Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 1 9

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 1 9

தமிழ் : பருவம் 1 இயல் 9 : மாட்டு வண்டியிலே….

9. மாட்டு வண்டியிலே….

இளமதியும் மணவாளனும் தங்களது தாத்தாவுடன் வார விடுமுறைக்கு அத்தை வீட்டிற்குச் செல்லத் திட்டமிட்டனர். சலங்கை கட்டிய மாடுகளை வண்டியில் பூட்டினார் தாத்தா. வண்டியின் மீது வைக்கோலைப் பரப்பி மேலே வெள்ளை வேட்டியினை விரித்தார். துள்ளிக் குதித்தபடி ஏறி அமர்ந்தனர் இருபிள்ளைகளும்.

‘ஜல் ஜல்’ எனச் சத்தமிட்டவாறு வண்டி கிராமத்துச் சாலையில் ஓடத் தொடங்கியது. சாலையின் இருமருங்கிலும் பசுமை போர்த்திய வயல்வெளிகள். தாத்தா மாடுகளை விரட்டியபடி இனிமையாகப் பாடத் தொடங்கினார்.

கழுத்துமணி தாளம் போட 

சக்கரமும் சுழன்றோட 

உச்சி மண்டையிலே 

வெயில் காயுமுன்னே

குண்டு குழிபார்த்து 

ஊர் போய்ச் சேர வேணும்

ஊர் போய்ச் சேர வேணும் 

வா வா என் செல்லக்கண்ணு…………

புதிர்கள், துணுக்குகளுக்கு விடை எழுதுதல்

பாடினது போதும். ஏதாவது கதை சொல்லுங்க தாத்தா என்றனர் பிள்ளைகள். சொல்லிட்டாப் போச்சி, கதையென்ன புதிர் போடறேனே. சொல்லுங்க பார்க்கலாம் 

தாத்தா: மூன்றாம் எழுத்து உடலின் உறுப்பு, முதலும் மூன்றும் நட்புக்கு எதிரி, ஒன்றும் இரண்டும் நிறைய தரும், மூன்றும் சேர்ந்தால் உட்கார உதவும் அது என்ன? 

இளமதி: ம்………… யோசித்துவிட்டு, ‘தெரியலை’ தாத்தா 

தாத்தா: யோசிங்க……… யோசிங்க……… நல்லா யோசிங்க ஓரெழுத்து உறுப்பு எது? இளமதி நீ சொல்லு

இளமதி: ‘கை’ தாத்தா 

தாத்தா: கொஞ்சமாயிருந்தா சில ன்னு சொல்லுவோம் நிறைய இருந்தா என்ன சொல்லுவோம்? 

இளமதி: ‘பல’ தாத்தா ஆங்………

மணவாளன்: எனக்குப் பதில் கிடைச்சிருச்சி…. ‘பலகை’ – இது சரியா தாத்தா……… 

தாத்தா: நல்லது மிகச்சரியான பதில், இப்ப இளமதியைக் கேட்கிறேன்…… ஆறையும் ஐந்தையும் கூட்டினால் பணம் வராது…… ஆனா பழம் வரும்  அது என்ன?

இளமதி: சற்று யோசித்து……… ஆங்……… கண்டுபிடிச்சிட்டேன்……… ஆரஞ்சுப்பழம் தானே………

தாத்தா: சரியா சொல்லிட்டியே, செல்லக்குட்டி 

மணவாளன்: சரி தாத்தா……… இப்ப நாங்க கேட்கிறோம்……… நீங்க சொல்லுங்க, பிறக்கும்போது நிறமும் சுவையும் இல்லாத சுந்தரன் ஊருக்கு ஊர் நிறம் மாறிச் சுவை மாறுவான் அவன் யார்? 

தாத்தா: இதென்ன பிரமாதம்……… எனக்குத்தான் தெரியுமே……… 

இளமதி: பேச்சை மாத்தாதீங்க தாத்தா பதிலைச் சொல்லுங்க. சீக்கிரம்….. 

தாத்தா: ம் ம் ம்……… எல்லாரோட தாகத்தையும் தீர்க்கும் தண்ணீர் தானே 

மணவாளன்: ஆமா! ஆமா! சரியா சொல்லிட்டிங்களே! 

இளமதி: தாத்தா, அத்தை வீடு வந்துவிட்டது.

தாத்தா: சரி, சற்றுப் பொறுங்கள் வண்டியை ஓரமாக நிறுத்துகிறேன். அனைவரும் வண்டியைவிட்டு இறங்கி, ஆவலுடன் வீட்டை நோக்கிச் சென்றனர்.

மொழியோடு விளையாடு

புதிர்களையும் விடைகளையும் எழுதிய அட்டைகளை வகுப்பறையின் நடுவில் வைக்க வேண்டும். மாணவர்களை அழைத்து ஒவ்வொரு மாணவனையும் ஓர் அட்டையை எடுக்கச் சொல்ல வேண்டும். புதிர் அட்டையை வைத்திருக்கும் மாணவனோடு அப்புதிருக்கான விடையை வைத்திருக்கும் மாணவன் இணைந்து நிற்க வேண்டும். அவர்கள் இருவரும் அதற்கான விளக்கத்தை அளிக்கவேண்டும். இருவரும் இச்செயலைச் செய்து முடிக்கும் கால அளவை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த இருவர் இவ்விளையாட்டை விளையாடுவர். எவர் இருவர் குறைவான கால அளவில் இணை சேர்ந்தனரோ அவர்களே வெற்றி பெற்றவராவர். அனைத்து மாணவர்களையும் விளையாட்டில் பங்கு பெறச்செய்ய வேண்டும்.

பயிற்சி

வாங்க பேசலாம்

1. மாட்டு வண்டியில் அல்லது வேறு ஏதேனும் வாகனத்தில் வெளியூர் சென்றிருக்கிறாயா? அப்படி நீ சென்று வந்த அனுபவம் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.

பாஸ்கர் : நண்பர்களே! நீங்கள் மாட்டு வண்டிப் பயணம் சென்று உள்ளீர்களா?

மதன் : நாங்கள் இதுவரை சென்றதில்லை.

பாஸ்கர் : எங்கள் அப்பா மாட்டு வண்டி என்று சொல்லப்படும் கட்டை வண்டி வைத்துள்ளார்.

செல்வா : இந்த மாட்டு வண்டியில் என்னென்ன பயன்கள் உண்டு?

சுரேஷ் : எங்கள் அப்பாவும் மாட்டு வண்டி வைத்திருக்கிறார். விவசாய பொருட்களையும், கல், மண், கம்புகள் கொண்டு செல்லவும் பயன்படுத்துவார் என் அப்பா.

பட்டு ராஜா : மாட்டு வண்டி இயங்க என்னென்ன வேண்டும்?

பாஸ்கர் : கடையாணி, அல்லைப்படல், குடம், நுகத்தடி, வட்டை ,சவாரித்தப்பை, பட்டா, இருசு, ஏர்க்கால், மூக்கேர், ஏர்க்கால் சட்டம், பூட்டாங்கயிறு,  பூட்டாங்குச்சி,  முனைக்குச்சி,  கொலுப்பலகை போன்றவை  மாட்டுவண்டி  இயங்க  தேவை.

இசக்கி : எங்கள் ஊரான அன்னவாசலில் கோவில் கொடைவிழாவில் இரவு கூத்து பார்க்க என் அப்பா, நான், அம்மா, தங்கை ஆகியோர் சென்றோம். ஜல், ஜல் என்று சலங்கைகள் ஆட மாட்டு வண்டியில் சென்றது ஒரு  சுகமான  அனுபவம். 

கிஷோர் : கயிற்றின் உதவியுடன் மாடுகள் வண்டியுடன் பிணைக்கப்பட்டு இருக்கும். இப்போது பெரும்பாலான மாட்டு வண்டிகள் உருளிப் பட்டைகளால் ஆனவை. பயணம் சுகமாக இருக்க எங்கள் வீட்டு மாட்டு வண்டியில் வைக்கோலை வண்டியில் நிரப்பி அதன் மேல் அமர்ந்து பயணிப்போம். 

கார்த்திக் : எங்கள் வீட்டு மாட்டு வண்டியில் காங்கேயம் காளைகள் பூட்டப்பட்டு இருக்கும்.

மகிபாலன் : என் அப்பா மாட்டுவண்டியை  நின்று கொண்டே ஓட்டுவார். சில நேரம் என் அண்ணனும் மாட்டு வண்டி ஓட்டுவான்.

செந்தில் : வயல்வெளிகளுக்கு இடையே மாட்டுவண்டிப் பயணம் செய்வோம்.  இயற்கையோடு இணைவோம்.

படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. தண்ணீர் இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது ____________.

அ) தண் + ணீர்    

ஆ) தண் + நீர்    

இ) தண்மை + நீர்     

ஈ) தன் + நீர்

விடை : இ) தண்மை + நீர்

2. மேலே இச்சொல்லின் எதிர்ச்சொல் ______________.

அ) உயரே      

ஆ) நடுவே                  

இ) கீழே                    

ஈ) உச்சியிலே

விடை : இ) கீழே

3. வயல் + வெளிகள் – இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________. 

அ) வயல்வெளிகள்

ஆ) வயவெளிகள் 

இ) வயற்வெளிகள்                                                                 

ஈ) வயல்வெளிகள்

விடை : அ) வயல்வெளிகள்

4. கதை + என்ன – இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________.

அ) கதைஎன்ன    

ஆ) கதையன்ன

இ) கதையென்ன      

ஈ) கதயென்ன

விடை : இ) கதையென்ன 

5. வெயில் இச்சொல்லின் எதிர்ச்சொல் ___________.

 அ) நிழல்     

ஆ) பகல்        

இ) வெப்பம்

ஈ) இருள்

விடை : அ) நிழல்

இணைக்கலாமா?

சொல் கோபுரம் அமைப்போம்

இதனைக் ‘கரம்’ என்றும் கூறலாம் [1] கை

பசு கொடுக்கும் பானம் [2] பால்                                                           

ஆறுகள் சென்று சேருமிடம் [3] கடல்

வண்டியில் சக்கரம் கழன்று விழாமல் பாதுகாப்பது [4] அச்சாணி

பாலைவனக்கப்பல் [5] ஒட்டகம்

பொருத்தமான படங்களை மரத்திலிருந்து பறித்துப் பொருத்தலாமா!

1. எட்டு கைகள் விரிந்தால் ஒற்றைக்கால் தெரியும். அது என்ன?

விடை : குடை 

2. அடிமலர்ந்து, நுனி மலராத பூ என்ன பூ?

விடை : வாழைப்பூ 

3. கையிலே அடங்கும் பிள்ளை, கதை நூறு சொல்லும் பிள்ளை. அது என்ன?

விடை : புத்தகம் 

4. அன்றாடம் மலரும் அனைவரையும் கவரும். அது என்ன?

விடை : கோலம் 

5. என்னோடு இருக்கும் சிறுமி, எனக்குத் தெரியாது ஆனால் உனக்கு தெரியும். அது என்ன?

விடை : கண் 

6. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது. அது என்ன?

விடை : வெடி 

7. அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு. அது என்ன?

விடை : நெற்கதிர் 

8. ஒளி கொடுக்கும் விளக்கல்ல, வெப்பம் தரும் நெருப்பல்ல, பளபளக்கும் தங்கம் அல்ல. அது என்ன?

விடை : சூரியன்

மொழியோடு விளையாடு

புதிர்களையும் விடைகளையும் எழுதிய அட்டைகளை வகுப்பறையின் நடுவில் வைக்க வேண்டும். மாணவர்களை அழைத்து ஒவ்வொரு மாணவனையும் ஓர் அட்டையை எடுக்கச் சொல்ல வேண்டும். புதிர் அட்டையை வைத்திருக்கும் மாணவனோடு அப்புதிருக்கான விடையை வைத்திருக்கும் மாணவன் இணைந்து நிற்க வேண்டும். அவர்கள் இருவரும் அதற்கான விளக்கத்தை அளிக்கவேண்டும். இருவரும் இச்செயலைச் செய்து முடிக்கும் கால அளவை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த இருவர் இவ்விளையாட்டை விளையாடுவர். எவர் இருவர் குறைவான கால அளவில் இணை சேர்ந்தனரோ அவர்களே வெற்றி பெற்றவராவர். அனைத்து மாணவர்களையும் விளையாட்டில் பங்கு பெறச்செய்ய வேண்டும்.

செயல் திட்டம்

வீட்டில் உள்ள தாத்தா பாட்டியிடம் மூன்று புதிர்களைக் கேட்டறிந்து குறிப்பேட்டில் எழுதி வருக.

புதிர்கள்

1. கூரை வீட்டை பிரித்தால் ஓட்டு வீடு. ஓட்டு வீட்டுக்குள் வெள்ளை மாளிகை, வெள்ளை மாளிகை நடுவில் ஓர் குளம் நான் யார்?

விடை : தேங்காய் 

2. சாப்பிட எதை குடித்தாலும் சாப்பிடுவேன். ஆனால் நீரைக் குடிக்க தந்தால் இறப்பேன் நான் யார்?

 விடை : நெருப்பு  

3. ஓயாமல் சத்தம் போடுவேன். நான் இயந்திரம் அல்ல. உருண்டு உருண்டு வருவேன். பந்தும் இல்லை நான் யார்?

விடை : கடல்

அகரமுதலி

1. அறிஞர் – அறிவில் சிறந்தவர்

2. ஆன்றோர் – பெரியோர்

3. இரவாது – பிறரிடம் கேட்டுப் பெறாது

4. ஈதல் – கொடுத்தல்

5. உரைத்தல் – சொல்லுதல்

6. ஒலி – சத்தம்

7 .ஒளி வெளிச்சம்

8. கதிரவன் – சூரியன்

9. களிப்பு – மகிழ்ச்சி

10. காலை – சூரியன் உதிக்கும் நேரம்

11. காளை – எருது

12. கூட்டம் – கும்பல்

13 .சேகரித்தல் – ஒன்று திரட்டுதல்

14. சேர்த்தல் – இணைத்தல்

15. தகுதி – தரம்

16. தெளிவாக – விளக்கமாக

17. நித்திலம் – முத்து

18. நூல் – புத்தகம்

19. நேர்மை – உண்மை

20. பகைவர்கள் – எதிரிகள்

21. பணி – வேலை

22. பல்லி – ஒரு சிறிய உயிரி

23. பள்ளி – கல்வி கற்கும் இடம்

24. மிக்காரை – உயர்ந்தோரை

25. முயற்சி – ஊக்கம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *