Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Crop Production and Management

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Crop Production and Management

அறிவியல் : அலகு 21 : பயிர் பெருக்கம் மற்றும் மேலாண்மை

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. மண்ணில் விதைகளை இடுதலின் செயல்முறையின பெயர் _______________.

  1. உழுதல்
  2. விதைத்தல்
  3. பயிர்ப்பெருக்கம்
  4. பயிர்ச் சுழற்சி

விடை : விதைத்தல்

2. மண் மேற்பரப்பில் பாய்ந்து மண்ணினுள் ஊடுருவும் முறை _______________ .

  1. நீர் பாசனம்
  2. பரப்பு நீர் பாசனம்
  3. தெளிப்பு நீர் பாசனம்
  4. சொட்டு நீர் பாசனம்

விடை : தெளிப்பு நீர் பாசனம்

3. தாவரப் பயிர்களில் பூச்சிகளையும் சிறு பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் உயிரினங்கள்

  1. உயிரி-பூச்சிக் காெல்லிகள்
  2. உயிரி உரங்கள்
  3. மண்புழுக்கள்
  4. வேம்பு இலைகள்

விடை : உயிரி-பூச்சிக் காெல்லிகள்

4. திறன்மிக்க நுண்ணுயிரிகளின் தயாரிப்பு பயன்படுவது

  1. விதை நேர்த்தி செய்தல்
  2. இலைத் தெளிப்பு
  3. மண் நேர்த்தி செய்தல்
  4. உயிரி- காென்றுண்ணிகள்

விடை : விதை நேர்த்தி செய்தல்

5. பின்வருவனற்றுள் எது பஞ்காவ்யாவில் காணப்படவில்லை?

  1. பசுவின் சாணம்
  2. பசுவின் சிறுநீர்
  3. தயிர்
  4. சர்க்கரை

விடை : சர்க்கரை

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. ஓர் இடத்தில் வளரக்கூடிய பயிர்களை மேலும் வளர்தற்கு அதன் முக்கிய வளரிடத்தில் நடவு செய்தல் _______________ ஆகும்.

விடை : பயிர் நடவு செய்தல்

2. விரும்பாத இடத்தில் வளரும் விரும்பாத தாவரத்தின் பெயர் _______________ .

விடை : களை

3. களைகளை காெல்லுவதற்கு அல்லது அதன் வளர்ச்சியை தடுப்பதற்கு பயன்படும் வேதிப் பொருளின் பெயர் _______________ .

விடை : களைக்கொல்லி

4. _______________ விதைகள் தனது தனித்துவப் பண்புகளை அதன் வழித் தாேன்றலுக்கு மாற்றுகிறது.

விடை : பாரம்பரிய

5. _______________ மையங்கள் ICAR மற்றும் விவசாயிகளுக்கிடையேயான இறுதி இணைப்பினை அளிக்கிறது.

விடை : KVK (க்ரிஷி விஞ்ஞான கேந்திரா)

6. பல புகழ்பெற்ற அதிக விளைச்சலைத் தரக்கூடிய பெரும்பயிர் வகைகள் _______________ ஆல் உருவாக்கப்ட்டுள்ளது.

விடை : இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR)

III.பொருத்துக.

1. உயிரி-பூச்சிக் காெல்லிகள்வேப்பிலைகள்
2. உயிரி- காென்றுண்ணிகள்பேசில்லஸ் துரின்ஜியென்சிஸ்
3. உயிரி-உரங்கள்வெள்ளை ஈக்களை கட்டுப்படுகிறது
4. உயிரி-சுட்டிக் காட்டிகள்மண் வளத்தை மேம்படுத்தல்
5. உயிரி–பூச்சி விரட்டிகள்சூழ்நிலையின் தரம்

விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – உ, 5 – அ

IV. குறுகிய விடையளி

1. உழுதல் – வரையறு.

விவசாயப் பயிர்களின் வேர்ப்பகுதிகளில் ஊட்டப் பொருள்கள் கிடைப்பதற்கு மண்ணை மேல்கீழாக மாற்றி மற்றும் தளர்வடையச் செய்யும் முறை உழுதல் எனப்படும்.

2. விதைத்தலின் வகைகளை பட்டியலிடுக.

  • கைகளால் விதைத்தல் – எளிமையான சிக்கனமான முறையாகும்
  • உழுசால் விதைத்தல் – இரும்பு கலப்பை பொருத்திய டிராக்டரினால் உழவு செய்யப்படுகிறது.
  • ஊன்றுதல் – நீண்டு வரிப்பள்ளத்தில், குழயில் அல்லது துளையில் விதைத்தல்

3. இலைப்பரப்பில் தெளித்தல் என்றால் என்ன?

இலையில் தெளிப்பு எனப்படுவது திரவ நிலை உரங்களை இலைகளில் நேரடியாக செலுத்தி தாவரங்களுக்கு ஊட்டமளிக்கும் நுட்பம் ஆகும்

4. கிரிஷ் விஞ்ஞான கேந்திரா பற்றி ஒரு சிறு குறிப்பு தருக.

கிரிஷ் விஞ்ஞான கேந்திரா (KVK)

  • கிரிஷி விஞ்ஞான் கேந்திரா ஒரு வேளாண் அறிவியல் நிலையமாகும்.
  • இந்த மையம் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் (ICAR) மற்றும் விவசாயிகளுக்கு இடையேயான இறுதியான இணைப்பாக செயல்படுகிறது

5. உயிரி-சுட்டிக்காட்டிகள் என்றால் என்ன? மனிதனுக்கு இது எவ்வாறு உதவுகிறது?

சூழ்நிலையின் தர நிலையை வெளிப்படுத்தும் ஒரு இனம் அல்லது இனங்களின் தொகுப்பு உயிரி-சுட்டிகள் அல்லது உயிரி சுட்டிகாட்டிகள் எனப்படும்.

இவை மனிதனுக்கு புவியில் ஏற்படும் மாற்றங்களை குறிப்பாக பெருகிவரும் மக்கள் தொகை செயல்பாடுகளால் ஏற்படும் சூழ்நிலை மாற்றங்களை புரிந்து கொள்ளவும் பட்டியலிடவும் பயன்படுகிறது

6. களையெடுத்தல் என்பதன் பொருளென்ன?

பயிர்களுடன் வளரும் விரும்பத்தகாத தாவரங்கள் களை எனப்படும். களை நீக்கப்படுதல் களையெடுத்தல் எனப்படும்.

7. பயிர்சுழற்சி என்றால் என்ன?

ஓரே இடத்தில் ஒரு குறிப்பிட்ட கால வரிசையில் பல வகைப்பயிர்களை வரிசையாக நடவு செய்தல் பயிற்ச்சுழற்சி எனப்படும்.

பயிர் உற்பத்தி இரு வகைப்படும்

  • ஒரே வகை பயிர் வளர்த்தல்
  • கலப்பு பயிர் வளர்த்தல்

8. பசுந்தழை உரம் என்றால் என்ன?

தாவரங்களின் வளரச்சியை மேம்படுத்துவதற்காக மண்ணில் சேர்க்கப்படும் ஊட்டப்பொருள்கள் பசுந்தழை உரம் எனப்படும்.

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

இதன் பயன்கள்

  • நீர் கொள்திறன்
  • மண்குவிதல்
  • மண்காற்றோட்டம்
  • ஊடுருவும் திறன் போன்றவற்றை அதிகரிக்கிறது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *