கோவில் கொண்டுள்ளது. 

அ) காரணம், கூற்றை விளக்கவில்லை 

ஆ) காரணம், கூற்றை விளக்குகின்றது 

இ) கூற்று சரி, காரணம் தவறு 

ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு 

விடை: ஆ) காரணம், கூற்றை விளக்குகின்றது 

3. பொருந்தாததைக் கண்டுபிடி 

திருவில்லிபுத்தூர் அழகர்கோவில், ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை

விடை: பொருந்தாதது எதுவுமில்லை (ஐந்து கோவில்களிலும் – விஜயநகர நாயக்கர் கால ஓவியங்கள் உள்ளன) 

4. பின்வரும் காலத்திற்குப் பெயரிடுக. 

அ) கி.பி. 600-850 

ஆ) கி.பி. 850-1100 

இ) கி.பி. 1100-1350 

ஈ) கி.பி. 1350-1600 

விடைகள்: 

அ) கி.பி. 600-850 : பல்லவர் காலம் 

ஆ)கி.பி. 850-1100 : முற்காலச் சோழர் காலம் 

இ) கி.பி. 1100-1350 : பிற்காலச் சோழர் காலம்

ஈ) கி.பி. 1350-1600 : விஜயநகர / நாயக்கர் காலம் 

5. சரியான வாக்கியங்களைக் கண்டுபிடி 

1. மிகப்பெரும் கருங்கல் பாறையின் மீது புடைப்புச் சிற்பமாக அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. 

2. பல்லவர் காலகட்டடக்கலைப் பாணியில் மதுரை மீனாட்சி அம்மன்கோவில் அமைந்துள்ளது. 

3. “பின்ளையார்பட்டியிலுள்ள குகைக்கோவில் பிற்கால பாண்டியரின் பங்களிப்பாகும்.

4. மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்களான சேதுபதிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளனர். 

விடை: 1. மிகப்பெரும் கருங்கல் பாறையின் மீது புடைப்புச் சிற்பமாக அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. 

3. பிள்ளையார்பட்டியிலுள்ள குகைக்கோவில் பிற்கால பாண்டியரின் பங்களிப்பாகும்.

V. சரியா? தவறா? 

1. இராஜசிம்மன் காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டினார்.

விடை : சரி 

2. முற்கால பாண்டியர், பிற்காலச் சோழரின் சமகாலத்தவர் ஆவர்.

விடை: தவறு 

3. பாண்டியக் கட்டடக்கலையின் சிறப்பம்சமாய் திகழ்வது குடைவரை மற்றும் கட்டுமானக் கோவில்கள் ஆகும்.

விடை: சரி 

4. பிரகதீஸ்வரர் கோவில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.

விடை: சரி 

5. தாதாபுரம் கோவிலில் விஜயநகர மற்றும் நாயக்கர் கால ஓவியங்களைக் காணமுடியும்.

விடை: தவறு 

VI. குறுகிய விடையளி 

1. பஞ்சபாண்டவ இரதம் பற்றி குறிப்பு வரைக. 

பஞ்சபாண்டவ இரதம்: 

* தமிழ் திராவிட கோவில் கட்டடக் கலை மரபிற்கு ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்டுள்ள பஞ்ச பாண்டவ இரதங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன (மகாபலிபுரம்). 

* அவை திரௌபதி இரதம், தர்ம ராஜா இரதம், பீமரதம், அர்ச்சுன இரதம், நகுல சகாதேவ இரதம் ஆகியவை. 

* அவை மாடக்குழிகளாலும், பூவணி வேலைப்பாடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 

* பிரமாண்டமான கலைப்படைப்பாக விளங்கும் அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி புடைப்புச் சிற்பம் ஏறத்தாழ 100 அடி நீளமும் 45 அடி உயரமும் கொண்ட கருங்கல் பாறையாகும். 

2. சித்தன்னவாசல் ஓவியங்கள் பற்றிக் கூறுக சித்தன்னவாசல் 

ஓவியங்கள்: 

* சித்தன்னவாசல் சமணத்துறவிகள் வாழ்ந்த குகையாகும். அவர்கள் குகைச் சுவர்களில் சாந்துபூசி, ஈரம் காய்வதற்கு முன்னரே ஓவியங்களைத் தீட்டியுள்ளனர். 

* இன்றைக்கு இருப்பனவற்றுள் தாமரைத் தடாக ஓவியம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 

* மிகச் சிறந்த வர்ணங்களின் பயன்பாட்டிற்கும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ள நேர்த்திக்கும் புகழ்பெற்றதாகும். தாமரை மலர்கள், குளமெங்கும் நீரில் பரவிக்கிடக்கும் இலைகள், யானை. எருமை, அன்னப்பறவை, பூக்களைப் பறிக்கும் மனிதன் ஆகிய ஓவியக்காட்சி மனங்களைக் கொள்ளை கொள்கின்றது. 

3. தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பம்சங்களைக் குறிப்பிடுக.

தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பம்சங்கள்: 

* தஞ்சாவூர் பெரிய கோவில் ஒரு பெரிய கோவில் வளாகமாக இருந்தது. 

* அதன் விமானம் 216 அடிகள் உயரம் கொண்டதாகும். உலகத்தில் மனிதனால் கட்டப்பட்ட மிக உயரமான சிகரங்களில் ஒன்று. அதன் சிகரம் தட்சிண மேரு என்றழைக்கப்படுகிறது. 

* இங்குள்ள மிகப்பெரும் நந்தியின் சிலை ஒரே பாறையில் செதுக்கப்பட்டதாகும் (16 அடி நீளம் 13 அடி உயரம்),

4. இராமேஸ்வரம் கோவில் நம் கவனத்தை ஈர்க்கும் விதத்தைக் கூறுக.

நம் கவனத்தை ஈர்க்கும் இராமேஸ்வரம் கோவில்: 

* இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலின் சிறப்புமிக்க பிரகாரங்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாய் அமைந்துள்ளன. உலகிலேயே மிகவும் நீளமான பிரகாரங்கள் இவையே எனச் சொல்லப்படுகிறது. 

* இது மூன்று பிரகாரச் சுற்றுக்களைக் கொண்டுள்ளது. 

– வெளிப்பிரகாரம் (7 மீட்டர் உயரம், 120 மீட்டர் நீளம் கொண்ட கிழக்கு மேற்குப் பிரகாரங்கள்)

– வடக்கு தெற்கு பிரகாரங்கள் (195 மீட்டர் நீளமுடையவை) 

– உட்புறப் பிரகாரங்கள் (மிகப்பழமையானவை) 

* 1200க்கும் மேற்பட்ட தூண்கள் வெளிப்பிரகாரத்தைத் தாங்கி நிற்கின்றன. இவை அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன.

VII. விரிவான விடையளி 

1. பல்லவர் காலத்தில் கோவில் கட்டடக்கலை குடைவரைக் கோவில்கள் எனும் நிலையிலிருந்து கட்டுமானக் கோவில்கள் எனும் மாற்றத்திற்கு உள்ளானது விளக்குக. குடைவரைக் கோவில்களிலிருந்து கட்டுமானக் கோவில்களுக்கான மாற்றம் (பல்லவர் காலம்): 

* பல்லவர் காலத்தில் கோவில் கட்டடக்கலை குடைவரைக் கோவில்கள் எனும் நிலையிலிருந்து கட்டுமானக் கோவில்கள் எனும் மாற்றத்திற்கு உள்ளானது. 

* குடைவரைக் கோவில்கள் நிர்மாணிக்கும் போது பாறைப் பரப்பிலிருந்து தேவைப்படும் வடிவத்தில் ஒரு பகுதி செதுக்கப்படும். பின்னர் அப்பாறையே குடையப்பட்டு கோவிலாக வடிவமைக்கப்படும். 

* பல்லவ அரசர் மகேந்திரவர்மன் குடைவரைக் கட்டடக் கலைக்கு முன்னோடியாவார். மண்டகப்பட்டு, முதல் குடைவரைக் கோவிலாகும். 

* குடைவரைக் கோவிலின் முன்புறம் அமைந்துள்ள இரண்டு தூண்கள் அக்கோவிலைத் தாங்கி நிற்கும். 

* கி.பி.700 க்குப் பின் குடைவரைக் கோவில்கள் அமைக்கும் முறை மறைந்து பெரிய வடிவிலான கட்டுமானக் கோவில்கள் கட்டப்படுவதற்கு வழிவிட்டது. சிற்பிகள் தங்கள் திறமைகளைப் பயன்படுத்தும் வாய்ப்பு உண்டானது. கடற்கரைக் கோவில் தென்னிந்தியாவின் மிகப்பழமையான கட்டுமானக் கோவில். 

* ஒரே பாறையில் கோவிலை அமைக்கும் பழைய முறைப்படி இல்லாமல் கட்டுமானக் கோவில்கள் பாறைப் பாளங்களைக் கொண்டு கட்டப்பட்டன. 

* காஞ்சி கைலாசநாதர் கோவில் (ராஜசிம்மன்), வைகுண்டப்பெருமாள் கோவில் (இரண்டாம் நந்திவர்மன்) ஆகியவை எடுத்துக்காட்டுகள்.  

2. விஜயநகர, நாயக்கர் கால கட்டடக்கலையானது பல்லவர் மற்றும் பிற்கால சோழர் கட்டடக்கலையிலிருந்து எவ்விதம் வேறுபடுகிறது என விவாதிக்கவும். 

விஜயநகர / நாயக்கர் கால கட்டடக்கலை: 

* விஜயநகர ஆட்சிக்காலத்தில் ஒரு புதிய வடிவிலான கட்டடக்கலைப் பாணி ‘மண்டபங்கள் உருவானது.

* 15 முதல் 17ம் நூற்றாண்டு வரையிலான விஜயநகர, நாயக்க கட்டடக்கலையின் முக்கியக் கூறுகள் அழகூட்டப்பட்ட மண்டபங்கள், அலங்கரிக்கப்பட்ட தூண்கள், இயற்கை வடிவ அளவிலான சிலைகள், கோபுரங்கள். பிரகாரங்கள், இசைத் தூண்கள், மலர் அலங்கார வேலைப்பாடுகள், கல்லால் ஆன சாளரங்கள் ஆகும். 

* கோவில்களோடு சேர்ந்து தெப்பக்குளங்கள் அமைக்கப்பட்டன. கோவில்களுக்கான நுழைவாயில்கள் நான்குபுறங்களிலும் மிகப்பெரும் கோபுரங்களுடன் கட்டப்பட்டன. சிற்பங்களோடு கூடிய மாடக்குழிகளை அமைக்கும் பழக்கம் நாயக்கர் காலத்திலும் தொடர்ந்தது. 

பல்லவர்கள் மற்றும் பிற்காலச் சோழர்கள் காலக் கட்டடக்கலை: 

* பல்லவர் ஆட்சிக்காலத்தில் குடைவரைக் கோவில்கள் நிர்மாணிக்கும் போது பாறைப் பரப்பிலிருந்து தேவைப்படும் வடிவத்தில் ஒரு பகுதி செதுக்கப்பட்டு பின்னர் அப்பாறையே குடையப்பட்டு கோவிலாக வடிவமைக்கப்படும். 

* குடைவரைக் கோவில்கள் அமைக்கும் முறை கி.பி. 700க்குப் பின்னர் மறைந்து பெரிய வடிவிலான கட்டுமானக் கோவில்கள் கட்டப்படுவதற்கு வழிவிட்டது. 

* ஒரே பாறையில் ஒரு கோவிலை அமைக்கும் பழைய முறைப்படி இல்லாமல் கட்டுமானக் கோவில்கள் பாறைப்பாளங்களைக் கொண்டு கட்டப்பட்டன. இரதங்களின் வெளிப்பக்கச் சுவர்கள் மாடக்குழிகளாலும் பூவணி வேலைப்பாடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 

* பிற்காலச் சோழர்கள் காலத்தில் தஞ்சாவூரிலும் கங்கை கொண்ட சோழபுரத்திலும் அமைந்துள்ள இரண்டு உன்னதமான கோவில்கள் சோழர்களின் கட்டடக்கலை முதிர்ச்சியைப் பிரதிபலிக்கின்றன. 

* தஞ்சாவூர் பெரிய கோவில் (கி.பி.1009) ராஜராஜன் காலத்து செல்வப் பெருக்கச் சாதனைகளுக்குப் பொருத்தமான நினைவுச் சின்னமாகும். 

* பிற்காலச் சோழர்கள் காலம் பொலிவுமிக்க கோபுரங்களுக்காகப் புகழ்பெற்றது.

VIII. உயர்சிந்தனை வினா 

1. திராவிடக் கட்டடக்கலை உள்நாட்டில் தோன்றியதை விளக்குக.

உள் நாட்டில் தோன்றிய திராவிடக் கட்டடக்கலை: 

* திராவிடக் கட்டடக்கலை நம்மண்ணில் பிறந்ததாகும். காலப்போக்கில் பரிணாமச் செயல்பாட்டின் வழியாய் அக்கலை மேம்பாடு அடைந்தது.  

* மகாபலிபுரத்திலுள்ள ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த காலத்தில் முந்திய குடைவரைக் கோவில்களே (குகைக்கோவில்கள்) தமிழ் திராவிடக் கட்டடக்கலையின் எடுத்துக்காட்டுகளாகும். 

* கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தைய கோவில்கள் மரத்தால் கட்டப்பட்டிருக்க வேண்டும். அவை இயற்கை சக்திகளால் அழிவுக்கு உள்ளாகி இருக்கலாம். 

* தமிழ்நாட்டில் கோவில் கட்டடக்கலையின் பரிணாம வளர்ச்சி ஐந்து கட்டங்களாக நடைபெற்றுள்ளது. 

– பல்லவர் காலம் (கி.பி 600 – 850)

– முற்காலச் சோழர்கள் காலம் (கி.பி 850 – 1100) 

– பிற்காலச் சோழர்கள் காலம் (கி.பி. 1100 – 1350) 

– விஜயநகர / நாயக்கர் காலம் (கி.பி. 1350 – 1600) 

– நவீன காலம் (கி.பி. 1600க்கு பின்னர்)

2. கோயில்கலை வளர்ச்சியானது நாயக்கர் காலத்தில் சிறந்தோங்கியது என்பதை தெளிவுபடுத்துக. 

நாயக்கர் காலத்தில் சிறந்தோங்கிய கோயில் கலை வளர்ச்சி:  

* நாயக்கர்கள் காலத்தில் (விஜயநகர காலம்) மண்டபங்களிலுள்ள ஒற்றைக்கல் தூண்கள் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளன. 

* தூண்களில் குதிரைகள், சிங்கங்கள் மற்றும் கடவுளர்களின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இம்மண்டபங்களுள் மிகவும் புகழ்பெற்றது மதுரை கோவிலில் அமைந்துள்ள புதுமண்டபம். 

* 15 முதல் 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கட்டடக் கலையின் முக்கியக் கூறுகள் அழகூட்டப்பட்ட மண்டபங்கள், அலங்கரிக்கப்பட்ட தூண்கள், இயற்கை வடிவ அளவிலான சிலைகள், கோபுரங்கள், பிரகாரங்கள், இசைத் தூண்கள், மலர் அலங்கார வேலைப்பாடுகள், கல்லால் ஆன சாளரங்கள் ஆகும். 

* தெப்பக்குளங்கள் அமைக்கப்பட்டன. நான்கு புறங்களிலும் மிகப்பெரும் கோபுரங்களுடன் நுழைவாயில்கள் கட்டப்பட்டன.

* பெரிய வடிவங்களிலான புடைப்புச் சிற்பங்களை அமைக்கும் முறை அதிகரித்தது. இவற்றை நாம் அழகியநம்பி கோவில், கோபாலகிருஷ்ண கோவில், ஆதிநாதர் கோவில், நெல்லையப்பர் கோவில் ஆகியவற்றில் காணலாம். 

* மண்டபக் கட்டடக்கலைக்கு 1000-கால் மண்டபம், ரதிமண்டபம் (திருக்குறுங்குடி, நாங்குநேரி) ஆகியவை எடுத்துக்காட்டுகளாகும்.  

* நாயக்கர் கால ஓவியங்கள் வரதராஜ பெருமாள் கோவில், கூடலழகர் கோவில் மற்றும் திருவில்லிபுத்தூர், அழகர் கோவில், திருவண்ணாமலை மற்றும் திருவரங்கம் ஆகிய ஊர்களிலுள்ள கோவில்களில் காணப்படுகின்றன.

IX. செயல்பாடு (மாணவர்களுக்கானது) 

1. பல்லவ, சோழ, பாண்டிய மற்றும் நாயக்க ஆட்சியாளர்கள் காலத்தில் எழுப்பப்பட்ட கோவில்களுக்குச் சென்று கட்டுமானத்திலும் சிற்பங்களிலும் அவை ஒன்றோடொன்று எவ்விதம் வேறுபடுகின்றன என்பதைக் கண்டறியவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top