Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Organisation of Life

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Organisation of Life

அறிவியல் : அலகு 18 : உயிரினங்களின் அமைப்பு நிலைகள்

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. ______________ என்பது உறுதியான, தடித்த வெண்ணிற உறையாக அமைந்து கண்ணின் உள்பாகங்களைப் பாதுகாக்கிறது.

  1. ஸ்கிளிரா
  2. கண்ஜங்டிவா
  3. கார்னியா
  4. ஐரிஸ்

விடை : ஸ்கிளிரா

2. உடலின் உள் சூழ்நிலையை சீராகப் பராமரித்தல் என்பது __________ எனப்படும்.

  1. ஹோமியோஸ்டாசிஸ் (அ) தன்னிலை காத்தல்
  2. ஹோமியோபைட்ஸ்
  3. ஹோமியோஹைனசிஸ்
  4. ஹோமியோவிலிக்ஸ்

விடை : ஹோமியோஸ்டாசிஸ் (அ) தன்னிலை காத்தல்

3. காற்றில்லா அல்லது ஆக்ஸிஜனற்ற சூழலில் குளுக்கோஸ் சிதைவடைந்து ________ ஐக் கொடுக்கும்.

  1. லாக்டிக் அமிலம்
  2. சிட்ரிக் அமிலம்
  3. அசிட்டிக் அமிலம்
  4. நைட்ரிக் அமிலம்

விடை : லாக்டிக் அமிலம்

4. ___________ செல்கள் என்பது சிறப்பு வாய்ந்த செல்களாகும். அவை உடலின் எந்த செல்லாகவும் மாற இயலும்.

  1. நரம்பு
  2. மூல
  3. இதய
  4. எலும்பு

விடை : மூல

5. வாயுப் பரிமாற்றமானது நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெறும் நிகழ்விற்கு __________ என்று பெயர்.

  1. உட்சுவாசம்
  2. வெளிச்சுவாசம்
  3. சுவாசம்
  4. ஏதுமில்லை.

விடை : சுவாசம்

6. சவ்வூடு பரவலின் மூலம் கரைசலின் இடப்பெயர்ச்சி __________

  1. செறிவுமிக்க கரைசலிலிருந்து செறிவு குறைவான கரைசலுக்குச் செல்லும்
  2. செறிவு குறைவான கரைசலிலிருந்து செறிவு மிக்க கரைசலுக்குச் செல்லும்.
  3. இரு நிகழ்வும் நடைபெறும்.
  4. இவற்றில் ஏதுமில்லை.

விடை : செறிவு குறைவான கரைசலிலிருந்து செறிவு மிக்க கரைசலுக்குச் செல்லும்.

7. சைட்டோபிளாசத்தை விட குறைந்த கரைபொருள் செறிவும், அதிக நீர் செறிவும் உள்ள _________கரைசலில் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.

  1. குறை செறிவு கரைசல்
  2. மிகை செறிவு கரைசல்
  3. நடுநிலைக்கரைசல்
  4. அமிலக் கரைசல்

விடை : குறை செறிவு கரைசல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ___________ என்பது உயிரினங்களின் அமைப்பு மற்றும் செயல் அலகு ஆகும்.

விடை : செல்

2. மிகப்பெரிய செல் ___________ இன் முட்டை ஆகும்.

விடை : நெருப்புகோழி

3. ___________ என்பது காற்றில்லா சுவாசத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.

விடை : ஈஸ்ட்

4. கண்களின் இறுதியில் விழித்திரையின் பின்புறம் ___________ நரம்பு அமைந்துள்ளது.

விடை : பார்வை

5. ஊடுபரவல் ஒழுங்குபாடு என்ற பதம் ___________ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

விடை : ஹோபர்

6. செல்லானது ___________ என்ற அலகால் அளக்கப்படுகிறது.

விடை : மைக்ரான்

III. கீழ்கண்ட கூற்று சரியா, தவறா எனக் கூறுக. தவறை திருத்தி எழுது.

1. குறை செறிவு கரைசலில், செல்லிற்க்கு உள்ளே உள்ள கரைசலின் செறிவும் செல்லிற்கு வெளியே உள்ள கரைசலின் செறிவும் சமம்.

விடை : தவறு

சரியான கூற்று : ஒத்த செறிவு கரைசலில், செல்லிற்க்கு உள்ளே உள்ள கரைசலின் செறிவும் செல்லிற்கு வெளியே உள்ள கரைசலின் செறிவும் சமம்.

2. குறைந்த செறிவுடைய மூலக்கூறுகள் அதிக செறிவுடைய மூலக்கூறுகள் உள்ள பகுதிக்கு இடம்பெயர்வது பரவல் எனப்படும்.

விடை : தவறு

சரியான கூற்று : குறைந்த செறிவுடைய மூலக்கூறுகள் அதிக செறிவுடைய மூலக்கூறுகள் உள்ள பகுதிக்கு இடம்பெயர்வது சவ்வூடு பரவல் எனப்படும்.

3. மனிதன் ஒரு வெப்ப இரத்த பிராணி.

விடை : சரி

4. தசை மடிப்புகளால் ஆன குரல்பையானது காற்று நுழையும் போது அதிர்வடைந்து ஒலியை எழுப்புகிறது.

விடை : சரி

5. அக்குவஸ் திரவம் (முன் கண்ணறை திரவம்) கண்ணின் வடிவத்தைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

விடை : தவறு

சரியான கூற்று : விரியட்ஸ் திரவம் (பின் கண்ணறை திரவம்) கண்ணின் வடிவத்தைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

IV. பொருத்துக.

I சிதை மாற்றத்தின் உதாரணத்தைக் கொண்டு பொருத்துக.

1. கார்போஹைட்ரேட்CO2, நீர் மற்றும் வெப்பம்
2. குளுக்கோஸ்அமினோ அமிலம்
3. புரதம்குளுக்கோஸ்

விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ

II. வளர் மாற்றத்தின் உதாரணத்தைக் கொண்டு பொருத்துக.

1. குளுக்கோஸ்கொழுப்பு மற்றும் பிற ஸ்டீராய்டுகள்
2. அமினோ அமிலம்கிளைக்கோஜன் மற்றும் பிற சர்க்கரைகள்
3. கொழுப்பு அமிலம்நொதிகள், ஹார்மோன்கள் மற்றும் புரதங்கள்

விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ

V. சரியான முறையில் வரிசைப்படுத்துக.

திசுக்கள், உறுப்பு மண்டலம், உயிரினம், செல், உறுப்பு

விடை : செல்  திசுக்கள்  உறுப்பு  உறுப்பு மண்டலம்  உயிரினம்

VI. ஒரு வாக்கியங்களில் விடையளி.

1. செல் மாறுபாடைதல் என்றால் என்ன?

  • நமது உடலானது கருமுட்டை (சைகோட்) என்ற ஒற்றை செல்லிலிருந்தே உருவாக்கப்படுகிறது.
  • கருமுட்டையானது தொடர்ச்சியான பல மைட்டாசிஸ் பிளவுறுதல்களை அடைந்து வெவ்வேறு அளவு, வடிவம் மற்றும் உட்பொருள்களைக் கொண்ட திரள் செல்களாலான கருவை உருவாக்குகிறது.
  • கருச் செல்கள் படிப்படியாக அவற்றின் அமைப்பிலும், பணியிலும் மாற்றங்களை அடைகின்றன. இந்நிகழ்வுக்கு செல் மாறுபாடடைதல் என்று பெயர்.

2. வெவ்வேறு வகையான திசுக்களை வகைப்படுத்துக.

அமைப்பு மற்றும் பணியைப் பொறுத்து திசுக்கள் நான்கு வகைப்படும்

1. எபிதீலியல் (உறையீட்டு) திசுக்கள்

  • பாதுகாப்பிற்கு

2. தசை (சுருங்குதல்) திசுக்கள்

  • அசைவு மற்றும் இடப்பெயர்ச்சி

3. இணைப்புத் (தாங்குதல்) திசுக்கள்

  • உடலின் வெவ்வேறு அமைப்புகளை இணைத்தல்

4. நரம்புத் திசுக்கள்

  • நரம்புத் தூண்டல்களைக் கடத்துதல்

3. காற்று நுண்ணறைகளின் பணிகளைக் கூறுக.

  • நுரையீரல்களுள் காணப்படும் காற்று நுண்ணறைகள் காற்றை உள்ளிழுக்கும் போது ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு உடலை இயங்கச் செய்கின்றன.
  • இவை மிக நுண்ணியவையாக இருந்த போதிலும் நமது சுவாச மண்டலத்தின் செயல்மிகு அமைப்புகளாக அமைந்துள்ளன.
  • காற்று நுண்ணறைகள் ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடின் வாயுப் பரிமாற்றத்திற்கு உதவுகின்றன .

4. நுரையீரலில் காற்றானது உள்ளிழுக்கப்படும் மற்றும் வெளியேற்றப்படும் நிகழ்வின் பெயர் யாது?

காற்றை நுரையீரல்களினுள் எடுத்துக் கொள்ளும் நிகழ்வு உட்சுவாசம் எனப்படும்.

நுரையீரல்களிலிருந்து காற்றை வெளியேற்றும் நிகழ்வு வெளிச் சுவாசம் எனப்படும்.

5. ஊடுகலப்பு ஒத்தமைவான்கள் மற்றும் ஊடுகலப்பு ஒழுங்கமைவான்களை வேறுபடுத்துக.

ஊடுகலப்பு ஒத்தமைவான்கள்ஊடுகலப்பு ஒழுங்கமைவான்கள் 
உயிரினங்கள் சுற்றுச் சூழலுக்கேற்ப தங்கள் உடலின் ஊடுகலப்பு அடர்த்தியை மாற்றிக் கொள்வன ஆகும்.உயிரினங்கள் புறச் சூழலின் தன்மை எப்படி இருந்தாலும் உடல் செயலியல் நிகழ்வுகள் மூலம் தங்களது ஊடுபரவல் செறிவு தமது உட்புற ஊடுகலப்பு அடர்த்தியை நிலையான அளவுடன் பராமரித்துக் கொள்கின்றன.
எ.கா. முதுகு நாணற்றவை மற்றும் கடல் வாழ் உயிரினங்கள்எ.கா. நன்னீரில் வாழும் மீன்கள்

6. வளர்சிதை மாற்றம் வரையறு

உயிரினங்கள் தங்கள் வாழ்வை நிலைப்படுத்திக்கொள்ள நடத்தும் மொத்த வேதிவினைகள் வளர்சிதை மாற்றம் எனப்படும்

VII. குறுகிய விடையளி.

1. புரோகேரியாடிக் செல் வரையறு.

தெளிவான உட்கரு மற்றும் சவ்வினால் சூழப்பட்டுள்ள நுண்ணுறுப்புகளற்ற ஒரு செல் நுண்ணுயிரிகளின் புரோகேரியாட்டிக் செல் எனப்படும்

எ.கா. பாக்டீரியா

2. யூகேரியாட்டிக் செல் வரையறு.

மரபுப் பொருள்களைப் பெற்றுள்ள, தெளிவான உட்கருவைக் கொண்ட செல்களை உடைய உயிரினம் யூகேரியாட்டிக் செல் எனப்படும்

எ.கா. அமீபா

3. காற்றுள்ள மற்றும் காற்றில்லா சுவாசத்திற்கு இடையே உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.

ஊடுகலப்பு ஒத்தமைவான்கள்ஊடுகலப்பு ஒழுங்கமைவான்கள் 
1. ஆக்ஸிஜன் உள்ள சூழலில் நடைபெறுகிறதுஆக்ஸிஜன் இல்லாத சூழலில் நடைபெறுகிறது.
CO2 மற்றும் நீர் ஆகியவை விளை பொருட்களாக கிடைக்கின்றன.CO2 மற்றும் எத்தனால் அல்லது லாக்டிக் அமிலம் விளை பொருட்களாக கிடைக்கின்றன.
அனைத்து உயர்நிலை தாவரங்கள் மற்றும் விலங்குகளில் நடைபெறுகிறது.சில நுண்ணுயிரிகள் மற்றும் மனித தசைச் செல்களில் நடைபெறுகிறது.

4. எபிதீலியல் செல்களின் வெவ்வேறு வகைகளைக் கூறு.

  • தட்டை எபிதீலியம்
  • கனசதுர எபிதீலியம்
  • தூண் எபிதீலியம்
  • குறுயிழை எபிதீலியம்
  • சுரப்பி எபிதீலியம்

5. புகைப்படக் கருவியுடன் கண்ணை ஏன் ஒப்பிடுகிறோம்.

மனிதக் கண்ணானது ஒளியை ஒருங்கிணைத்தல், குவித்தல் மற்றும் பொருளின் பிம்பத்தை உருவாக்குவதற்காக ஒளியை லென்சு வழியே செலுத்துதல் ஆகிய பணிகளைச் செய்வதன் மூலம் புகைப்படக்கருவியுடன் ஒப்பிடப்படுகிறது.

6. தன்னிலை காத்தலை ஒழுங்குபடுத்த உதவும் உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்களைக் கூறு.

தன்னிலை காத்தலை ஒழுங்குபடுத்த உதவும் உறுப்புகள்

  • கல்லீரல்
  • சிறுநீரகம்
  • மூளை (ஹைபோதலாமஸ்)

தன்னிலை காத்தலை ஒழுங்குபடுத்த உதவும் உறுப்பு மண்டலங்கள்

  • தானியங்கு நரம்பு மண்டலம்
  • நாளமில்லாச் சுரப்பி மண்டலம்

VIII. விரிவான விடையளி

1. மனிதக் கண்ணின் உள்ளமைப்பை படம் வரைந்து பாகங்களைக் குறி.

2. சவ்வூடு பரவல் அழுத்தத்தை உதாரணத்துடன் விளக்குக.

நீர்த்த கரைசலில் இருந்து செறிவு மிக்க கரைசலுக்கு கரைப்பானின் மூலக்கூறுகள் அரை கடத்தி அல்லது தேர்வுக் கடத்து சவ்வின் வழியே இடப்பெயர்ச்சி அடையும் நிகழ்ச்சி சவ்வூடு பரவல் எனப்படும். சவ்வின் இரு புறமும் செறிவு சமநிலையை அடையும் வரை இவ்வாறு கரைப்பானின் மூலக்கூறுகள் செறிவு குறைந்த கரைசலில் இருந்து (கரைப்பான் அடர்த்தி அதிகமான கரைசல்) செறிவு மிக்க கரைசலுக்கு (கரைப்பான் அடர்த்தி குறைவான கரைசல்) நகர்கின்றன.
செல்லிற்கு உள்ளேயும், வெளியேயும் மூலக்கூறுகள் இடம் பெயர்வது செல்களைச் சூழ்ந்துள்ள கரைசலின் செறிவைப் பொறுத்ததாகும். இதனைப் பொறுத்து சவ்வூடு பரவலின் நிலையினை மூன்றாக வகைப்படுத்தலாம்.

1. ஒத்த செறிவு கரைசல் (isotomic);

இங்கு செல்லின் உட்புறக் கரைசலின் செறிவும் வெளிப்புறக் கரைசலின் செறிவும் ஒரே மாதிரியாக இருக்கும்.

2. குறை செறிவு கரைசல் (hypotomic):

இங்கு செல்லின் வெளியில் உள்ள கரைசலின் செறிவு உள்ளே உள்ள கரைசலின் செறிவை விட குறைவு. அதனால் வெளியிலிருந்து நீரானது, செல்லின் உள்ளே செல்கிறது.

3. மிகை செறிவு கரைசல் (Hypertomic):

இங்கு செல்லின் வெளியில் உள்ள கரைசலின் செறிவு உள்ளே உள்ள கரைசலின் செறிவை விட அதிகம். இதனால் நீரானது செல்லைவிட்டு வெளியேறுகிறது.

3. வளர்சிதை மாற்றத்தின் வகைகளை உதாரணத்துடன் விளக்குக.

உயிரினங்கள் தங்கள் வாழ்வை நிலைப்படுத்திக்கொள்ள நடத்தும் மொத்த வேதிவினைகள் வளர்சிதை மாற்றம் எனப்படும்

வளர்சிதை மாற்றம், வளர் மாற்றம் (பொருட்களை உருவாக்குதல்) மற்றும் சிதை மாற்றம் (பொருட்களை உடைத்தல்) ஆகிய நிகழ்ச்சிகளைக் கொண்டது.

பொதுவாக வளர்சிதை மாற்றம் என்ற சொல்லானது உணவுப் பொருட்களை உடைத்து ஆற்றலாக மாற்றும் நிகழ்ச்சி என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

வளர்மாற்றம் (Anabolism)

வளர்மாற்றம் என்பது உருவாக்குதல் மற்றும் சேமித்தலைக் குறிக்கிறது.

இது புதிய செல்களின் வளர்ச்சி, உடற் திசுக்களைப் பராமரித்தல் மற்றும் எதிர்காலத் தேவைக்காக ஆற்றலை சேமித்தல் ஆகியவற்றிற்குக் காரணமாகிறது.

வளர் மாற்றத்தின் போது கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பின் எளிய மூலக்கூறுகள் பெரிய, சிக்கலான மூலக்கூறுகளாக மாற்றப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக

  • குளுக்கோஸ் → கிளைக்கோஜன் பிற சர்க்கரைகள்
  • அமினோ அமிலங்கள் → நொதிகள், ஹார்மோன்கள் புரதங்கள்
  • கொழுப்பு அமிலங்கள் → கொழுப்பு மற்றும் பிற ஸ்டீராய்டுகள்

சிதை மாற்றம் (catabolism)

சிதை மாற்றம் என்பது செல்லின் செயல்பாடுகளுக்குத் தேவையான ஆற்றலை உருவாக்கும் நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சியின் போது பெரிய மூலக்கூறுகள் (பொதுவாக கார்போ ஹைட்ரேட்கள் மற்றும் கொழுப்புகள்) செல்களால் சிதைக்கப்பட்டு ஆற்றல் வெளிவிடப்படுகிறது.

இவ்வாறு வெளிப்படுத்தப்படும் ஆற்றலானது வளர் மாற்றத்திற்கான எரிபொருளாகவும், உடலை வெப்பப்படுத்தவும், தசை சுருக்கத்திற்கும் மற்றும் உடல் இயக்கத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றது.

சிக்கலான வேதி மூலக்கூறுகள் மிக எளிய மூலக்கூறுகளாக சிதைக்கப்படுவதால் கழிவுப் பொருள்கள் உருவாகி அவை தோல், சிறு நீரகங்கள் மற்றும் நுரையீரல்கள் வழியாக வெளியேற்றப்படுகின்றன.

சிதை மாற்றத்திற்கு கீழ்கண்டவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.

  • கார்போஹைட்ரேட் → குளுக்கோஸ்
  • குளுக்கோஸ் → CO2 + நீர் மற்றும் வெப்பம்
  • புரதம் → அமினோ அமிலம்

4. சுவாச செயலியல் நிகழ்வுகளை விளக்குக.

உட்சுவாசம் (inspiration)

  • காற்றை நுரையீரல்களினுள் எடுத்துக் கொள்ளும் நிகழ்வு உட்சுவாசம் எனப்படும்.
  • உட்சுவாசத்தின் போது மார்பெலும்பு மேல் நோக்கியும், வெளிநோக்கியும் தள்ளப்படுவதோடு, உதரவிதானம் கீழ்நோக்கியும் இழுக்கப்படுகிறது.
  • இதனால் மார்பறையின் கொள்ளளவு அதிகரித்து, அழுத்தம் குறைகிறது. நுரையீரல்களினுள் அழுத்தம் குறைந்து வெளிக்காற்றானது நுரையீரல்களினுள் நுழைகிறது.
  • இங்கு காற்றுக்கும் இரத்தத்திற்கும் இடையே வாயுப் பரிமாற்றம் நிகழ்கிறது.

வெளிச் சுவாசம் (Expiration)

  • நுரையீரல்களிலிருந்து காற்றை வெளியேற்றும் நிகழ்வு வெளிச் சுவாசம் எனப்படும். வெளிச் சுவாசத்தின் போது நுரையீரல்கள் காற்றை அதிக விசையுடன் வெளித்தள்ளுகின்றன.
  • விலா எலும்பிடைத் தசைகள், மீட்சியடைந்து, மார்பறையின் சுவர் அதன் பழைய நிலைக்குத் திரும்புகிறது.
  • உதரவிதானமும், மீட்சியடைந்து மார்பறையில் மேல் நோக்கி நகர்கின்றது. இதன் காரணமாக மார்பறையின் அழுத்தம் புறச் சூழலை ஒப்பிடும் போது அதிகரிக்கிறது.
  • மார்பறைக்கும் வளிமண்டலத்திக்கும் இடையே காணப்படும் இந்த அழுத்த வேறுபாட்டால் காற்றானது விசையுடன் வெளியேறுகிறது.
  • நுரையீரல்களிலிருந்து காற்று வெளியேற்றப்படும் இந்நிகழ்வில் தசைகள் ஏதும் பங்கு பெறாததால் இது செயலற்ற நிகழ்வாகக் கருதப்படுகிறது.

காற்று நுண்ணறைகளினுள் வாயுப் பரிமாற்றம்

  • காற்று நுண்ணறைகளினுள் உள்ளிழுக்கப்படும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு அங்குள்ள இரத்தக் குழல்களினுள் உள்ள ஆக்ஸிஜனின் அளவை விட அதிகம்.
  • இதனால் எளிய பரவல் மூலம் ஆக்ஸிஜன் இரத்தத்தினுள் நுழைகிறது.
  • இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஆக்ஸிஜனுடன் இணைந்து ஆக்ஸிஹீமோகுளோபின் ஆக மாறுகிறது.
  • ஆக்ஸிஜனை சுமந்து கொண்டு இரத்தமானது இரத்தக் குழல்கள் வழியே இதயத்தை அடைகிறது.
  • இதயம் சுருங்கி இந்த ஆக்சிஜன் உள்ள ரத்தத்தை உடலின் அனைத்து திசுக்களுக்கும் அனுப்புகிறது. திசுக்கள் வெளியேற்றும் கார்பன் டைஆக்ஸைடு இரத்தத்தின் வழியே காற்று நுண்ணறைகளுக்கு எடுத்து வரப்படுகிறது.
  • இரத்தத்திலிருந்து பரவல் முறையில் கார்பன் டைஆக்ஸைடு காற்று நுண்ணறைகளில் நுழைந்து வெளிச் சுவாசத்தின் போது உடலை விட்டு வெளியேற்றப்படுகிறது.

5. கண்ணின் அமைப்பைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியை கவனமாக  வாசித்து அதிலுள்ள பிழைகளை நீக்கி எழுது.

நமது கண்ணானது உருளை வடிவமுடையது. விழிக்கோளமானது ஐந்து படலங்களைக் கொண்டது. இவற்றின் வெளிப்புறப்படலம் கார்னியா எனப்படும். கண்ணின் உட்புறப் படலத்திற்கு ஸ்கிளிரா எனப்படும். விழிக் கோளமானது இருபுறக் குழி லென்சு மற்றும் மீளும் தன்மையுடைய நரம்புகளைக் கொண்டது. கண்பாவையானது லென்சை கருவிழியுடன், (ஐரிஸ்) இணைக்கிறது. ஐரிஸ்சில் கூம்பு மற்றும் குச்சி செல்கள் காணப்படுகிறது. அக்வியஸ் திரவமானது, லென்சிற்கும் ரெட்டினாவிற்கும் இடையில் உள்ளது. விட்ரஸ் திரவமானது கார்னியாவிற்கும் லென்சிற்கும் இடையில் உள்ளது. விழித்திரை (Retina) யானது ஒளிக்கற்றைகளை நரம்புத் தூண்டலாக மாற்றி காதுகளுக்கு அனுப்புகிறது.

விடை :

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image

நமது கண்ணானது கோள வடிவமுடையது. விழிக்கோளமானது மூன்று படலங்களைக் கொண்டது. இவற்றின் வெளிப்புறப்படலம் கார்னியா மற்றும் விழித்திரை எனப்படும். கண்ணின் உட்புறப் படலத்திற்கு கார்னியா எனப்படும். விழிக் கோளமானது இருகுவிய லென்சு மற்றும் மீளும் தன்மையுடைய நரம்புகளைக் கொண்டது. உடலம் லென்சை கருவிழியுடன், (ஐரிஸ்) இணைக்கிறது. விழித்திரையில் கூம்பு மற்றும் குச்சி செல்கள் காணப்படுகிறது. அக்வியஸ் திரவமானது, லென்சிற்கும் கார்னியாவிற்கும் இடையில் உள்ளது. விட்ரஸ் திரவமானது கார்னியாவிற்கும் கண்ணின் உட்பகுதி முழுவதிலும் உள்ளது. விழித்திரை (Retina) யானது ஒளிக்கற்றைகளை நரம்புத் தூண்டலாக மாற்றி காதுகளுக்கு அனுப்புகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *