Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 7th Social Science Books Tamil Medium Women Empowerment

Samcheer Kalvi 7th Social Science Books Tamil Medium Women Empowerment

சமூக அறிவியல் : குடிமையியல் : மூன்றாம் பருவம் அலகு -1 : பெண்கள் மேம்பாடு

பயிற்சி வினா விடை

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. பின்வருவனவற்றில் எது பாலின சமத்துவமின்மை அல்ல? 

அ) மோசமான பேறுகால ஆரோக்கியம் 

ஆ) ஆண்களுக்கு அதிக பாதுகாப்பற்ற தன்மை 

இ) எச்.ஐ.வி / எய்ட்ஸ் பரவுதல் 

ஈ) பெண்களின் குறைந்த எழுத்தறிவு விகிதம்

விடை: ஆ) ஆண்களுக்கு அதிக பாதுகாப்பற்ற தன்மை 

2. பாலின சமத்துவம் என்பது எது தொடர்புடைய பிரச்சனை 

அ) பெண் குழந்தைகள், பெண்களின் பிரச்சனை 

ஆ) அனைத்து சமூகத்திலும் பெண்களும் ஆண்களும் சமம் 

இ) மூன்றாம் உலக நாடுகள் மட்டும் 

ஈ) வளர்ந்த நாடுகள் மட்டும்

விடை: ஆ) அனைத்து சமூகத்திலும் பெண்களும் ஆண்களும் சமம் 

3. பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்பட பின்வரும் எந்த உத்திகள் உதவுகின்றது? 

அ) பாகுபாடுகளுக்கு எதிரான சவால்களுக்கு பெண்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். 

ஆ)பெண்களுக்கான அதிகமான வருமான ஆதாரங்கள் 

இ) மேம்பட்ட கல்விக்கான அணுகுமுறை 

ஈ) மேலே உள்ள அனைத்தும்

விடை: ஈ) மேலே உள்ள அனைத்தும் 

4. வளரும் நாடுகளில் சிறுவர்களை விட பெண் குழந்தைகள் இடைநிலைக் கல்வியை தவறவிடுவது ஏன்? 

அ) பள்ளிக் கல்வி கட்டணம் உயர்வு காரணமாக, சிறுவர்கள் மட்டும் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள் 

ஆ)பெண் குழந்தைகள் வீட்டுவேலை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது 

இ) குழந்தைத் திருமணம் அவர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறது 

ஈ) மேலே உள்ள அனைத்தும்

விடை: ஈ) மேலே உள்ள அனைத்தும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. இந்தியாவில் பெண்கள் கல்வியை செயல்வடிவாக்கிய ஜோதிராவ் புலே நினைவில் வைக்கப்படுகிறார் அவர், தனது மனைவியுடன் ………. 1848 இல் சிறுமிகளுக்கான முதல் பள்ளியைத் தொடங்கினார்

விடை: சாவித்ரிபாய் புலே

2. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி வகித்த முதல் பெண் —–

விடை: சுஷ்மா ஸ்வராஜ்

3. முதல் பெண் காவல்துறை இயக்குநர் (DGP) ……….. ஆவார்.

விடை: காஞ்சன் சௌத்ரி பட்டாச்சாரியா 

4. புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய பெண் ……….

விடை: அருந்ததி ராய்

III. பொருத்துக 

      I       II

1. சிரிமாவோ பண்டாரநாயக – அ. இங்கிலாந்து 

2. வாலென்டினா தெரோஷ்கோவா – ஆ. ஜப்பான்

3. ஜன்கோ தபே – இ. இலங்கை

4. சார்லோட் கூப்பர் – ஈ. சோவியத் ஒன்றியம்

விடைகள் 

1. சிரிமாவோ பண்டாரநாயக – இ. இலங்கை

2. வாலென்டினா தெரோஷ்கோவா – ஈ. சோவியத் ஒன்றியம்

3. ஜன்கோ தபே – ஆ. ஜப்பான்

4. சார்லோட் கூப்பர் – அ. இங்கிலாந்து

IV. பின்வரும் அறிக்கைகளை ஆராய்க 

1. பொருத்தமான பதிலைத் தேர்வு செய்க 

கூற்று (கூ) : இப்போது அனைத்து மனிதாபிமான நடவடிக்கைகள் அனைத்திலும் பெண்கள் ஒருங்கிணைகிறார்கள். 

காரணம் (கா) : சமூகத்தின் அனைத்து மோதல்களிலும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள். 

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும் 

ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல. 

இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு ஈ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரி ‘

விடை: அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும். 

2. கூற்று (கூ) : பெண்களுக்கு எதிரான வன்முறை சாதி, மதம், வர்க்கம், வயது மற்றும் கல்வியை கடந்து நடைபெறுகிறது. 

காரணம் (கா) : வீட்டு வன்முறைகள், கருக்கலைப்பு, பெண் சிசுக் கொலை, வரதட்சணை கொலை, திருமணம் மூலம் கொடுமை, சிறுவருக்கு நிகழும் கொடுமைகள் என வெளிப்படுகிறது 

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும் 

ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல. 

இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு 

ஈ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரி

விடை: அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்

V. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க 

1. சமூகத்தில் பெண்கள் வகிக்கும் பல்வேறு பாத்திரங்களை பற்றி விவாதிக்கவும். 

* சமுதாயத்தில் பெண்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்து பல்வேறு உறவுமுறைகளில் தன்னையே ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். 

* பெண்கள் தங்கள் பிறப்பு முதல் இறப்பு வரை மகளாக, சகோதரியாக மனைவியாக, தாயாக இன்னும் பலவாறாக முக்கிய பங்கு வகிக்கிறார்கள். 

* எவ்வாறாயினும் அவர்கள் முக்கிய பங்கு வகிப்பது மனைவி மற்றும் தாய் என்பதாகும். 

2. பாலின சமத்துவம் என்றால் என்ன?

பாலின சமத்துவம் என்பது ஆண், பெண் இருவரது நடத்தைகளும், தேவைகளும் வேறுபட்டு காணப்பட்டாலும் அவர்கள் சமத்துவமிக்கவர்களாகவே கருதப்படுகின்றனர். அதாவது ஆண், பெண் இருவரும் சமம் என்பதல்ல, ஆனால் அவர்களின் உரிமைகள் பொறுப்புகள், வாய்ப்புகள் இவை அனைத்தும் அவர்கள் ஆண், பெண் என்பதைப் பொறுத்து அமைவதில்லை. 

3. பெண்கள் உரிமையை விளக்குக. 

* பெண்கள் உரிமைகள் அரசியலமைப்பு சட்டத்தின்படி முக்கியமாக சமத்துவம், சகோதரத்துவம் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. 

* இந்தியா பெண்களுக்கு என்று பல உரிமைகளை வகுத்துள்ளது. ஆண், பெண் இருவருக்கும் இடையில் காணப்படும் மணவிலக்கு, சொத்துரிமை, வேலைவாய்ப்பு மற்றும் பல செயல்களில் சட்ட உறுதி வழங்கியுள்ளது. 

4. பெண்களின் மேம்பாட்டிற்கான அத்தியாவசிய காரணிகளை பட்டியலிடுக 

கல்வி :

ஒருவருக்கு அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கும் திறன் மற்றும் தனித்தன்மை வாய்ந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது. 

பாலினப்பாகுபாடு :

பாலினப்பாகுபாடு பார்க்கும் சமூகம் எக்காலத்திலும் முன்னுேறுவதற்கான வாய்ப்பு அரிது. சாதி, இன, சமய பாகுபாடுகளை அடிப்படையாக கொண்ட சமூகம், முன்னேற்றம் அடையாது. 

5. பெண் கல்வியின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு ஒரு கட்டுரையை எழுதுக. 

* 40 ஆண்டுகளுக்கு முன்பே பன்னாட்டு மனித உரிமைகள் ஆணையம் அனைவருக்கும் கல்வி என்ற உரிமையை வலியுறுத்தி உள்ளது. 

* கல்வி பெறும் பெண் குழந்தை தாயான பின்பு பிள்ளைகளுக்கும் குடும்பத்தாருக்கும் அரவணைப்பை வழங்குவதன் மூலம் சமுதாயத்திற்குச் சிறப்புச் சேர்க்கிறார். 

* பெண் குழந்தைகளின் அவசியத் தேவையான கல்வி அறிவினைப் பெறவும் அவர்களின் திறனை மேம்படுத்தவும் அதனால் சமூகத்தில் அவர்களின் தகுதிநலை உயரவும், அவர்களின் சுயமுன்னேற்றத்திற்கும் உறுதுணையாய் இருக்கின்றது.

VI. செயல்பாடு (மாணவர்களுக்கானது) 

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

1. தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்த ஏதேனும் பத்து பெண்மணிகளைப் பற்றிய படத்தொகுப்பை தயார் செய்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *